Home /News /technology /

கூகுள் பே ஆப்பில் யூபிஐ பின் நம்பர் எப்படி மாற்ற வேண்டும் என தெரியவில்லையா - இதை படியுங்கள்

கூகுள் பே ஆப்பில் யூபிஐ பின் நம்பர் எப்படி மாற்ற வேண்டும் என தெரியவில்லையா - இதை படியுங்கள்

 கூகுள் பே

கூகுள் பே

டிஜிட்டல் வாலட் பயன்படுத்தும்போது, சில்லறை தட்டுப்பாடு என்ற பிரச்சினையே எழுவதில்லை. எது சரியான தொகையோ, அதை மட்டும் செலுத்திவிட்டு நாம் கடந்து சென்று விடுகிறோம்.

இன்றைய சூழலில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான மக்கள் யூபிஐ மூலமாகவும், டிஜிட்டல் வாலட் மூலமாகவும் பண பரிவர்த்தனைகளை செய்ய முயற்சித்து வருகின்றனர். பொதுவாக ஆன்லைன் மூலமாக ஒரு பொருளை வாங்கும்போது அல்லது ஒரு சேவையை பெறும்போது டிஜிட்டல் பேமெண்ட் முறையை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கடைகளுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வாங்கினாலும் கூட டிஜிட்டல் வாலட் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

டிஜிட்டல் வாலட் பயன்படுத்தும்போது, சில்லறை தட்டுப்பாடு என்ற பிரச்சினையே எழுவதில்லை. எது சரியான தொகையோ, அதை மட்டும் செலுத்திவிட்டு நாம் கடந்து சென்று விடுகிறோம். எங்கு சென்றாலும் நாம் பணத்தை எண்ணி கையில் எடுத்துக் கொண்டு செல்லவோ அதை சிரமம் கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்கவோ தேவையில்லை.

யூபிஐ பின் நம்பர் ஏன் முக்கியம்

யூபிஐ சேவைகளைப் பயன்படுத்தும்போது நீங்கள் பயன்படுத்தும் வங்கிச் சேவையை பொறுத்து, உங்கள் பின் நம்பர் 4 இலக்க எண்களாக அல்லது 6 இலக்க எண்களாக இருக்கலாம். உங்கள் பேங்க் அக்கவுண்டில் உள்ள முழு பேலன்ஸ் தொகைக்கும் இந்த பின் நம்பர் தான் தடுப்புக் காவலாக இருக்கிறது. நீங்கள் தவறுதலாக ஃபோனை தொலைத்து விட்டாலோ அல்லது யாரேனும் உங்களுக்கு தெரியாமல் ஃபோன் பயன்படுத்தினாலோ, அந்த சமயத்தில் உங்கள் பின் நம்பர் அவர்களுக்கு தெரிந்திருந்தால் பணத்தை இழக்க நேரிடும்.

ஆகவே, பின் நம்பர்களை நாம் அவ்வபோது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

நாட்டில் பேடிஎம், கூகுள் பே, போன் பே, பீம் என எண்ணற்ற யூபிஐ சேவை தளங்கள் உள்ளன. இவற்றில் எந்தவொரு ஆப் மூலமாகவும் உங்கள் பின் நம்பரை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும் என்றாலும், கூகுள் பே வழியாக யூபிஐ பின் நம்பரை மாற்றுவது குறித்து இந்த செய்தியில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Also read... ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளேவிலிருந்து சத்தமின்றி இந்த 2 ஆப்ஸ்களை நீக்கிய இன்ஸ்டாகிராம்!

பின் நம்பர் மாற்றுவது எப்படி

பொதுவாக உங்கள் 6 இலக்க பின் நம்பர் என்பது 0 முதல் 9 வரையில் இருக்கும். இதில் பின் நம்பர் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால், பின் நம்பர் உருவாக்கும்போது உங்கள் பிறந்த தேதி, ஃபோன் நம்பர், ஆதார் நம்பர் போன்ற எண்களையும், 123456 என்ற வரிசை மிகுந்த எண்களையும் பயன்படுத்தக் கூடாது. சீரற்ற எண்களை தேர்வு செய்து பின் நம்பர் உருவாக்க வேண்டும்.

  • உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் கூகுள் பே ஓப்பன் செய்து கொள்ளுங்கள்

  • டாப் ரைட் கார்னரில் உள்ள புரொபைல் ஐகான்-ஐ கிளிக் செய்யவும்

  • இப்போது நீங்கள் பின் நம்பர் மாற்றம் செய்ய விரும்பும் வங்கிக் கணக்கை தேர்வு செய்யவும்

  • இப்போது வரும் ஸ்கிரீனில் டாப் கார்னரில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்யவும். இங்கு சேஞ்ச் யூபிஐ பின் என்ற ஆப்சன் இருக்கும்.

  • இப்போது புதிய பின் உருவாக்கவும். அதையே மீண்டும் குறிப்பிட்டு உறுதி செய்யவும். இப்போது உங்கள் பின் நம்பர் மாறியிருக்கும்.


  •  
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Google pay

அடுத்த செய்தி