போலி சிம்கார்டுகள் மற்றும் வேறொருவர் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சிம் கார்டுகளை வாங்குவது முன்பு அதிகமாக இருந்தது. சமூகவிரோதிகள் தாங்கள் செய்யும் குற்றச் செயல்களில் இருந்து தப்பிக்க, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். eKYC நடைமுறைக்கு வந்த பின்னர் யாருடைய ப்ரூப்பை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கினாலும், அதனை கண்டுபிடித்துவிட முடியும்.
உதாரணமாக, ஆதார் நம் கார்டைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டுகளை TAFCOP இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்கள் ஆதாருடன் இணைந்திருக்கும் மொபைல் எண்களை பார்க்கும்போது, நீங்கள் பயன்படுத்தாத எண்கள் இருந்தால் அதனை முறையாக புகார் தெரிவித்து நீக்க நடவடிக்கை எடுக்கவும் முடியும். மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆதார் எண்ணுடன் இணைந்திருக்கும் மொபைல் எண்களை தெரிந்துகொள்ளும் முறை;
Step1: முதலில் https://tafcop.dgtelecom.gov.in/ என்ற TAFCOP போர்ட்டலுக்குச் செல்லவும்
Step 2: முகப்பு பக்கத்துக்கு சென்றவுடன், உங்கள் முகவரி உள்ளிட்ட தகவல்களை சரியாக பதிவிட வேண்டும். நீங்கள் பதிவிட்ட தகவல் சரியானது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தவுடன், OTP பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: உங்கள் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி வரும். அதனை சரியாக பதிவிட்டு Validate பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
Also read... In-App Business Directory அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்! உள்ளூர் கடைகள் & சர்வீஸ்களை தேடலாம்
Step 4: OTP சரியான முறையில் நிறைவடைந்தவுடன், உங்கள் ஆதார் விவரங்களுடன் வழங்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியல் திரையில் தோன்றும். உங்கள் எண் கார்ப்பரேட் இணைப்பாக செயல்படுத்தப்பட்டால், இணைப்பு தொடர்பான அனைத்து மொபைல்களும் பட்டியலிடப்பட்டிருக்கும்.
Step 5: திரையில் தோன்றும் அனைத்து எண்களையும் கவனமாக பாருங்கள். நீங்கள் பயன்படுத்தாத எண்கள் அல்லது சந்தேகத்துக்குரிய எண்கள் இருந்தால், அது குறித்து உடனடியாக தொலைத்தொடர்பு துறைக்கு தெரிவிக்கலாம்.
Step 6: நீங்கள் வாங்கி பயன்படுத்தாத எண் அல்லது இனிமேல் பயன்படுத்த மாட்டோம் என நினைக்கும் எண்களுக்கு அருகில் checkbox என்ற ஐகான் இருக்கும். அதில் Not required என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step 7: கடைசியாக, Report button -ஐ கிளிக் செய்தால், உங்கள் புகார் பதிவு செய்யப்பட்டு, அந்த எண் உங்கள்
ஆதாரில் இருந்து நீக்கம் செய்யப்படும்.
சந்தேகத்துக்கு இடமான எண்கள் இல்லையென்றால், நீங்கள் புகார் அளிக்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரத்தில் இந்த போர்ட்டல் மூலம் ஆதார் கார்டை சிம் கார்டுக்காக யாரேனும் மோசடியாக பயன்படுத்தியிருந்தால் ஈஸியாக கண்டுபிடித்துவிட முடியும். எளிதாக பயன்படுத்தக்கூடிய போர்ட்டல் என்பதால், ஒருமுறை நீங்களும் செக் செய்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் இந்த போர்ட்டல் குறித்து தெரிவிக்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.