இந்த ஆட்டோஃபில் சில சமயங்களில் உபயோகமாக இருந்தாலும், பல சமயங்களில் நம்முடைய பொறுமையை சோதிக்கும். இந்த ஆட்டோஃபில் பலருக்கு எரிச்சல் ஊட்டும் விதத்தில் இருக்கிறது என்பதை விட நம்முடைய டேட்டாக்கள் பாதுகாப்பாக இல்லை என்பதற்கான ஒரு அடையாளம் என்றும் கூறலாம். ஒவ்வொரு முறையும் டைப் செய்ய சோம்பேறித்தனம் ஆகாமல் ஆட்டோஃபில் செயல்பாட்டை தவிர்ப்பது பாதுகாப்பானது.
சரி இந்த ஆட்டோஃபில்-லை செயல்படாமல் செய்வது எப்படி?
நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரை பயன்படுத்துபவராக இருந்தால் முதலில் உங்கள் பிரவுசரை அப்டேட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்டேட் செய்த பிரவுசரில் ஸ்கிரீன் வலது ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதில் இருக்கும் செட்டிங்ஸ்-ஐ தேர்வு செய்யவும்.
செட்டிங்ஸ் திரையின் இடது பக்கத்தில் ஆட்டோஃபில் என்ற ஒரு தேர்வு இருக்கும். அந்த ஆட்டோஃபில்லில் எந்தெந்த தளங்கள் ஆட்டோஃபில்லை பயன்படுத்துகின்றன என்ற பட்டியல் இருக்கும். அந்த தளங்களில் எவற்றிற்கெல்லாம் ஆட்டோஃபில்லை நீங்கள் ஆஃப் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவற்றை ஆஃப் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இப்படி செய்தால் இனிமேல் ஆட்டோஃபில் உங்களை தொல்லை செய்யாது. ஆனால், இதற்கு முன்னர் நீங்கள் செலுத்திய டேட்டா கூகுள் சர்வரில் அப்படியே இருக்கும். அவற்றை நீக்க என்ன செய்யலாம்?
திரையின் வலது ஓரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து ஹிஸ்டரி என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் கிளியர் பிரவுசிங் டேட்டா என்பதை தேர்வு செய்து Advanced Tab-ல் ஆல்டைம் என்பதை தேர்வு செய்யவும். இப்படி செய்யும் பொழுது Autofill Form Data என்பது off-ல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
பின்னர் கிளியர் டேட்டா கொடுத்தால் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள உங்கள் டேட்டாக்கள் சர்வரில் இருந்து நீக்கப்படும். Microsoft Edge பயனாளர்கள் உங்கள் பிரவுசரை திறந்து அதன் வலது ஓரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் செட்டிங்ஸில் உள்ள Profiles என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Your Profile என்பதில் இருக்கும் Toggle off Password, Payment info போன்ற நீங்கள் ஆட்டோஃபில் செய்ய விருப்பப்படாத தேர்வுகளை ஆஃப் செய்து கொள்ளலாம். இதுவரை சேகரிக்கப்பட்ட டேட்டாவை நீக்க அதே செட்டிங்ஸ் சென்று Privacy search and Services என்ற தேர்வில் கிளியர் பிரவுசிங் டேட்டா என்பதை செலக்ட் செய்யவும். அதில் Choose what to clear என்பதை கிளிக் செய்து டைம் ரேஞ்சில் ஆல்டைம் என்பதை தேர்வு செய்யவும்.
Also Read : ரூ.3000க்கு குளுகுளு ஏசி.. பட்ஜெட் விலையில் வெயிலை சமாளிக்க சூப்பர் AC.!
பின்னர் Autofill Form Data என்பதை Check-off செய்துவிட்டு கிளியர் நவ் கொடுத்தால் உங்கள் தகவல்கள் நீக்கப்படும். இதே போல Firefox Browser பயன்படுத்துபவர்கள் அதன் வலது ஓரத்தில் இருக்கும் மூன்று கோடுகளை கிளிக் செய்து செட்டிங்ஸ்-ல் உள்ள Privacy and Security என்பதை தேர்வு செய்யவும். அதில் உள்ள Forms and Autofill என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் எவற்றை ஆட்டோஃபில் செய்யப்படாமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை Uncheck செய்து Disable செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் டேட்டாக்களை நீக்க அதே செட்டிங்ஸ்-ல் Privacy and Security-ல் உள்ள Logins and Password என்பதில் உள்ள Ask to save Logins and Passwords for website என்பதை Uncheck செய்யவும். பின்னர் Saved Login என்பதற்குள் சென்று நீங்கள் எவற்றை நீக்க நினைக்கிறீர்களோ அவற்றை Remove என்பதனை கிளிக் செய்து நீக்கிக் கொள்ளலாம்.
இதே வழிமுறையை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களிலும் ஆட்டோஃபில்-ஐ நீக்கலாம். ஆண்ட்ராய்டு போனின் செட்டிங்ஸ் கணினியில் இருப்பதைவிட மாறுபட்டு இருக்கும் என்பதால் சில கூடுதல் ஸ்டெப்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டி இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Google Chrome, Smartphone