Home /News /technology /

கூகுள் போன் ஆப் மூலம் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் Unknown Numbers-ஐ ப்ளாக் செய்வது எப்படி.?

கூகுள் போன் ஆப் மூலம் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் Unknown Numbers-ஐ ப்ளாக் செய்வது எப்படி.?

காட்சி படம்

காட்சி படம்

வெவ்வேறு ஸ்கின்கள் மற்றும் இன்டர்ஃபேஸ் உங்கள் மொபைலில் தெரியாத நம்பர்களை தடுக்கும் தனித்துவமான வழிகளை கொண்டுள்ளன.

தெரியாத நம்பர்களை (unknown numbers) எப்படி தடுப்பது என்ற தகவலை தேடும் ஆண்ட்ராய்டு ஃபோன் யூஸர்களா நீங்கள்.? ஆண்ட்ராய்டில் தெரியாத நம்பர்களை தடுக்கும் ஆப்ஷனை கூகுள் Google டிஃபால்ட்டாகவே வழங்குகிறது. வெவ்வேறு ஸ்கின்கள் மற்றும் இன்டர்ஃபேஸ் உங்கள் மொபைலில் தெரியாத நம்பர்களை தடுக்கும் தனித்துவமான வழிகளை கொண்டுள்ளன. இங்கே உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தெரியாத நம்பர்களில் இருந்து தொடர்ந்து கால்ஸ் வரும் தொல்லைகளை தடுக்க (block) நீங்கள் செய்ய கூடிய சில வழிகளை பார்க்க போகிறோம்.

உங்களிடம் கூகுள் பிக்சல் மொபைல் (Google Pixel phone) அல்லது கூகுள் ஃபோன் ஆப்ஸ் (Google Phone app) இன்ஸ்டால் செய்யப்பட்ட மொபைல் இருந்தால் நீங்கள் செய்ய கூடிய படிகளுடன் தொடங்குவோம். இது OnePlus Nord 2 5G மற்றும் பல்வேறு நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளிட்ட பல போன்களில் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. உங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸில் ஏற்கனவே இல்லை என்றால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் ஃபோன் ஆப்ஸையும் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். சாம்சங் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் சியோமி ஃபோன் மாடல்களில் தெரியாத நண்பர்களை ப்ளாக் (block) செய்வதற்கான வழிகளை இங்கே பார்க்கலாம்.

கூகுள் ஃபோன் ஆப்ஸ் (Google Phone app) மூலம் ஆண்ட்ராய்டு ஃபோனில் தெரியாத நம்பர்களை ப்ளாக் செய்வது எப்படி.?

கூகுள் ஃபோன் ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ள ஆண்ட்ராய்டு மொபைலில் unknown numbers-ஐ தடுக்க நீங்கள் எடுக்க வேண்டிய படிகளை தற்போது பார்க்கலாம்..

* முதலில் ஃபோன் (phone by google) ஆப்-ஐ ஓபன் செய்யவும்

* dialler search bar-ன் மேல் வலது பக்கம் இருக்கும் மூன்று டாட் பட்டனை Tap செய்யவும்

* இப்போது Settings சென்று Blocked numbers -ஐ Tap செய்யவும்

* Unknown option-ஐ டர்ன் ஆன் செய்யவும்

ஆண்ட்ராய்டில் "Unknown" என்ற சொல் உங்கள் கான்டேக்ட்களில் save செய்யப்படாத நம்பர்களுக்கானது அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் காலர் ஐடியில் 'private' அல்லது 'unknown' என்று தோன்றும் கால்ஸ்களுக்கு இது குறிப்பாக குறிக்கப்படுகிறது.

ALSO READ |  உலகின் மிக மெலிதான ஃபோல்டபுல் ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்த Honor - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

சாம்சங்கிலிருந்து ஆண்ட்ராய்டு ஃபோனில் தெரியாத நம்பர்களை எப்படி ப்ளாக் செய்வது.?

சாம்சங் ஆண்ட்ராய்டு ஃபோனில் unknown numbers-ஐ ப்ளாக் செய்ய பின்வரும் படிகளை பின்பற்றலாம்..

* phone by google-ஐ ஓபன் செய்து கொள்ளவும்

* த்ரீ-டாட் மெனுவைத் Tap செய்து பின்னர் Settings-ஐ தேர்ந்தெடுக்கவும்

* இப்போது Block numbers-ஐ Tap செய்யவும்

* உங்கள் மொபைலில் தனிப்பட்ட மற்றும் பிரைவேட் நம்பர்களை ப்ளாக் செய்ய Block unknown/ hidden numbers-ஐ அழுத்தவும்

ALSO READ |  உங்கள் தொலைந்து போன மொபைலில் உள்ள Paytm கணக்கை எவ்வாறு நீக்குவது?

சியோமி Android மொபைலில் தெரியாத நம்பர்களை ப்ளாக் செய்வது எப்படி.?

இங்கே MIUI 12.5-ஐ அடிப்படையாக கொண்ட சியோமி ஃபோனில் தெரியாத நம்பர்களை ப்ளாக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஒருவேளை உங்கள் சியோமி டிவைஸில் வேறு MIUI பதிப்பு இருந்தால் இந்த வழிமுறைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம்.

* phone by google-ஐ ஓபன் செய்யவும்

* search bar-ல் இருக்கும் த்ரீ-டாட் மெனுவை Tap செய்யவும்

* மெனுவிலிருந்து Settings-ஐ தேர்ந்தெடுக்கவும்

* இப்போது அடையாளம் தெரியாத காலர்ஸ்களிடமிருந்து வரும் அனைத்து அழைப்புகளையும் ப்ளாக் செய்ய Unknown என்பதை Tap செய்யவும்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Samsung, Smart Phone, Xiaomi

அடுத்த செய்தி