• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • உங்கள் ஆதாரில் பிறந்த தேதியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றலாம்!

உங்கள் ஆதாரில் பிறந்த தேதியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றலாம்!

ஆதார் அட்டை (மாதிரிப்படம்)

ஆதார் அட்டை (மாதிரிப்படம்)

மொபைல் எண், ஈமெயில் ஐடி மற்றும் பயோமெட்ரிக்ஸை நீங்கள் புதுப்பிக்க விரும்பினால், உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தைப் பார்வையிட வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தற்போது ஆதார் அட்டை அனைத்து வகையான தேவைகளுக்கும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். வங்கி பரிவர்த்தனைகள் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். உங்கள் விவரங்களை சரிபார்க்க ஆதார் கேட்கப்படும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிடுவது முக்கியம்.

உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை ஆதார் சேவை மையத்திற்கு சென்று திருத்தி கொள்ளவும். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை புதுப்பிக்க Self Service Update Portal (SSUP) உங்களை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மொபைல் எண், ஈமெயில் ஐடி மற்றும் பயோமெட்ரிக்ஸை நீங்கள் புதுப்பிக்க விரும்பினால், உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தைப் பார்வையிட வேண்டும்.

உங்கள் வாழ்நாளில் ஆதார் அட்டையில் உங்கள் பெயரை இரண்டு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதில் எழுத்துப்பிழை திருத்தங்கள், குறுகிய வடிவத்திலிருந்து முழு வடிவத்திற்கு, வரிசையில் மாற்றம் மற்றும் திருமணத்திற்குப் பிறகு பெயர் மாற்றம் போன்றவை அடங்கும். பாலினம் மற்றும் பிறந்த தேதியை ஆன்லைனில் ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும், மேலும் ஆன்லைனில் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியைப் புதுப்பிக்க வரம்பு இல்லை. ஆனால் சில குறிப்பிட்ட சேவைகள் ஆனலைனிலேயே கிடைப்பதால் நீங்கள் அலைய தேவையில்லை.

Also read... பப்ஜி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... புதிய பெயரில் பப்ஜி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆன்லைன் வழியாக ஆதார் அட்டையில் உங்கள் பிறந்த நாளை மாற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.,

1. முதலில் Self Service Update Portal (SSUP) தளமான https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

2. 'ஆதார் புதுப்பிக்க தொடரவும்' என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்க.

3. உங்கள் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு கேப்சா குறியீட்டை சரிபார்க்கவும்.

4. பின்னர் OTP விருப்பத்தை அழுத்தவும்

5. இதனை தொடர்ந்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை பதிவு செய்து உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.

6: பிறந்த தேதியை சரியாக தேர்வு செய்து ஓகே என்பதை க்ளிக் செய்யவும் அல்லது சப்மிட் கொடுக்கவும்.

மேற்கண்டவற்றை செய்து முடித்தால் உங்கள் பிறந்த தேதி உங்கள் ஆதாரில் ஆன்லைனில் புதுப்பிக்கப்படும். இதேபோல நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றையும் மாற்றி கொள்ளலாம். ஆனால் தற்போது மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் மாற்றும் சேவைகள் ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது என கூறப்படுகிறது, எனவே உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று மாற்றி கொள்ளலாம். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: