Home /News /technology /

Instant Pan Card: உடனடி இ-பான் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

Instant Pan Card: உடனடி இ-பான் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

பான்

பான்

தற்போது ஆதார் கார்டு வைத்திருப்பவர்களும், ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைத்தவர்களும் உடனடியாக பான் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
இ-பான் என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட டிஜிட்டல் பான் அட்டை ஆகும். 2020 பிப்ரவரியில் பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஆதார் அட்டை மூலம் உடனடி பான் ஒதுக்கீடு செய்வதற்கான வசதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு மே 28ம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இ-பான் வசதியை அறிமுகப்படுத்தினார்.

தற்போது ஆதார் கார்டு வைத்திருப்பவர்களும், ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைத்தவர்களும் உடனடியாக பான் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே பான் கார்டுக்கு விண்ணப்பித்துவிடலாம். பான் அட்டைதாரர்களின் புள்ளிவிவரம் மற்றும் பயோமெட்ரிக் தகவலுடன் QR குறியீட்டை E-PAN கொண்டுள்ளது. இந்த தகவலை ஆஃப்லைன் பயன்முறையில் பான் சரிபார்ப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்.

இ-பான் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது என்பது குறித்து விரிவாக காணலாம்:

1. வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இ-பில்லிங் வலைத்தளமான www.incometaxindiaefiling.gov.in என்ற லிங்கை பார்வையிடவும்.

2. 'ஆதார் மூலம் உடனடி பான்' (Instant PAN through Aadhaar) என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. பின்னர் வலைத்தளம் அடுத்தபக்கத்திற்கு மாறிய உடன், 'பான் நிலையை சரிபார்க்கவும் ’ (Check Status of PAN) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

4. அதில் கொடுக்கப்பட்ட பெட்டியில் உங்கள் ஆதார் எண்ணை நிரப்பவும்.

5. பின்னர், அதில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சாவை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.

6. இதன் பின்னர், உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெறுவீர்கள்.

7. இதனை தொடர்ந்து, வலைத்தளத்தில் உங்களுக்கு கிடைத்த OTP ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

8. இப்போது உங்கள் விண்ணப்பத்திற்கு ஒதுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்படாத நிலையை நீங்கள் காணலாம்.

9. ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு இ-பான் கார்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

10. விண்ணப்பதாரரின் இமெயில் ஐடிக்கும் இ-பான் கார்டு அனுப்பப்படும். ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடிக்கு மட்டுமே இ-பான் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... கூகுள் புகைப்படம் இலவச ஸ்டோரேஜ்க்கு என்டுகார்டு - மாத சந்தா விலை என்ன?

வருமான வரித் துறையின் இ-பில்லிங் அதிகாரப்பூர்வ வலைத்தளமான inctaxindiaefiling.gov.in என்ற லிங்கை பார்வையிடுவதன் மூலம் உடனடி பான் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சியைப் பயன்படுத்தி மக்கள் உடனடி பான் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு ஆன்லைனில் கிடைக்கும் பான் மென்மையான நகல் வடிவத்தில் வழங்கப்படுகிறது. இந்த செயல்முறைக்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இ-பான் பெற வெறும் 10 நிமிடங்கள் ஆகும். இ- பான் சாதாரண மக்கள் வைத்திருக்கும் பான் அட்டைக்கு சமமான முறையில் செல்லுபடியாகும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Pan card

அடுத்த செய்தி