அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி?

கோப்புப் படம்

அமேசான் பிரைம் உறுப்பினர்களாக இல்லாமல் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு அமேசானின் ஷாப்பிங் ஒப்பந்தங்களுக்கான ஆரம்ப அணுகலை மட்டுமே பெறுவார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பண்டிகை கால சலுகைகளுடன் இந்தாண்டு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சீசன் தொடங்கியுள்ளது. இதில் ஷாப்பிங் செய்ய விரும்பும் அனைவரும் அமேசான் பிரைம் உறுப்பினராக இருப்பதில் பல நன்மைகள் உள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்களாக இல்லாமல் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு அமேசானின் ஷாப்பிங் ஒப்பந்தங்களுக்கான ஆரம்ப அணுகலை மட்டுமே பெறுவார்கள்.

ஆனால் அமேசான் பிரைம் உறுப்பினராக இருந்தால் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் அமேசான் மியூசிக் ஆகியவற்றைப் பெறுவதுடன், இது அமேசானில் ஷாப்பிங் செய்வதில் இலவச விநியோகத்தையும் உள்ளடக்கும். இந்த உறுப்பினரின் சந்தா விலை ஒரு மாதத்திற்கு ரூ. 129 மற்றும் வருடாந்திர சந்தா திட்டத்திற்கு ரூ.999 ஆகும். இந்த பிரைம் உறுப்பினர் சந்தாவை, 30 நாட்களுக்கு இலவசமாக முயற்சி செய்வதற்கான விருப்பமும் உங்களுக்கு அளிக்கப்படுகிறது. அதன் பின்பு நீங்கள் பணம் செலுத்த விரும்புகிறீர்களா அல்லது நீண்ட காலத்திற்கு உறுப்பினராக இருக்க விரும்புகிறீர்களா என்று முடிவு செய்யுக் கொள்ளுங்கள்.

நீங்களும் அமேசான் பிரைம் உறுப்பினராக விரும்புவோருக்கு தேவையான எளிய வழிமுறைகளை தற்போது பார்ப்போம்.Also read... பயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

1: அமேசான் வலைத்தளப் பக்கத்தை திறக்கவும் அல்லது உங்கள் Android அல்லது iOS சாதனத்தில் அமேசான் ஆப்பை பதிவிறக்கவும்.

2: அந்த பயன்பாட்டில், மேல் இடதுபுறம் உள்ள மெனுவுக்குச் சென்று "ட்ரை பிரைம்" என்பதைத் கிளிக் செய்யவதுடன் இணையதளத்தில், மீண்டும் எக்ஸ்ட்ரீம் வலதுபுறத்தில் "ட்ரை பிரைம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3: "ஜாயின் பிரைம் மாதத்திற்கு ரூ.129" அல்லது "ஆண்டுக்கு ரூ.999" என்பதை தேர்வு செய்யவும்.

4: இப்போது நீங்கள் கட்டணச் செயல்முறையை தொடரலாம், எல்லாம் சிறப்பாக முடிந்தது.

இப்போது நீங்கள் அமேசானில் ஒரு பிரைம் உறுப்பினராக இருப்பீர்கள். மேலும் நீங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களுக்கான உடனடி அணுகல் மற்றும் ஆரம்ப ஷாப்பிங் தொடர்பான ஒப்பந்தங்களுக்கான அணுகலையும் பெறுவீர்கள். மேலும் பல சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் டெலிவரி கட்டணங்கள் இன்றி ஷாப்பிங் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: