Home /News /technology /

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களின் பேட்டரி ஹெல்த் ஸ்டேட்டஸை எவ்வாறு செக் செய்வது?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களின் பேட்டரி ஹெல்த் ஸ்டேட்டஸை எவ்வாறு செக் செய்வது?

போன்களின் பேட்டரி ஹெல்த்

போன்களின் பேட்டரி ஹெல்த்

இதற்காக பல ஆப்ஷன்கள் உள்ளன. சில ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தியாளர்கள் ஆப்பிள் போன்றே தங்கள் டிவைஸ்களில் பில்ட்-இன் அம்சங்களை வழங்குகிறார்கள்.

ஆப்பிள் டிவைஸ்கள் குறிப்பாக ஐபோன்கள் மற்றும் ஐபாட்கள் (iPhones and iPads) பேட்டரி ஹெல்த் ஸ்டேட்டஸை (battery health status) சரி பார்க்கும் திறனை யூஸர்களுக்கு வழங்கி வருகின்றன. யூஸர்கள் தங்கள் டிவைஸின் பேட்டரியை மாற்றுவதற்கான நேரம் இது தானா என்பதை சரிபார்க்க இந்த அம்சம் அவர்களுக்கு உதவுகிறது. துரதிர்ஷ்டவசமாக ஆண்ட்ராய்டில் இது போன்ற அம்சம் எதுவும் இல்லை. மேலும் Android 12 கூட பேட்டரி ஹெல்த் ஸ்டேட்டஸ் போன்ற முக்கிய அம்சத்தை பெறவில்லை. ஆனாலும் ஆண்ட்ராய்டு டிவைஸின் பேட்டரி ஹெல்த்தை செக் செய்ய முடியாது என்று அர்த்தமல்ல.

இதற்காக பல ஆப்ஷன்கள் உள்ளன. சில ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தியாளர்கள் ஆப்பிள் போன்றே தங்கள் டிவைஸ்களில் பில்ட்-இன் அம்சங்களை வழங்குகிறார்கள். இதில் சில ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தியாளர்கள் ஃபோனை டெஸ்ட் செய்ய தனித்தனியான ஃபர்ஸ்ட்-பார்ட்டி ஆப்ஸ்களை வழங்குகிறார்கள். இது தவிர பல தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்களும் உள்ளன.

சாம்சங் ஸ்மார்ட் ஃபோன்கள்:

சாம்சங் நிறுவனம் அதன் டிவைஸ்களில் Settings மெனுவின் கீழ் டயக்னோஸ்டிக்ஸ் (Diagnostic) ஆப்ஷனை வழங்குகிறது. இது யூஸர்கள் தங்கள் ஸ்மார்ட் ஃபோனின் பேட்டரி, நெட்வொர்க், வைஃபை, கேமரா போன்றவற்றை உள்ளடக்கிய முழுமையான டயக்னோஸ்டிக்ஸை இயக்க அனுமதிக்கிறது. நீங்கள் சாம்சங் மொபைல் வைத்திருந்தால் இந்த ஆப்ஷனை அணுக செட்டிங்ஸ் சென்று battery and device care மற்றும் Diagnostic ஆப்ஷனுக்கு செல்லவும். இங்கே நீங்கள் முழுமையான Diagnostic இயக்கலாம் அல்லது பேட்டரி ஹெல்த்தை பார்க்க battery ஆப்ஷனை டேப் செய்யலாம்.

ALSO READ |  2021-ஆம் ஆண்டில் குளோபல் கிராஷ் டெஸ்ட்களில் தேர்ச்சி பெற்ற இந்திய கார்களின் பட்டியல்!

ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஃபோன்கள்:

OnePlus ஸ்மார்ட் ஃபோன்கள் பேட்டரி ஹெல்த்தை செக் செய்ய ஏதுவாக எந்த ஒரு பில்ட்-இன் அம்சங்களுடனும் வரவில்லை. இருப்பினும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் கேர் App பேட்டரி உட்பட முழுமையான diagnostic-ஐ இயக்க யூஸர்களை அனுமதிக்கிறது. இதை செயல்படுத்த கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து OnePlus Care App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் ஃபோன் நம்பரை பயன்படுத்தி உள்நுழையவும். பின் OnePlus Care-ன் ஹோம் ஸ்கிரீனுக்கு சென்றவுடன் Diagnose This Device ஆப்ஷனை பயன்படுத்தவும்.

தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்..

உங்கள் டிவைஸின் ஹார்ட்வேரில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை செக் செய்ய உங்கள் டிவைஸின் ஹார்ட்வேரை ஆட்டோமேட்டிக்காக ஸ்கேன் செய்யும் பல தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்கள் உள்ளன. Cashify Diagnose, CPU-Z, Ampere, AccuBattery உள்ளிட்ட பல பிரபலமான தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்கள் இருக்கின்றன. இந்த ஆப்ஸ்கள் டிவைஸை ஸ்கேன் செய்து அதன் தற்போதைய ஹார்ட்வேர் ஸ்டேட்டஸ் குறித்த முழு விவரங்களையும் வழங்குகின்றன. இவை தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்கள் என்பதை நினைவில் கொண்டு தேவைப்பட்டால் உங்கள் சொந்த ரிஸ்க்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

ALSO READ |  நாட்டின் டாப் 10 நகரங்களில் 1 லட்சம் EV-க்களை களமிறக்க திட்டமிட்டுள்ள Zypp Electric!

சீக்ரெட் கோடை பயன்படுத்துதல்..

பெரும்பாலான ஆண்ட்ராய்டு டிவைஸ்கள் ஒரு secret code-ஐ பயன்படுத்தி பேட்டரி ஹெல்த்தை செக் செய்யும் ஆப்ஷனை வழங்குகின்றன. சீக்ரெட் கோடின் மூலம் பேட்டரி ஹெல்த்தை சரிபார்க்க, *#*#4636#*#* என டயல் செய்து Battery Information என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும். இந்த சீக்ரெட் கோட் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் வேலை செய்கிறது, எனினும் உங்கள் டிவைஸில்வேலை செய்யாமல் போகலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Android, Android Apps, Oneplus, Samsung, Smartphone

அடுத்த செய்தி