Home /News /technology /

உங்கள் Whatsapp Profile-க்கு QR கோட் உருவாக்குவது எப்படி?

உங்கள் Whatsapp Profile-க்கு QR கோட் உருவாக்குவது எப்படி?

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

நீங்கள் இனி போன் நம்பர் இல்லாமலேயே பிறரை சுலபமாக அணுக QR கோட் உதவியாக இருக்கும்.

உலகிலேயே முன்னணி குறுச்செய்தி நிறுவனமாக வாட்ஸ் அப் உள்ளது. டெக்ஸ்ட் மட்டுமின்றி வீடியோ, ஆடியோ போன்றவற்றை அனுப்பவும், குரூப் சாட், வீடியோ கால், வாய்ஸ் கால் போன்ற வசதிகளாலும் வாட்ஸ்அப் இன்றைய இளம் தலைமுறையினர் இடையே பிரபலமானதாக உள்ளது. எனவே மெட்டா நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ்அப் செயலியும் தனது யூஸர்களை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட வாட்ஸ் அப் குரூப் அட்மினுக்கு கூடுதல் அதிகாரம், 2 ஜிபி வரை ஃபைல் ஷேரிங், ஆடியோ காலில் 32 பேர் வரை இணையும் வசதி, ரியாக்‌ஷன் இமோஜிகான்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் வாட்ஸ் அப் அனுப்புவது போன்ற 5 முக்கியமான அப்டேட்களை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இனி வாட்ஸ்அப் ஆப் உங்கள் புரோபைலை இணைய முகவரி வடிவில் (QR code) சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. WABetalnfo இன் அறிக்கையின்படி, இந்த அம்சத்தைப் பற்றிய குறிப்புகள் Android பயனர்களுக்கான 2.22.9.8 பீட்டா நியூ வெர்ஷனில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலமாக புரோபைல் பட்டனைக் கொண்டு நீங்கள், புரோபைலுக்கான QR Code-யை உருவாக்கி கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டின் படி, உங்கள் புரோபைல் படத்திற்கு அடுத்தபடியாக, செட்டிங் பட்டனுக்கு கீழே புதிய பட்டன் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் வாட்ஸ் அப் உங்கள் புரோபைலுக்கான QR Code-யை உருவாக்கி கொள்ள அனுமதி அளிக்க உள்ளது. அதன் மூலமாக நீங்கள் இனி போன் நம்பர் இல்லாமலேயே பிறரை சுலபமாக அணுகலாம்.



உங்கள் WhatsApp புரோபைலுக்கான QR code-யை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றி பார்க்கலாம்..

* முதலில் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்.

* வாட்ஸ் அப் திரையின் மேல் வலபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்யவும்.

* அதிலிருந்து இருந்து செட்டிங்ஸ் (Settings) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

also read : அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்.. ஃபைல் ஷேரிங்... WhatsApp அறிமுகம் செய்ய இருக்கும் 5 புதிய வசதிகள்..

* உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் பெயருக்கு அடுத்துள்ள QR code ஐகானைத் கிளிக் செய்யவும்.

* இப்போது மேல்புறத்தில் உள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் QR code உங்களின் கேலரியில் சேவ் ஆகி விடும். இதனை உங்களுடைய சோசியல் மீடியாக்களிலும் நீங்கள் ஷேர் செய்து கொள்ளலாம்.



also read : மொபைல் பேட்டரிகள் எதனால் தீப்பிடிக்கிறது ? 5 பொதுவான காரணங்கள் இங்கே..

ஐபோனில் செய்வது எப்படி?

* ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்.

* திரையின் கீழ்புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* வாட்ஸ்அப் அக்கவுண்ட் பெயருக்கு அடுத்துள்ள QR code ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* ஷேர் என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்து, QR Code-யை கேலரியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: WhatsApp

அடுத்த செய்தி