முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஜிமெயில், யூடியூப் மற்றும் ஜிபே-யில் சிக்கலா? கூகுள் சப்போர்ட்டை தொடர்பு கொள்வது எப்படி.?

ஜிமெயில், யூடியூப் மற்றும் ஜிபே-யில் சிக்கலா? கூகுள் சப்போர்ட்டை தொடர்பு கொள்வது எப்படி.?

Image : Asif Islam / Shutterstock.com

Image : Asif Islam / Shutterstock.com

Google Support | வழக்கமாக பலர் மொபைலை ரீ ஸ்டார்ட் செய்வது அல்லது சாஃப்ட்வேரை அப்டேட் செய்வது உள்ளிட்ட வழிகளை கடைபிடித்து பார்ப்பார்கள். ஆனால் கூகுள் நிறுவனத்திடம் உங்களது கவலையை தெரிவிக்க விரும்பும் சில நிகழ்வுகளின் போது தயக்கமின்றி நிறுவனத்தை தொடர்பு கொள்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

கூகுள் நிறுவனத்தின் ஆப்ஸ்கள் மற்றும் சர்வீஸ்கள் (apps and services) நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. நம்மில் பெரும்பாலானோருக்கு பிரவுசிங், மெயிலிங், ஃபோட்டோஸ், ஸ்டோர் டாக்குமென்ட்ஸ், வீடியோக்களைப் பார்ப்பது, நேவிகேஷன், பேமென்ட் செலுத்துதல் மற்றும் பலவற்றிற்காக கூகுளின் தயாரிப்புகள் உதவி வருகின்றன. கூகுளின் ஆப்ஸ் மற்றும் சர்விஸ்கள் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட பிற எல்லா ஆப்ஸ்கள் மற்றும் ஆன்லைன் சர்விஸ்களைப் போலவே, நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் Google வழங்கும் apps and services-களில் சில நேரங்களில் குறைபாடுகள், சிக்கல்கள் அல்லது தடுமாற்றம் ஏற்படும்.

மேற்சொன்னது போல் இன்றைய காலகட்டத்தில் மெயில்களை அனுப்புவதிலிருந்து பணப் பரிமாற்றம் செய்வது வரை பலவற்றிற்காக நம்மில் பெரும்பாலோர் Google ஆப்ஸ் மற்றும் சர்விஸ்களை நம்பி இருக்கிறோம். அவற்றை சார்ந்து நாம் இயங்கும் போது அவற்றில் ஏற்படும் சிக்கல்கள் நமக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றன. இப்படி சிக்கல் ஏற்படும் பெரும்பாலான நேரங்களின் போது கூகுளின் ஆப்ஸை அப்டேட் செய்வது பிழையை சரி செய்யும் அதே நேரத்தில் சில சமயங்களில் நாம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு நாம் எதிர் கொள்ளும் சிக்கலை தெரிவிக்க விரும்புகிறோம். இதற்கேற்ப Google நிறுவனத்தின் சப்போர்ட் டீமை அணுகி நாம் எதிர்கொள்ளும் சிக்கலை புகாரளிக்க வழி இருக்கிறது. உண்மையில் பலருக்கும் இது தெரியாமல் இருக்கலாம்.

வழக்கமாக பலர் மொபைலை ரீ ஸ்டார்ட் செய்வது அல்லது சாஃப்ட்வேரை அப்டேட் செய்வது உள்ளிட்ட வழிகளை கடைபிடித்து பார்ப்பார்கள். ஆனால் கூகுள் நிறுவனத்திடம் உங்களது கவலையை தெரிவிக்க விரும்பும் சில நிகழ்வுகளின் போது தயக்கமின்றி நிறுவனத்தை தொடர்பு கொள்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Also Read : வாட்ஸ்அப் யூசர்களுக்காக வரும் புதிய பில்டர்கள்!

நீங்கள் கூகுள் சப்போர்ட்டைதொடர்பு கொண்டு உங்கள் சிக்கல்களை தீர்க்க கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்..

* கூகுள் குரோம் (google chrome) வெப் பிரவுசரை ஓபன் செய்து support.google.com என டைப் செய்யவும்

* இந்த பேஜில் Google-ன் அனைத்து ஆப்ஸ்களும் சர்விஸ்களும் தோன்றும். இந்த பட்டியலில் இருந்து நீங்கள் கஸ்டமர் சப்போர்ட்டை தொடர்பு கொள்ள விரும்பும் ஆப்ஸ் அல்லது சர்விஸை கிளிக் செய்யவும். down-facing arrow-வை கிளிக் செய்தால் விரிவான ஆப்ஷன்களின் பட்டியலை பார்க்கலாம்.

Also Read : ஆன்லைன் ஸ்கேம்களில் இருந்து பாதுகாப்பது எப்படி?

* ஆப்ஸ் அல்லது சர்விஸ்களில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்தவுடன், பல கேள்விகளுடன் புதிய வெப் பேஜ் ஓபன் ஆகும். உங்களின் கேள்வியை தேடி அதன் மீது கிளிக் செய்து பதிலைக் கண்டறியலாம். முன்பே பதிலளிக்கப்பட்டுள்ள பொதுவான கேள்வி பதில்கள் உங்களுக்கு உதவவில்லை என்றால் கீழே ஸ்க்ரால் செய்து 'Need More Help' என்பதைக் கிளிக் செய்யவும். பின் Contact Us என்பதை கிளிக் செய்யவும்.

* இப்போது உங்கள் சிக்கலின் சில குறிப்பிட்ட விவரங்கள் கேட்கப்படும், 'உங்களுக்கு சப்போர்ட் தேவைப்படும் சிக்கலை' குறிப்பிட வேண்டும். இப்போது உங்கள் கேள்வியை கீழே உள்ள பாக்சில் என்டர் செய்து, 'Next' என்ற ஆப்ஷனுக்கு செல்லவும்.

* உங்கள் விருப்பத்தைப் பொறுத்து கூகுள் நிறுவனத்தின் சப்போர்ட்டை தொடர்பு கொள்ள Get a call, Chat or Email ஆப்ஷன்களை பயன்படுத்தலாம்.

Also Read : புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்குவோர் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

top videos

    * மேற்கண்டவற்றிலிருந்து ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுத்த பிறகு, சப்போர்ட்டை தொடர்பு கொள்ள மீதமுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி உங்கள் கேள்விகள் அல்லது சந்தேகங்களை கேட்கலாம்.

    First published:

    Tags: Google, Technology, Youtube