Home /News /technology /

உங்கள் வாட்ஸ்அப் சேட்களை Google Drive-ல் பேக்கப் எடுப்பது மற்றும் ரீஸ்டோர் செய்வது எப்படி?

உங்கள் வாட்ஸ்அப் சேட்களை Google Drive-ல் பேக்கப் எடுப்பது மற்றும் ரீஸ்டோர் செய்வது எப்படி?

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Chats | உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் முதன்மையானது வாட்ஸ்அப். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் எளிதாக தொடர்பு கொள்ள மற்றும் அரட்டை அடிக்க யூஸர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வாட்ஸ்அப் வழியே உங்களுக்கு ஷேர் செய்யப்படும் மீடியாக்கள் அல்லது டாக்குமென்ட்ஸ்கள் மற்றும் நீங்கள் செய்யும் சேட்கள் முக்கியமானவையாக இருக்க கூடும். இவை உங்கள் டிவைஸிலிருந்து அழிந்து போனால் நீங்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம். அதனால் தான் உங்கள் எல்லா chats-களையும் பேக்கப் எடுக்க வாட்ஸ்அப் அனுமதிக்கிறது.

உங்களது அனைத்து வாட்ஸ்அப் சேட்களையும் கூகுள் டிரைவில் எளிதாக பேக்கப் எடுத்து கொள்ள, உங்கள் மொபைலில் கூகுள் அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்பட வேண்டும். iOS யூஸர்களுக்கான வாட்ஸ்அப்பானது Google Drive-ஐ பேக்கப்பிற்காக பயன்படுத்தாது. மாறாக மீடியா மற்றும் சேட்களை பேக்கப் எடுக்க iCloud-ஐ பயன்படுத்துகிறது.

Google Drive-ல் வாட்ஸ்அப் சேட்களை எப்படி பேக்கப் எடுக்கலாம்?

1. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள வாட்ஸ்அப்-பிற்கு சென்று Settings-ற்கு செல்லவும்.

2. பின்னர் Chats என்பதை டேப் செய்து, அதனை தொடர்ந்து Chat backup மற்றும் இறுதியாக Back up என்பதை டேப் செய்யவும்.



3. பின் கீழே காணப்படும் Google Drive settings-ற்கு சென்று Backup to Google drive ஆப்ஷனை செலக்ட் செய்தால் அதன்கீழே நீங்கள் எந்த நேரத்திலும் விரும்புகிறீர்களோ அப்போது உங்கள் சேட்களை Google Drive-ல் பேக்கப் எடுப்பதற்கான மேனுவல் ஆப்ஷனை பெறுவீர்கள்.

4. எப்போதெல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும் என்ற ஆப்ஷனை தேர்வு செய்த பிறகு, சேட் ஹிஸ்ட்ரி மற்றும் மீடியாவை பேக்கப் எடுக்க விரும்பும் Google அக்கவுண்ட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Also Read : இனி வாட்ஸ்அப்-பில் டெலிட் செய்த மெசெஜை திரும்ப எடுக்கலாம்... அட்மினுக்கு புதிய அதிகாரம்.. வருகிறது லேட்டஸ்ட் அப்டேட்! 

5. பேக்கப் எடுக்க பயன்படுத்த விரும்பும் நெட்வொர்க்கை தேர்வுசெய்ய, இப்போது Back up என்பதை டேப்செய்து மொபைல் டேட்டா அல்லது வைஃபை-யை தேர்வு செய்யலாம். பெரும்பாலும் மொபைல் நெட்வொர் கூடுதல் டேட்டாவை இழுக்கும் என்பதால் வைஃபை-யை பயன்படுத்தி பேக்கப் எடுப்பது நல்லது.

Google Drive-லிருந்து உங்கள் பேக்கப் வாட்ஸ்அப் சேட்களை ரீஸ்டோர் செயல்முறை எளிதானது மற்றும் சில நிமிடங்கள் ஆகும். உங்கள் சேட்களை ரீஸ்டோர் செய்ய பேக்கப் எடுக்க பயன்படுத்தப்பட்ட அதே ஃபோன் நம்பர் மற்றும் கூகுள் அக்கவுண்ட்டை பயன்படுத்த வேண்டும்.



Google Drive-விலிருந்து உங்கள் வாட்ஸ்அப் சேட்களை ரீஸ்டோர் செய்வது எப்படி?

* WhatsApp-ஐ ரீ இன்ஸ்டால் செய்து உங்கள் மொபைல் நம்பரை வெரிஃபை செய்ய வேண்டும்

Also Read : தன்னுடைய பாதுகாப்பு அம்சங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்த வாட்ஸ் அப்

* அடுத்ததடுத்த படிகளின் போது Google Drive-லிருந்து உங்கள் சேட்களையும், மீடியாவையும் ரீஸ்டோர் செய்வதற்கு கேட்கப்படும் போது Restore பட்டனை அழுத்த வேண்டும்.

* ரீஸ்டோரேஷன் ப்ராசஸ் முடிந்ததும் Next-ஐ டேப் சேய்யவும்
Published by:Selvi M
First published:

Tags: Google, Technology, Whatsapp Update

அடுத்த செய்தி