உலகின் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாகிவிட்டது வாட்ஸ்அப். உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பயனர்களை கொண்டுள்ளது வாட்ஸ் அப். தனது பயனர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள மெட்டா நிறுவனம் அடிக்கடி மேம்பட்ட, புதிய, நவீன தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கான தனி R&D குழுவே செயல்படுகிறது. அந்த வகையில் வாட்ஸ் மற்றுமொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சம் மிகவும் தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதால் பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புதிய அம்சம்தான் ‘அவதார் ஸ்டிக்கர்ஸ்’
இந்த புதிய அவதார் ஸ்டிக்கர்ஸ் மூலம் பயனர்கள தங்கள் உணர்வுகளை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தி சாட் செய்ய முடியும். வாட்ஸ்அப்-பில் இனி பயனர்களை தங்கள் சொந்த உருவங்களை ஸ்டிக்கர்களாக உருவாக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் இந்த ஸ்டிக்கர்களை தங்கள் பெர்சனல் பயன்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த புதிய வசதி மூலம் நாம் உருவாக்கும் நம் சொந்த உருவங்களை கொண்ட அவதார் ஸ்டிக்கர்களில் லைட்டிங், ஷேடிங், ஹேர் ஸ்டைல், தோல் நிறத்தை மாற்றுவது, கண்கள், மூக்கு, காது, வாய் என்று ஒவ்வொன்றையும் உங்களைப் போல நீங்கள் உருவாக்கலாம். இந்த அவதார் ஸ்டிக்கர்கள் ஸ்னாப் சாட்டின் பிட்மோஜி மற்றும் ஆப்பிளின் மெமோஜி போன்றே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்.
இந்த அவதார் அம்சத்தை நீங்களும் உருவாக்கி, பயன்படுத்த வேண்டுமா? எப்படி என்று பார்க்கலாம்…
வாட்ஸ்அப் அவதார் ஸ்டிக்கர்களை உருவாக்க வாட்ஸ் அப்பில் புதிய சாட் ஒன்றை திறக்கவும். பிறகு சாட்டில் இருக்கும் ஸ்டிக்கர் பகுதியில் GIFக்கு அடுத்து இருக்கும் எமோஜி பகுதியை கிளிக் செய்யுங்கள். தொடர்ந்த Avatar Creator too box-கிளிக் செய்து create your avatar என்பதைத் தட்டி, உருவாக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும். தொடர்ந்து ஸ்கின் டோன், சிகை அலங்காரம், மூக்கு போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி உங்களுக்கான பிரத்யேக அவதார் ஸ்டிக்கர்களை உருவாக்குங்கள். இறுதியில் " Done " என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் அவதார் ஸ்டிக்கரை சேமித்தவுடன் வாட்ஸ்அப் தானாகவே புதிய ஸ்டிக்கர் பேக்கை உருவாக்கும். அவதார்களை வாட்ஸ்அப்பில் ப்ரொபைல் படமாகவும் பயன்படுத்தலாம். அல்லது ஸ்டிக்கர் பேக்கில் சேமித்து வைத்துக் கொண்டு அதில் இருந்து தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து சாட்லிஸ்டில் உள்ளவர்களுக்கு அனுப்பலாம். உங்கள் வாட்ஸ்அப் ஸ்டோரிஸ்-களிலும் நீங்கள் உருவாக்கிய அவதார் ஸ்டிக்கர்களை பதிவிடலாம்.
5ஜி மூலம் மருத்துவத்துறையில் நவீன சேவைகள் - ஜியோ நிறுவனம் புதிய திட்டம்
இப்போது நீங்கள் உருவாக்கிய அவதார் ஸ்டிக்கர்களை புரொஃபைல் பிக்சராக மாற்றுவது எப்படி என்பதை பார்க்கலாம்.. Settings என்பதைத் தட்டி, உங்கள் ப்ரொஃபைல் பிக்சர் புகைப்படத்தைத் தட்டவும். படத்தை மாற்ற திரையில் பென்சில் விருப்பத்தைக் தேர்வு செய்து, உங்கள் டிஜிட்டல் அவதாரை ப்ரொஃபைல் படமாக வைக்க Use Avatar என கிளிக் செய்யவும். உங்கள் அவதார் ஸ்டிக்கர் புரொஃபைல் ரெடி.
JIO True 5G-யுடன் இணைந்தது Realme : விரைவில் Realme 10 PRO சீரிஸ் அறிமுகம்..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: WhatsApp, Whatsapp Update