ரயில் பயணிகள், தங்களின் PNR ஸ்டேட்டஸ் மற்றும் ரயில் வருகை குறித்தத தகவல்களை இனி தங்களின் வாட்ஸ் அப்-ல் காணும் வசதியை ரயிலோஃபி (Railofy) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பான பயணம், குறைவான டிக்கெட் (Ticket) விலை ஆகிய காரணங்களுக்காக இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் தொலைதூர பிராயணத்திற்கு ரயில் பயணத்தை நாடுகின்றனர். அப்படி செல்லும் பயணிகளுக்கு நாம் புக் செய்த டிக்கெட் கன்பார்ம் (confirm) ஆகிவிட்டதா? அல்லது Waiting list -ல் இருக்கிறோமா? என்பதை அறிவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. குறிப்பாக, PNR ஸ்டேட்டஸை தெரிந்துக்கொள்ள பல்வேறு இணையதளங்களில் தேடவேண்டி இருக்கிறது. கூகுள் (google) தரவின்படி, IRCTC பயணி ஒருவர் தங்களின் பயணத்துக்கு முன்பாக PNR ஸ்டேட்டஸ் குறித்த தகவல்களை 10 முதல் 20 முறை சரிபார்ப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால், மாதத்துக்கு ஒரு கோடிக்கும் மேலான PNR ஸ்டேட்டஸ் குறித்த தேடல்கள் இடம்பெறுவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் எதிர்கொள்ளும் இத்தகைய சிக்கலை போக்கும் வகையில் மும்பையச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான Railofy, புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, பயணிகள் தங்களின் PNR ஸ்டேட்டஸ் குறித்த தகவல்களை இனி வாட்ஸ் ஆப் மூலமே தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, ரயிலின் நிகழ்நேர வருகை, தங்கள் முன்பதிவின் தற்போதைய நிலை, லைவ் லொகோஷன் உள்ளிட்ட தகவல்களை உங்களின் வாட்ஸ்அப் செயலிக்கு ( Whats app) ரயில்லோஃபி நிறுவனம் அனுப்பி வைக்கிறது.
பயணிகள், தங்களின் PNR எண்ணை +919881193322 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினால் போதும். உங்கள் பயணசீட்டின் PNR எண் நிலை நொடியில் வாட்ஸ்அப் செயலிக்கு வந்துவிடும். மேலும், பயணிகள் ரயில் நிலையத்தை அடையும்போது நமது நிலையம் வந்துவிட்டது எனவும், அடுத்த வரவிருக்கும் நிலையம் குறித்த தகவலையும் ரயிலோஃபி தெரிவிக்கிறது. பயணி ஒருவர் முன்பதிவு செய்த ரயிலை தவறவிட நேரிட்டால், நிகழ்நேரத்தில் பயணிக்கும் ரயில்களின் வருகை மற்றும் தாமத நிலை, அந்த ரயிலுக்கான கட்டணம் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.
Also read... அமேசான் பிரைம் வீடியோவில் குரூப் ஸ்ட்ரீமிங்கிற்கான "வாட்ச் பார்ட்டி" அம்சம் : இந்தியாவில் அறிமுகம்!
கூடுதலாக, அந்த நேரத்தில் புறப்பட தயாராக இருக்கும் விமானங்கள் குறித்த தகவல்களையும், அதன் டிக்கெட் விலையையும் ரயில்லோஃபி ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம், டிக்கெட் கிடைக்காமல் கடைசி நேரத்தில் பயணிகள் தங்களின் நிலை வெகுவாக குறையும் என ரயில்லோபி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ரயிலோஃபி ஆப் நிறுவனர்களில் ஒருவரான ரோஹன் தெதியா, "இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களின் பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் நிலையை அறிந்துகொள்வதில் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர் என்பதை அறிந்தோம்.
அந்த சிக்கலை தீர்ப்பதுடன், பயணிகளுக்கு எளிமையாக ரயில் டிக்கெட் குறித்த தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என திட்டமிட்டு இத்தகைய முயற்சியை எடுத்தோம் என்றார். முதலில், 100க்கும் குறைவானவர்களே எங்களது செயலியை பயன்படுத்திய நிலையில் தற்போது ஏராளமானோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலோஃபி செயலியை அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர். எங்களின் நோக்கமே, இடையூறு இல்லா ரயில் பயணத்தை, பயணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான்" என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Train ticket, WhatsApp