Home /News /technology /

அமேசான் ப்ரைம் அக்கவுண்ட்டில் உங்களுடைய நாட்டை மாற்றுவது எப்படி?

அமேசான் ப்ரைம் அக்கவுண்ட்டில் உங்களுடைய நாட்டை மாற்றுவது எப்படி?

amazon prime video

amazon prime video

Amazon Prime Video | என்ன தான் நீங்க அமேசான் பிரைம் வீடியோ சந்ததாரராக இருந்தாலும், உங்களுடைய நாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட வீடியோக்களை மட்டுமே காண முடியும். காரணம் நாட்டுக்கு நாடு கலாச்சாரம் வேறுபடுவதால் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளது.

மேலும் படிக்கவும் ...
ஆன்லைன் OTT தளத்தில் முன்னணி நிறுவனமாக வலம் வரும்
அமேசான் ப்ரைம் 4K தரத்தில், டால்பி டிஜிட்டல் 5.1 சவுண்ட் எபெக்ட்ஸ் உடன் தியேட்டர் போலவே வீட்டிலும் திரைப்படங்களை கண்டுகளிக்க உதவிகிறது. சீனா, கியூபா, ஈரான், வட கொரியா, சிரியா தவிர உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அமேசான் ப்ரைம் சேவை மாத சந்தா அடிப்படையில் வழங்கபடுகிறது.

மாத சந்தாவை செலுத்துவதைப் பொறுத்து செல்போன், டி.வி. கம்ப்யூட்டர் என அனைத்திலும் அமேசான் ப்ரைம் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் தொலைக்காட்சிகளில் கூட குரோம்காஸ்ட் உதவியுடன் பிரைம் வீடியோவைக் காண முடியும்.

என்ன தான் நீங்க அமேசான் பிரைம் வீடியோ சந்ததாரராக இருந்தாலும், உங்களுடைய நாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட வீடியோக்களை மட்டுமே காண முடியும். காரணம் நாட்டுக்கு நாடு கலாச்சாரம் வேறுபடுவதால் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளது. மேலும் இருப்பிடக் கட்டுப்பாடுகளை வைப்பதன் மூலம் அமேசான் ப்ரைம் உள்ளடக்கத்தின் பதிப்புரிமை மற்றும் விநியோக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்கிறது.

எடுத்துக்காட்டாக நீங்கள் ஐரோப்பாவில் பயணம் செய்யும் அமெரிக்க குடிமகன் என்றால், உங்கள் அமேசான் பிரைம் வீடியோ நாட்டை மாற்றும் வரை நீங்கள் ஏற்கனவே பார்த்து ரசித்து வந்த அமெரிக்க நிகழ்ச்சிகளை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்க முடியாது.



எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் சொந்த நாட்டில் பார்த்த அமேசான் ப்ரைம் நிகழ்ச்சிகளை எவ்வாறு பார்ப்பது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். VPN மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த வீடியோக்களையும் நீங்கள் கண்டுரசிக்கலாம்.

Also Read : உங்கள் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் அக்கவுண்ட்-ஐ கட்டுப்படுத்தக் கூடிய மால்வேர்

அமேசான் அக்கவுண்டில் நாட்டை மாற்றுவது எப்படி?

1. உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து அமேசானின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்.

2. வழக்கமான முறையில் உங்களுடைய அக்கவுண்ட்டை லாகின் செய்து கொள்ளவும்.

3.மேல் வலது மூலையில் உள்ள 'கணக்குகள் மற்றும் பட்டியல்கள்' (Accounts and lists) என்பதை கிளிக் செய்யவும்.

4. கீழ் தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் உள்ளடக்கம் மற்றும் சாதனங்களை நிர்வகிக்கும் மெனுவை தேர்ந்தெடுக்கவும்.

Also Read : கூகுள் க்ரோமில் காணாமல் போகப்போகும் ஒரு அம்சம்!

5. அதில் Preferences என்பதை தேர்வு செய்யவும்.

6. அடுத்து, 'Country/Region'அமைப்பு என்ற மெனுவை தேர்வு செய்து, அதில் Change என்ற க்ளிக் செய்யவும்.

7. அடுத்த கட்டம் சுய விவரங்களை பதிவு செய்வது ஆகும். Update என்பதை க்ளிக் செய்து, உங்களுடைய புதுப்பிக்கப்பட்ட முகவரியை தட்டச்சு செய்து நிரம்புங்கள். நீங்கள் ஓட்டலில் தங்கியிருந்தால் அதன் முகவரியைக் கூட கொடுத்து பதிவு செய்யலாம்.

8. இப்போது உறுதிப்படுத்தலை ஒப்புதல் செய்வதற்கான டைலாக் பாக்ஸ் தோன்றும், அதை உறுதி செய்து முடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் விரும்பும் நாட்டின் உடைய வீடியோக்களை அமேசான் ப்ரைமில் கண்டு ரசிக்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Amazon, Amazon Prime, Technology

அடுத்த செய்தி