முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ட்ரூகாலர் ஆப்-பில் உங்கள் பெயரை சேர்ப்பது, கணக்கை நீக்குவது எப்படி? - முழு விவரம்!

ட்ரூகாலர் ஆப்-பில் உங்கள் பெயரை சேர்ப்பது, கணக்கை நீக்குவது எப்படி? - முழு விவரம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த ஆப்பை பயன்படுத்துவதால் தேவையற்ற அழைப்பை நிராகரிப்பது, எண்களை ஸ்பேம் என குறிப்பது போன்ற பல நன்மைகள் இதில் உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ட்ரூகாலர் ஆப் தங்கள் போனுக்கு யார் கால் அல்லது மெசேஜ் அனுப்புகிறார்கள் என்பதைக் கண்டறிய அனுமதிக்கிறது. உங்கள் போனில் குறிப்பிட்ட எண்ணைச் சேமிக்காதபோது இது மிகவும் உதவுகிறது. ஏனெனில் நீங்கள் பதிலளிக்க வேண்டுமா? அல்லது நிராகரிக்க வேண்டுமா? என்பதை உங்களுக்கு வரும் அழைப்பை ஏற்பதற்கு முன்பே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆப் உங்கள் போனில் உள்ள காண்டாக்ட் விவரங்களைத் தேடுகிறது, அதில் இல்லாத எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அந்த அழைப்பு குறித்த விவரங்களை உங்களுக்கு காட்டும். மேலும் உங்கள் விவரங்களும் ட்ரூகாலரின் தரவுத்தளத்தில் இருக்கக்கூடும். இந்த ஆப்பை பயன்படுத்துவதால் தேவையற்ற அழைப்பை நிராகரிப்பது, எண்களை ஸ்பேம் என குறிப்பது போன்ற பல நன்மைகள் இதில் உள்ளன, எனவே நீங்கள் தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்கலாம்.

எனவே ட்ரூகாலரில் உங்கள் பெயரை எவ்வாறு மாற்றலாம், உங்கள் கணக்கை எப்படி நீக்கலாம் அல்லது திருத்தலாம் என்பது குறித்த விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.,

பெயரை மாற்றுவது எப்படி?

* Android அல்லது iOSல் Truecaller ஆப்பை திறக்கவும். மேல் இடதுபுறத்தில் உள்ள ப்ரொபைல் மெனு ஐகானை கிளிக் செய்யவும் (iOSல் கீழ் வலது பக்கத்தில் இருக்கும்).

* இப்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் பெயரை திருத்தலாம். உங்கள் பெயர் மட்டுமின்றி தொலைபேசி, மெயில் ஐடி, உங்கள் சுய விவரங்களையும் இதில் மாற்றி கொள்ளலாம்.

ட்ரூகாலரில் உங்கள் கணக்கை நீக்குவது / deactivate செய்வது எப்படி?

* Android அல்லது iOSல் Truecaller ஆப்பை திறக்கவும்.

* மேல் இடதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை (ஹாம்பர்கர் மெனு) கிளிக் செய்யவும். (iOSல் கீழ் வலது பக்கத்தில் இருக்கும்).

* இப்போது தோன்றும் திரையில் Settings என்பதை கிளிக் செய்யவும். பின்னர் Privacy Center என்பதை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றால் Deactivate என்ற ஆப்ஷன் கடைசியாக இருக்கும். அதனை தேர்ந்தெடுத்து உங்கள் கணக்கை Deactivate செய்யலாம்.

IOSல், Keep My Data and Delete My Data என்ற ஆப்ஷன்கள் இருக்கும். Keep My Data என்பதை தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு வரும் அழைப்பு குறித்த விவரங்களை உங்களால் தேட முடியும், ஆனால் உங்கள் விவரங்களை உங்களால் திருத்த முடியாது. Delete My Data என்பதை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு வரும் அழைப்புகள் குறித்த விவரங்களை தேட முடியாது மற்றும் உங்கள் விவரங்களும் நீங்கிவிடும்.

ட்ரூகாலரில் tags-களை எவ்வாறு திருத்தலாம் அல்லது அகற்றலாம்?

* Android அல்லது iOSல் Truecaller ஆப்பை திறக்கவும். மேல் இடதுபுறத்தில் உள்ள ப்ரொபைல் மெனு ஐகானை கிளிக் செய்யவும் (iOSல் கீழ் வலது பக்கத்தில் இருக்கும்).

* இப்போது தோன்றும் பக்கத்தில் கடைசியாக Add tag என்ற ஆப்ஷன் இருக்கும். (iOS ல் Edit Profile என இருக்கும்).

* நீங்கள் Add tag என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், அதில் எண்ணற்ற tag தோன்றும் அவற்றில் இருந்து உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீக்கலாம்.

ட்ரூகாலரில் Business profile எவ்வாறு உருவாக்குவது?

* உங்கள் வணிகத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்க Business profile உங்களை அனுமதிக்கிறது.

* இதில் உங்கள் முகவரி, இணையதளம், மின்னஞ்சல், அலுவலக தொடக்க நேரம், அலுவலக இறுதி நேரம் போன்ற விவரங்களை சேர்க்கலாம்.

நீங்கள் முதன்முறையாக ட்ரூகாலரில் பதிவு செய்கிறீர்கள் என்றால், உங்கள் சுயவிவரத்தை உருவாக்குதல் பிரிவில் ஒரு வணிக சுயவிவரத்தை (Business profile) உருவாக்கு என்ற ஆப்ஷன் இருக்கும்.

அதில் உங்கள் விவரங்களை சேர்த்து கொள்ளலாம்.

நீங்கள் ஏற்கனவே ட்ரூகாலர் யூசராக இருந்தால், மேல் இடதுபுறத்தில் உள்ள ப்ரொபைல் மெனு ஐகானை கிளிக் செய்யவும் இப்போது தோன்றும் பக்கத்தில் கடைசியாக Create A Business Profile

என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி கேட்கப்படுவீர்கள். ஓகே கொடுத்து உள்ளே சென்றால் உங்கள் வணிகம் குறித்த விவரங்கள் கேட்கப்படும். அதனை ஒவ்வொன்றாக நிரப்பவும். உங்கள் வணிக சுயவிவரம் இப்போது ட்ரூகாலரில் உருவாக்கப்பட்டுவிடும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Android Apps, Application, Mobile Phone Users, True Caller