கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆட்டோமொபைல் தொழில் துறையில் ஏராளமான இடர்பாடுகள் மற்றும் மாற்றங்கள் வந்துள்ளன. பெரும்பாலும் ஆட்டோமொபைல் துறைக்கு மிகுந்த பாதிப்புகளை அவை ஏற்படுத்தியுள்ளன என்றாலும் கூட, ஒரு சில மாற்றங்கள் என்பது புதிய டிரெண்ட்களின் தொடக்கமாக அமைந்துள்ளன.
அப்படியொரு மாற்றம் தான் வாகனங்களின் ஆன்லைன் விற்பனை ஆகும். கார் வாங்குவதற்காக ஷோரூம் சென்றால், அங்கு யாரேனும் தொற்றோடு இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து தங்களுக்கும் வைரஸ் பரவும் என்று வாடிக்கையாளர்கள் அஞ்சிய நிலையில், ஆன்லைன் விற்பனை அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது.
சௌகரியமாக வீட்டில் இருந்தபடி வாங்கலாம்
கார் வாங்குவது என்பது டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு செல்லும் நிலையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாறியிருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே சௌகரியமான வகையில் கார் வாங்க முடிகிறது. இன்டர்நெட் இணைப்பு கொண்ட செல்ஃபோன் அல்லது கம்ப்யூட்டர் மற்றும் தேவையான பணம் ஆகியவை இருந்தால் வீட்டில் இருந்தபடியே கார் வாங்கி விடலாம்.
ALSO READ | விபத்துகளை குறைக்க புதிய டிரைவர் அசிஸ்டென்ஸ் தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் நிசான்!
மாடல் மற்றும் வேரியண்ட்களை தேர்வு செய்யவும்
பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது அவர்களது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக கார் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். உங்களுக்கு எந்த பிராண்ட் கார் வாங்க விருப்பமோ, அந்த நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று பிடித்தமான மாடல் மற்றும் வேரியண்ட் ஆகியவற்றை தேர்வு செய்து கார் வாங்கிக் கொள்ளலாம்.
பிடித்தமான காரை தேர்வு செய்வதற்கு முன்பாக, கார்களின் சிறப்பு அம்சங்கள், அதில் உள்ள வசதிகள் மற்றும் இதர விவரங்கள் ஆகியவற்றை ஆன்லைன் மூலமாகவே சரிபார்த்துக் கொள்ளலாம்.
ALSO READ | எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய கட்டுக்கதைகளும்..உண்மைகளும்!
டீலர்ஷிப் தேர்வு செய்யவும்
பிடித்தமான கார் மாடல் மற்றும் வேரியண்ட் தேர்வு செய்த பிறகு, அருகாமையில் உள்ள அந்த காருக்கான டீலரை தேர்வு செய்ய வேண்டும். முன்னணி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் எண்ணற்ற டீலர்களை கொண்டுள்ளன. அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
விவரங்களை பகிர வேண்டும்
டீலர்ஷிப் யார் என்பதை தேர்வு செய்த பிறகு, அதில் கேட்கப்படும் விவரங்களை குறிப்பிட வேண்டும். குறிப்பாக பெயர், வசிப்பிட முகவரி, தொடர்பு விவரம், ஊதியம் மற்றும் பணியிட விவரம் போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ALSO READ | புதிய எர்டிகா ஃபேஸ் லிஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய மாருதி சுசுகி - விலை விவரங்கள் இங்கே!
முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யவும்
இறுதியாக நீங்கள் தேர்வு செய்த காருக்கான பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தி, முன்பதிவு செய்ய வேண்டும். நீங்கள் கார் லோன் பெறுபவர் என்றால், ஆன்லைன் முறையில் அதற்கு ஒப்புதல் கிடைக்க சில காலம் தேவைப்படலாம்.
டெலிவரி பெறுங்கள்
பணம் செலுத்தி உங்களுக்கான கார் முன்பதிவு செய்யப்பட்ட பிறகு, கார் ஷோ ரூமில் இருந்து உங்களை தொடர்பு கொண்டு, எப்போது கார் டெலிவரி செய்யப்படும் என்ற தகவலை தெரிவிப்பார்கள். அதன்படி காரை பெற்றுக் கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.