• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இணையத்தில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்வது எப்படி - மால்வேர், வைரஸ் அச்சுறுத்தல்களை தடுக்கும் டிப்ஸ்!

இணையத்தில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்வது எப்படி - மால்வேர், வைரஸ் அச்சுறுத்தல்களை தடுக்கும் டிப்ஸ்!

மாதிரி படம்

மாதிரி படம்

நீங்கள் பயணம் செய்யும் போது, ஹோட்டலில், ரயில் நிலையங்களில், உணவகத்தில், பொது Wi-Fi பயன்படுத்தும் போது, உங்கள் இணைய டிராஃபிக் நம்பகமானது என்று உறுதியாக கூற முடியாது.

  • Share this:
இணையத்தைப் பயன்படுத்தும் போதெல்லாம் பல விதமான அச்சுறுத்துல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, உலகமே வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலில், இணையம் ஒரு துணையாக மாறியிருந்தது. இந்நிலையில், ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட தரவு மட்டுமல்லாமல், வங்கி, கிரெடிட் கார்டுகள் விவரங்களையும் நீங்கள் இழக்க வேண்டிவரும்.

இணையம், உலகின் மூலை முடுக்கில் இருப்பவர்களை எல்லாம் இணைக்கிறது என்றே கூறலாம். எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், பொழுதுபோக்கு சம்மந்தப்பட்ட பொருட்கள் முதல் உயிர் காக்கும் மருந்துகள் வரை வாங்குவதற்கு இணையம் இன்றிமையாத தேவையாக மாறியிருந்தது. அன்றாட தேவைகளுக்குக் கூட இணையத்தை சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் இந்த சூழலை சாதகமாகப் பான்படுத்தி, மால்வேர், வைரஸ் மற்றும் போலி தளங்களை உருவாக்கி, யூசர்களிடம் இருந்து தரவுகளை மற்றும் பல விதமான தகவல்களைப் பெறுவதற்கு குறி வைக்கின்றனர். இணையத்தில் பாதுகாப்பாக பிரவுஸ் எப்படி என்பதற்கான டிப்ஸ் இங்கே.

பாஸ்வேர்டு மேனேஜர் பயன்படுத்தவும்

நீங்கள் பாதுகாப்பாக பிரவுஸ் செய்யவதற்கு, பாஸ்வேர்டு மேனேஜர் கருவி உதவியாக இருக்கும். இன்று, கிட்டத்தட்ட ஒவ்வொரு தளத்துக்கும் பாஸ்வேர்டு பயன்படுத்த வேண்டும். பல பாஸ்வேர்டுகளை உங்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதே போல, ஒரே பாஸ்வேர்டை அனைத்து இடங்களிலும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது. எனவே, நீங்கள் பாஸ்வேர்டு மேனேஜர் கருவியைப் பயன்படுத்தி, உங்கள் பாஸ்வேர்டுகளை சேமித்து வைக்கலாம். உங்கள் பாஸ்வேர்டுகள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும்.

உங்கள் பிரவுசரை அப்டேட் செய்யவும்

நீங்கள் பிரவுஸ் செய்யும் போது, பல விதங்களில் உங்கள் கணினி தாக்கப்படலாம். கிராஸ் சைட் ஸ்கிரிப்டிங் (XSS), இன்ஜெக்ஷன் தாக்குதல்கள், போலியான தளங்கள், MITM, உள்ளிட்ட பல தாக்குதல்களை உங்கள் பிரவுசர்கள் எதிர்கொள்ளலாம். இந்த தாக்குதல்களைத் தவிர்க்க நீங்கள் உங்களது மைக்ரோசாப்ட் எட்ஜ் அல்லது கூகிள் குரோம் பிரவுசர்களை அப்டேட் செய்ய வேண்டும்.

Also read... முற்றிலும் Block செய்யாமல் ஃபாலோயர்ஸை நீக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய ட்விட்டர்!

VPN பயன்படுத்தி பிரவுஸ் செய்யுங்கள்

நீங்கள் பயணம் செய்யும் போது, ஹோட்டலில், ரயில் நிலையங்களில், உணவகத்தில், பொது Wi-Fi பயன்படுத்தும் போது, உங்கள் இணைய டிராஃபிக் நம்பகமானது என்று உறுதியாக கூற முடியாது. அவ்வகையான இணைய இணைப்புகளை பயன்படுத்தும் போது, உங்கள் ஃபோன் அல்லது லேப்டாப்பின் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் வீடு அல்லது அலுவலகம் தவிர்த்து, பாதுகாப்பான இணையம் அல்லது பொது நெட்வொர்க் பயன்படுத்தினால், எப்போதும் நம்பிக்கையான VPN சேவையை பயன்படுத்தி பிரவுஸ் செய்யுங்கள்.

லைசன்ஸ் இல்லாத மென்பொருளை பயன்படுத்த வேண்டாம்

லைசன்ஸ் இல்லாத அல்லது பைரேட்டட் மென்பொருளை பயன்படுத்துவது உங்கள் பாதுகாப்பை நீங்களே கெடுத்துக் கொள்வது போலாகும். இவ்வகையான மென்பொருளை பயன்படுத்தும்போது, லைசன்ஸ் சோதனைகளை நீக்க அல்லது ரத்து செய்ய வேண்டியிருக்கும். உங்கள் லேப்டாப்பின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டிருக்கும் போது, வைரஸ், கீலாகர், ட்ரோஜன் போன்ற பல்வேறு தாக்குதலால் முழுவதுமாக செயலிழந்து போகலாம் அல்லது உங்கள் தரவுகள் அனைத்தும் திருடப்படலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: