ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்றுவது எப்படி? படிப்படியான எளிய வழிமுறை!

உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்றுவது எப்படி? படிப்படியான எளிய வழிமுறை!

ஜிமெயில்

ஜிமெயில்

பெரும்பாலானோர் தற்போது கூகுளின் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உங்கள் இமெயில் பாஸ்வேர்ட்டை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை தவறாமல் மாற்றுவது உங்கள் இமெயில் அக்கவுண்ட்டை ஹேக்கர்களிடமிருந்தும், சாத்தியமான அடையாள திருட்டிலிருந்தும் (possible identity theft) உங்களை பாதுகாக்கும். தவிர உங்கள் மெயிலில் தனிப்பட்ட மற்றும் அலுவலகம் சார்ந்த நிறைய முக்கிய தகவல்கள் மற்றும் டேட்டாக்கள் அடங்கி இருக்கும். எனவே அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை தருவது அவசியம். உங்கள் மெயில் ஐடி பாஸ்வேர்ட்டை அடிக்கடி மாற்றுவது உங்களுக்கு சிரமத்தை தந்தாலும் பல ஆபத்துகளைத் தவிர்க்க உதவுகிறது.

பாஸ்வேர்ட்கள் குறிப்பாக நமது பெயர், பிறந்த தேதி, வீட்டு முகவரி, மொபைல் எண் உள்ள தனிப்பட்ட தகவல்களுக்கான திறவுகோலாக செயல்படுகிறது. அடையாளத் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகள் நம் தனிப்பட்ட தகவல்களை திருத்தவே முயற்சிப்பார்கள். அவர்களிடமிருந்து உங்கள் மெயிலில் உள்ள தனிப்பட்ட தகவல்கள், பாஸ்வேர்ட்களால் தான் பாதுகாக்கப்படுகின்றன. எனவே பாஸ்வேர்ட் பாதுகாப்பு எப்போதும் முக்கியம். தற்போதைய தொழில்நுட்ப உலகில் பல புதுமையான மற்றும் தந்திரமான வகையில் நடத்தப்படும் சைபர் அட்டாக் மற்றும் ஹேக்குகளுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்புகள் மிக அதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரும்பாலானோர் தற்போது கூகுளின் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஹேக்கர்கள் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை நேரடியாக பயன்படுத்தாமல், நீங்கள் ஜிமெயில் மூலம் உள்நுழைந்துள்ள மற்றொரு சர்வீஸ் அல்லது வெப்சைட்டை உங்களை போலவே பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது. எனவே இத்தகைய அபாயத்தை தவிர்க்க பாஸ்வேர்ட்டை மாற்றுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

* உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை அணுக முதலில் http://myaccount.google.com அல்லது உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் லாகின் செய்யவும். (your account ஐகானைக் கிளிக் செய்யவும், பின் ‘Manage Your Google Account'-ற்கு செல்லவும்)

* your account-ற்கு சென்ற பிறகு நீங்கள் பார்க்கும் பேஜின் இடதுபக்கத்தில் இருக்கும் ‘Security’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

* இப்போது ‘Signing in to Google’ என்ற கேப்ஷனில் ஒரு செக்ஷனை காணலாம். அதில் நீங்கள் கடைசியாக உங்கள் பாஸ்வேர்டை மாற்றியது எப்போது என்ற தகவல் இருக்கும். அதை இப்போது கிளிக் செய்ய வேண்டும்.

* அதை கிளிக் செய்த உடன் நீங்கள் தானா இந்த நடைமுறையை செய்வது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உங்கள் பாஸ்வேர்டை கேட்கும். எனவே நீங்கள் இப்போது உங்கள் மெயில் பாஸ்வேர்டை கொடுத்து நடைமுறைக்குள் நுழைய வேண்டும்.

* இப்போது நீங்கள் உங்கள் ஜிமெயிலுக்கான புது பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம். உங்களது புதிய பாஸ்வேர்டை ஒருமுறை டைப் செய்த பிறகு, அதற்கு கீழே உங்கள் புது பாஸ்வேர்டை உறுதிப்படுத்தி கொள்ள மீண்டும் ஒரு முறை டைப் செய்ய சொல்லி கேட்கப்படும். மொத்தம் 2 முறை உங்கள் புதிய பாஸ்வேர்டை டைப் செய்வதன் மூலம் உங்களது மெயிலின் பழைய பாஸ்வேர்ட் மாற்றப்பட்டு விடும்.

Also read... ட்ரோன் விதிகள் 2021: மருத்துவம், விவாசாயம் என உலகளாவிய ட்ரோன் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போகும் இந்தியா!

* குறிப்பாக உங்கள் பாஸ்வேர்டை யாரும் கணிக்க முடியாத வகையில் கொடுப்பது பாதுகாப்பானது. பாஸ்வேர்டை முழுமையாக்க குறைந்தபட்சம் எட்டு எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்றாலும் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டுக்கு குறைந்தது 12 எழுத்துகளையாவது பயன்படுத்த கூகுள் பரிந்துரைக்கிறது.

* இறுதியாக உங்கள் பாஸ்வேர்ட் வெற்றிகரமாக மாற்றப்பட்டு விட்டதா என்பதைச் சரிபார்க்க, நீங்கள் பாஸ்வேர்ட் விருப்பத்திற்கு சென்று டைம் ஸ்டாம்ப்பை பார்க்கலாம் அல்லது அக்கவுண்ட்டிலிருந்து லாகவுட் செய்து பின்னர் மீண்டும் லாகின் செய்யலாம். அதே போல உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை பாதுகாப்பாக வைத்திருக்க, two-step authentication ஆக்ட்டிவாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். தொந்தரவு இல்லாத அனுபவத்தைப் பெற, நீங்கள் பாஸ்வேர்ட் மேனேஜரை பயன்படுத்த கூகுள் அறிவுறுத்துகிறது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Technology