பைக் ஒட்டும்போது கூகுள் மேப் பார்க்க உதவும் ஸ்மார்ட் ஃபோன் ஹோல்டர் எப்படி வாங்குவது ? எது சிறந்தது ?

டெலிவரி பாயாக வேலை செய்யும் பலருக்கும் இது வரம்.

Web Desk | news18
Updated: April 4, 2019, 10:45 PM IST
பைக் ஒட்டும்போது கூகுள் மேப் பார்க்க உதவும் ஸ்மார்ட் ஃபோன் ஹோல்டர் எப்படி வாங்குவது ? எது சிறந்தது ?
ஸ்மார்ட்ஃபோன் ஹோல்டர்
Web Desk | news18
Updated: April 4, 2019, 10:45 PM IST
வாகனம் ஓட்டும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது என்பது முற்றிலும் தவறு. இருப்பினும் இன்று பலர் தெரியாத இடங்களுக்குச் செல்ல கூகுள் மேப் பயன்படுத்திதான் அந்த இடத்தை அடைகின்றனர். குறிப்பாக டெலிவரி பாயாக வேலை செய்வோர் பலருக்கும் இது வரம். அந்த சமயத்தில் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்த சிரமமாக இருப்பதைத் தவிர்க்கவே ஸ்மார்ட் ஃபோன் ஹோல்டர்கள் வந்தன. முடிந்தவரை வண்டி ஓட்டும்போது செல்ஃபோன் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.ஸ்மார்ட் ஃபோன் மவுண்ட் என அழைக்கப்படும் இந்த ஹோல்டர்களை பைக்கிற்கு வாங்குவதுதன் மிகவும் கடினம். காரணம் இதை பொருத்த சரியான இடம் இல்லை. அப்படியே வைத்தாலும் பைக்கினுடைய ஹேண்டில் பார் அல்லது ஸ்டெம் பகுதியில்தான் பொருத்த முடியும்.


இருப்பினும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அது திருடர்கள் ஜாக்கிரதை என்பதுதான். இன்று நடந்து கொண்டு செல்ஃபோன் பேசினாலும் தூக்கிக் கொண்டு ஓடும் திருடர்கள் மத்தியில் பைக்கில் அவ்வாறு பொருத்துவது எப்போதும் உங்களுக்கு ஒரு கவனம், பயம் இருக்கும். இவற்றையும் கடந்து உங்களுக்கு அதன் தேவை கட்டாயமாக இருக்கும் பட்சத்தில் வாங்கிதான் ஆக வேண்டும்.

இதில் பல வகைகள் இருக்கின்றன. ராம் மவுண்ட், மவுண்ட் வித் கேஸ், ஃப்ரேம் வித் வாட்டர் ஃப்ரூஃப் பேக் மற்றும் யூனிவர்செல் ப்ராக்கெட் என நான்கு வகைகள் இருக்கின்றன.

ஃப்ரேம் வித் வாட்டர் ஃப்ரூஃப் பேக் ( Frame with a waterproof bag )

Loading...உங்களுடைய ஃபோன் வாட்டர் ப்ரூஃப் இல்லையெனில் இந்த ட்ரான்ஸ்பரெண்டான வாட்டர் ப்ரூஃப் பேக் மவுண்ட் பொருத்தமாக இருக்கும். இதில் உங்கள் ஃபோனை உள்ளே வைத்தபடி ஸ்க்ரீனை டச் செய்து பயன்படுத்தலாம். அதேபோல் பனிக் காலம் , மழைக்காலம் என எப்போதுவேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது எல்லாவகையான செல்ஃபோன்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

யூனிவர்செல் ப்ராக்கெட் ( Universal bracket )இது ஃபோனின் இரண்டு பக்கங்கள் மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்வதாக இருக்கும். அடிப்பகுதியின் இரண்டு கார்னர் பகுதிகளில் மட்டும் தாங்கும் ஸ்டிக் பொருத்தப்பட்டுள்ளது. இது பயன்படுத்த அத்தனைப் பாதுகாப்பு இல்லை. சவுகரியம் இல்லை. நீங்கள் ஃபோன் அதிகம் பயன்படுத்தக் கூடியவர் எனில் இது பொருத்தமாக இருக்காது. இதில் ஃபோன் பேட்ரி சார்ஜ் போட முடியாதது இதன் குறையாகக் கருதப்படுகிறது.

ராம் மவுண்ட் ( Ram mounts )ராம் மவுண்ட் ஸ்மார்ஃபோனின் பாதுகாப்பான அம்சத்திற்கு ஏற்றது. க்ரிப் இருப்பதால் ஃபோன் பயன்படுத்தும் போதும் ஒரே இடத்திலேயே ஆடாமல் இருக்கும். க்ரிப் தன்மையும் வலிமையாக இருக்கிறது. இது ஸ்டெம் பகுதியில் பொருத்தக் கூடியதாக இருப்பதால் திருடர்கள் பிரச்னையும் இருக்காது.

மவுண்ட் வித் கேஸ் ( Mounts with a case )இது மேற்புறம் கேஸ் வைத்தவாறு இருக்கும். பின்புறம் தாங்கக் கூடிய வகையில் கேஸ் வைத்தபடி இருக்கும். அந்தக் கேஸில் காந்தகம் ஒட்டப்பட்டிருக்கும். அதை ஸ்டெம் பகுதியில் பொருத்தப்படும் இரும்பு கம்பியில் ஃபோனை பொருத்த வேண்டும். இதுவும் ஸ்டெம் பகுதியில் பொருத்தக் கூடியதாக இருக்கிறது. முற்றிலும் மூடியவாறு கொண்ட கேஸ் வாங்கினால் சில சமயங்களில் உங்கள் டச் ஸ்கிரீன் வேலை செய்யாது. அதனால் பின் பக்க கேஸ் இருக்குமாறு வாங்குங்கள். சார்ஜ் பொருத்தக் கூடிய தேவை அதிகம் இருந்தால் இந்த மவுண்டைத் தவிர்ப்பது நல்லது.

Also read : 


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...