நீங்கள் உங்கள் வெப் பிரவுசராக Google Chrome-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஆன்லைனில் நேரத்தைச் சேமிக்கும் குறுக்குவழி ஒன்று உள்ளது மற்றும் பயன்படுத்த எளிதானது. அது தான் கூகுள் க்ரோம் ஆட்டோஃபில் (Google Chrome Autofill). பாஸ்வேர்ட்கள் மற்றும் நீங்கள் பாதுகாப்பாகச் சேமித்துள்ள முகவரிகள் அல்லது கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற பிற ஃபார்ம் டேட்டாவை நிரப்ப இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். குறிப்பாக இது உங்கள் Google அக்கவுண்டிற்கான பில்ட்-இன் பாஸ்வேர்ட் மேனேஜராக இருப்பதால். ஆண்ட்ராய்டு டிவைஸ்களிலும் ஆட்டோ ஃபில் அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
இணையதளங்களில் நீங்கள் பொதுவாகப் பயன்படுத்தும் விவரங்களை தானாகவே நிரப்புவதன் மூலம் நேரத்தை சேமிக்க உதவுகிறது இந்த அம்சம். இதன் மூலம் உங்கள் பெயர், முகவரி மற்றும் பேமென்ட் விவரங்களை உங்கள் ஷாப்பிங் கார்ட்ஸில் நிரப்பலாம். அதே நேரம் உங்கள் யூஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டை தானாக நிரப்புவதன் மூலம் உங்களுக்கு பிடித்த வெப்சைட்களில் விரைவாக உள்நுழைய அனுமதிக்கிறது. இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இணையதளங்களில் உள்நுழையும்போது கடவுச்சொற்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டிய தேவையை ஏற்படுத்தாது.
எனினும் துரதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் உங்கள் பிரைவசியை ஆபத்திலும் ஆழ்த்தலாம். உங்களது Chrome-ல் பேமென்ட்ஸ் விவரங்களை (உங்கள் கிரெடிட் கார்டு தகவல் போன்றவை) சேமிப்பது உங்கள் சிஸ்டம் அல்லது ஸ்மார்ட் ஃபோன் போன்ற டிவைஸ் ஹேக் செய்யப்பட்டால் ஆபத்தாக முடியலாம். டெஸ்க்டாப் மற்றும் மொபைலில் ஃபார்ம்கள் மற்றும் வெப்சைட்களுக்கான Google Chrome-ன் ஆட்டோ ஃபில் ஆப்ஷனை நீங்கள் டிஸேபிள் செய்யலாம். இதை எப்படி செய்யலாம் என்பதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே...
குரோமில் ஆட்டோ ஃபில் ஆப்ஷனை டர்ன் ஆஃப் செய்வதற்கான வழிமுறை:
கூகுள் குரோமில் Autofill என்ற ஆப்ஷன் தானாகவே எனேபிள் செய்யப்பட்டு இருக்கும். ஆனால் வெளிப்படையான உங்கள் தனியுரிமை காரணங்களுக்காக நீங்கள் இந்த செட்டிங்கை மேனுவலாகவே மாற்றி கொள்ளலாம்.
* ஸ்கிரீன் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று டாட்களை க்ளிக் செய்வதன் மூலம் Chrome-ன் மெனு ஐகானில் நுழையவும்.
Also Read : ஒரு போன் கால் மூலம் WhatsApp அக்கவுண்ட் திருடப்படுவது எப்படி.? இதிலிருந்து தப்பிக்கும் வழிகள்!
* Autofill செக்ஷ்னில் நீங்கள் ஆட்டோ ஃபில்லை டிஸேபிள் செய்ய விரும்பும் பகுதியை எக்ஸ்பேன்ட் செய்யவும்.
* ஆட்டோ ஃபில் செட்டிங் நீங்கள் பார்க்கும் போது ON-ல் இருந்தால் அதை OFF-ற்கு மாற்றவும். இதன் பிறகு உங்கள் சிஸ்டம் அல்லது டிவைஸ் நீங்கள் செய்த இந்த மாற்றத்தை தானே சேவ் செய்து விடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google Chrome, Technology