முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / உங்கள் ஃபோனில் Search History-யை டெலீட் செய்வது எப்படி?

உங்கள் ஃபோனில் Search History-யை டெலீட் செய்வது எப்படி?

காட்சி படம்

காட்சி படம்

How To Delete Search History | இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் பிரைவஸி பாதுகாப்பிற்கு அபாயங்கள் அதிகரித்து வருகின்றன.

இணையத்தில் எதுவுமே பாதுகாப்பானது அல்ல. டிஜிட்டல் உலகில் நம்முடைய சுய விவரங்களை எடுத்து, டார்க் வெப் உலகிற்கு எப்படி விற்பனை செய்கின்றனர் என்ற செய்தியை நாள்தோறும் நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் பிரைவேஸி பாதுகாப்பிற்கு அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், ஆன்லைனில் நம்மை தற்காத்துக் கொள்ள பல வழிமுறைகள் இருக்கின்றன.

அந்த வகையில், நீங்கள் உங்களது பிரவுஸரை மிகுந்த பாதுகாப்புடன் அணுக வேண்டும். பெரும்பாலான வெப் பிரவுஸர்களில் உங்கள் தகவல்களை நீண்ட காலத்திற்கு கண்டு கொள்ளாமல் விட்டு விட்டீர்கள் என்றால், பிற இணையதளங்களில் லாகின் செய்யும்போது சிக்கல் வரக் கூடும்.

உலக அளவில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுளில், நீங்கள் சர்ச் செய்யும் அனைத்து விவரங்களும் சேமிக்கப்படுகின்றன. கூகுள் தனது பயனாளர்களின் தகவல்களை உளவு பார்க்கிறது என்றும், உங்கள் தரவுகளை சேகரித்து மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விடுகிறது என்றும் அவ்வபோது செய்திகள் வெளிவருகின்றன.

இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் சர்ச் ஹிஸ்டரி, கேச்சே ஹிஸ்டரி ஆகியவற்றையும், கூகிஸ்களையும் நீங்கள் அவ்வபோது டெலீட் செய்ய வேண்டும். அதற்கு பின்வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்.

also read : வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தும் அம்சம் அறிமுகம்!

ஐஃபோன்களில் ஹிஸ்டரி டெலீட் செய்வது எப்படி?

  • கூகுளில் மை ஆக்டிவிட்டி என்ற ஆப்சனுக்கு செல்லவும்.
  • இங்கு உங்களது அனைத்து ஆக்டிவிட்டிகளும் காண்பிக்கும். அதில், ஆக்டிவிட்டி மீது டெலீட் என்பதை கிளிக் செய்யவும்.
  • ஆல் டைம் என்பதன் மீது டேப் செய்யவும்.
  • இப்போது நெக்ஸ்ட் கொடுத்து, டெலீட் என்பதன் மீது டேப் செய்யவும். இப்போது, ஒரே முயற்சியில் உங்கள் சேர்ச் ஹிஸ்டரி முழுமையாக டெலீட் செய்யப்படும். நீங்கள் குறிப்பிட்ட ஆக்டிவிட்டிகளை தனிப்பட்ட முறையில் டெலீட் செய்ய இயலும் அல்லது ஆட்டோமேட்டிக் டெலீஷன் ஆப்சனையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஆடோமேடிக் டெலீஷன் ஆப்சனுக்கு மேனேஜ் யுவர் அக்கவுண்ட் > டேட்டா & பிரைவேஸி > ஹிஸ்டரி செட்டிங்க்ஸ் > ஆடோ டெலீஷன் ? நெக்ஸ்ட் ? கன்ஃபார்ம் என கொடுக்கவும்.

also read : அதிகரித்து வரும் ஆன்லைன் வங்கி மோசடிகள்: பாதுகாப்பாக இருப்பது எப்படி?

ஆண்டிராய்ட் ஃபோன்களில் ஹிஸ்டரி டெலீட் செய்வது எப்படி

  • குரோம் ஆப் ஓப்பன் செய்யுங்கள்.
  • இதில் உள்ள 3 டாட்ஸ் மீது டேப் செய்து, ஹிஸ்டரி என்பதை தேர்வு செய்யவும்.
  • கிளியர் பிரவுஸிங் டேட்டா என்பதை டேப் செய்யவும்.
  • நீங்கள் எந்த நாளில் இருந்து எது வரையில் டேட்டாவை கிளியர் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம். அனைத்தையும் டெலீட் செய்ய ஆல் டைம் மீது டேப் செய்யவும்.
  • பிரவுஸிங் ஹிஸ்டரியை பார்த்து, நீங்கள் வேறு ஏதேனும் டேட்டாக்களை டெலீட் செய்ய வேண்டியுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  • இறுதியாக கிளீயர் டேட்டா என்பதை டேப் செய்யவும்.

First published:

Tags: Google, Smart Phone