விளம்பரங்கள் இல்லாத உலகத்தை கற்பனை செய்வது கடினம் என்றாலும், நாம் எந்நேரமும் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்களில் விளம்பரங்கள் வருவதை யாரும் விரும்புவதில்லை. பல வெப்சைட்களும் ஆப்ஸ்களும் சில சமயங்களில் தொலைநோக்கு பார்வையற்றவையாகவும், அவற்றின் வருவாயை அதிகரிக்க விளம்பர நடைமுறைகளில் ஈடுபடுகின்றன. இது போன்ற தேவையற்ற விளம்பரங்களில் இருந்து விடுபடுவதற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பலர் தங்களது ஆண்ட்ராய்டு ஃபோன்களை ரூட் செய்ய தொடங்கினர்.
ஆனால் தற்போது விளம்பரங்களைத் ப்ளாகிங் செய்வது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நீங்கள் பிரவுசிங் செய்யும் போது நீங்கள் விளம்பரங்களைக் காணவில்லை என்பதை உறுதிப்படுத்த Third Party ப்ரவுசர்களை பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது.
எனினும் கூகுள் க்ரோம் மற்றும் Mozilla Firefox போன்ற பிரவுசர்களை பயன்படுத்தும் போது உங்கள் மொபைலில் விளம்பரங்களைக் காண்பீர்கள் என்பதே இதன் பொருள். இதில் நல்ல செய்தி என்னவென்றால் Private DNS எனப்படும் எளிய அம்சத்தின் மூலம் எல்லா ப்ரவுசர் ட்ரிக்ஸ் மற்றும் ஆப்ஸ்களுடன் வரும் விளம்பரங்களை கூட நீங்கள் ப்ளாக் செய்யலாம். தற்போது வரும் பெரும்பாலான நவீன ஆண்ட்ராய்டு ஃபோன்களில் Private DNS செட்டிங் ஆப்ஷன்களை காணலாம். மேலும் இதை விளம்பரங்களை ப்ளாக் செய்ய இவற்றை பயன்படுத்தலாம்.
உங்கள் Android மொபைலில் விளம்பரங்களை எப்படி தடுப்பது.?
Private DNS செட்டிங்கை கண்டறியுங்கள்:
Private DNS செட்டிங் பொதுவாக நெட்வொர்க் அன்ட் கனெக்டிவிட்டி (Network and Connectivity)அல்லது இது போன்ற ஏதாவது ஒன்றின் கீழ் இருக்கும். இல்லை என்றால் Settings-ன் சர்ச் பாருக்கு சென்று private DNS என்று டைப் செய்து கண்டுபிடியுங்கள். அபப்டியும் உங்கள் ஃபோனில் private DNS ஆப்ஷனை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்கள் டிவைஸ் இந்த அம்சத்தை சப்போர்ட் செய்யாது மேலும் இந்த ட்ரிக் உங்களுக்கு வேலை செய்யாது. இந்த அம்சம்பொதுவாக Android 9.0 Pie மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில் கான்ஃபிகர் செய்யப்படும்.
Private DNS provider hostname-ஐ செலக்ட் செய்யவும்..
உங்கள் டிவைஸில் இருக்கும் Private DNS அம்சத்தை டேப் செய்தால் Off, Auto மற்றும் Private DNS provider hostname ஆகிய மூன்று ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். இதில் கடைசியை தேர்வு செய்து உங்கள் own DNS ஹோஸ்ட்நேம் ப்ரொவைடரை என்டர் செய்வதற்கான column-ஐ பார்க்க வேண்டும்.
டைப் செய்யவும்..
குறிப்பிட்ட column-ல் dns.adguard.com என்று டைப் செய்து save என்பதை க்ளிக் செய்யவும். இதன் மூலம் இப்போது உங்கள் ஃபோன் AdGuard-ன் DNS சர்வரை பயன்படுத்துகிறது மற்றும் இது உங்கள் டிவைஸில் விளம்பரங்கள் வருவதைத் தடுக்கும்.
Also read... உடனடியாக அப்டேட் செய்யுங்கள்... ஐஃபோன், மேக்புக் யூஸர்களுக்கு அரசு எச்சரிக்கை
இந்த ட்ரிக் Spotify மற்றும் YouTube விளம்பரங்கள் போன்ற ஆப்ஸ் சார்ந்த விளம்பரங்களைத் தடுக்காது. அதே போல Private DNS அம்சத்தை பயன்படுத்தினால் Chartbeat போன்ற சில இணையதளங்களுடன் நீங்கள் கனெக்ட்டாக முடியாது. நீங்கள் Private DNS அம்சத்தை டிஸேபிள் செய்ய விரும்பினால் Private DNS ஆப்ஷனுக்கு சென்று Off என்ற முதல் ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mobile phone, Mobile Phone Users, Technology