Home /News /technology /

மொபைல் தொலைந்து விட்டதா.. UPI பேமெண்ட்ஸை செயலிழக்க செய்வது எப்படி?

மொபைல் தொலைந்து விட்டதா.. UPI பேமெண்ட்ஸை செயலிழக்க செய்வது எப்படி?

மொபைல் தொலைந்து விட்டதா.. இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளிலிருந்து UPI பேமெண்ட்ஸை செயலிழக்க செய்வது எப்படி?

மொபைல் தொலைந்து விட்டதா.. இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளிலிருந்து UPI பேமெண்ட்ஸை செயலிழக்க செய்வது எப்படி?

UPI-ஐ பயன்படுத்தி BHIM மட்டுமின்றி ஃபோன்பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட பல ஆப்கள் மூலம் மக்கள் எளிதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அபரிவித வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் பணம் பெறுவது, கொடுப்பது மற்றும் மொபைல் ரீசார்ஜ் முதல் வீட்டு வாடகை வரை பெரும்பாலும் யுபிஐ பேமெண்ட்ஸ் (UPI Payments) மூலம் நொடியில் செலுத்தப்பட்டு விடுகிறது. இதனை அடுத்து யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface - UPI) நாட்டில் ஒரு முக்கிய கட்டண முறையாக மாறியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக நாட்டில் இருக்கும் அனைத்து முக்கிய வணிக வங்கிகளும் யுபிஐ-க்கு ஆதரவளித்து வருகின்றன. UPI-ஐ பயன்படுத்தி BHIM மட்டுமின்றி ஃபோன்பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட பல ஆப்கள் மூலம் மக்கள் எளிதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  கடந்த மாதத்தில் மட்டும் நாட்டில் சுமார் 2,800 மில்லியனுக்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பில் பேமெண்ட்ஸ்களில் இருந்து ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கி கணக்கிற்கு பணம் மாற்றுவது வரை, ரியல் டைம் பரிமாற்றம் தேவைப்படும் பெரும்பாலான நேரங்களில் மொபைல்கள் UPI அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  Also read: புதுப்படங்கள் பார்க்க Amazon Prime-க்கான இலவச சந்தாவை பெறுவது எப்படி? சிம்பிள் வழிகள் இதோ!

  டிஜிட்டல் பேமெண்ட்ஸ்களை எளிதாக்கும் ஒரு அமைப்பாக இருந்து வரும் UPI வளர்ச்சியுடன், அதனை பயன்படுத்தும் யூஸர்கள் தங்கள் கடின உழைப்பில் கிடைக்கும் பணத்தை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்வதும் அவசியமாகிறது. ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் பண பரிவர்த்தனைகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் UPI பேமெண்ட்ஸ்களை வைத்திருக்கிறார் என்றால், ஒருவேளை அவர் தனது மொபைலை தொலைத்து விட்டால், முறைகேடுகளை தவிர்க்க UPI பேமெண்ட்ஸ்களை செயலிழக்கச் செய்வது முக்கியமான ஒன்று.

  ஸ்மார்ட் போன் மூலம் UPI பேமெண்ட்ஸ்களை பயன்படுத்தும் யூஸர்கள், துரதிருஷ்டவசமாக தங்கள் மொபைல் போனை இழந்து விட்டால், அவர்களது இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளிலிருந்து (linked bank accounts) UPI பேமெண்ட்ஸ்களை செயலிழக்க செய்ய வேண்டியவை பற்றி பார்க்கலாம்.

  மொபைல் ஃபோன் தொலைந்த பின் UPI பேமெண்ட்ஸ்ளை செயலிழக்க செய்வது எவ்வாறு.?

  உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்ட காரணத்தால் அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் UPI பரிவர்த்தனைகளை டிஆக்டிவேட் செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில், உங்கள் UPI பின் அல்லது வேறு எந்த முக்கியமான விவரங்களையும் யாருடனும் ஷேர் செய்ய கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  1. நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கின் கஸ்டமர் கேர் சர்வீஸை தொடர்பு கொண்டு உங்கள் தொலைபேசி எண்ணை பிளாக் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை உங்கள் சிம் கார்டு அல்லது தொலைந்த மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி வேறு நபர்கள் அல்லது திருடர்கள் பரிவர்த்தனைகளை செய்வதை தடுக்க உதவும்.

  2. தொலைந்து போன உங்கள் தொலைபேசி எண்ணை உங்கள் வங்கி கணக்கிலிருந்து பிளாக் செய்ய, நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் ஹெல்ப்லைனை அழைக்கவும். மேலும் அவர்களிடம் உங்களது UPI சர்வீஸை டிஸேபிள் செய்ய கோருங்கள்.

  3. உங்கள் மொபைல் ஃபோன் இழப்பு குறித்து முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்யுங்கள். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வசிப்பவர்கள் இதை ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும்.

  நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) தளத்தின் FAQ பேஜில் ஒரு யூஸர் தன் மொபைல் ஃபோனை இழந்தால் மொபைல் எண்ணைத் பிளாக் செய்வது முக்கிய என்று குறிப்பிடும் அதே நேரத்தில், யூஸர்கள் தங்கள் யுபிஐ அணுகலை தடுக்க அனுமதிக்க எந்தவொரு தீர்வையும் குறிப்பிடவில்லை.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Mobile phone, Payment App, UPI

  அடுத்த செய்தி