• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஒரிஜினல் ஐபோனை எவ்வாறு அடையாளம் காணலாம் - டிப்ஸ்கள் இங்கே!

ஒரிஜினல் ஐபோனை எவ்வாறு அடையாளம் காணலாம் - டிப்ஸ்கள் இங்கே!

Apple I-Phone - Real vs fake

Apple I-Phone - Real vs fake

விலை உயர்ந்த ஆப்பிள் தயாரிப்புகள் சில நேரங்களில் மார்க்கெட்டில் விலை மலிவாக கிடைக்கும் வகையில் போலிகளாக புழக்கத்தில் இருந்து வருகின்றன.

  • Share this:
ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் பல ப்ராடக்ட்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டு வரும் மிக விலை உயர்ந்த மற்றும் நம்பகமான தயாரிப்புகளாக இருந்து வருகின்றன. உலகம் முழுவதும் பெற்றுள்ள பிரபலம் மற்றும் புகழ் காரணமாக, போலிகளை தயாரித்து விற்பவர்களுக்கு ஐபோன் நிறைய வாய்ப்பை வழங்கும் ஒன்றாகவும் இருக்கிறது. விலை உயர்ந்த ஆப்பிள் தயாரிப்புகள் சில நேரங்களில் மார்க்கெட்டில் விலை மலிவாக கிடைக்கும் வகையில் போலிகளாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஒரிஜினலை போலவே மிகவும் நேர்த்தியாக காணப்படும் போலி ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் அக்சஸரீஸை சில நேரங்களில் கண்டறிவது கடினம்.

குறிப்பாக ஐபோனின் பழைய மாடல்கள் என்ற பெயரில் அதிகமான போலிகள் விற்கப்பட்டு வருகின்றன. அதே போல பெரும்பாலும் பல போலி விற்பனையாளர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்தி ஐபோன்கள் மற்றும் சார்ஜர்கள் போன்ற போலி ஆப்பிள் தயாரிப்புகளை விற்று வருகின்றனர். உண்மையான ஐபோன் அல்லது ஆப்பிள் அக்சஸரீஸ்களை தான் ஒருவர் வாங்குகிறாரா என்பதை உறுதி செய்து கொள்ள உதவும் சில அடிப்படை மற்றும் அத்தியாவசிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

Also read:  NoroVirus: வயநாட்டில் பரவும் நோரோ வைரஸ் பாதிப்பு: கேரளாவுக்கு அடுத்த அதிர்ச்சி..

தோற்றம்..

ஐபோன் அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் உண்மையா அல்லது போலியா என்பதை சரி பார்க்க மிகவும் பொதுவான வழி அதன் தோற்றத்தை கூர்ந்து கவனிப்பது. ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் அதன் ஹார்டுவேர் மிகவும் ஸ்ட்ராங்காக கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் போலி ஐபோனில், அதன் ஹார்டுவேர் வீக்காக கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே ஐபோனின் பாடி அல்லது அதன் ஹார்டுவேர் வீக்காக இருப்பதை காட்டும் வகையில் மெலிதாக இருந்தால் அது போலியானதாக இருக்க கூடும். அதை வாங்காமல் தவிர்க்க வேண்டும்.

வண்ணம்..

ஆப்பிள் நிறுவனமானது மாடலைப் பொறுத்து ஐபோனை சில தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணங்களில் விற்று வருகிறது. எனவே குறிப்பிட்ட மாடல் ஐபோன் என்று கூறி போலியை தலையில் கட்ட நினைத்தால், ஏற்கனவே என்னென்னென கலரில் அந்த மாடல் கிடைக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கும் பட்சத்தில் எளிதாக மோசடியிலிருந்து தப்பிக்கலாம்.

Also read:  எல்லையில் சீன கிராமம்: மோடி பயந்துட்டாரு - ராகுல் காந்தி விமர்சனம்

சீரியல் நம்பர்..

ஆப்பிள் நிறுவன தயாரிப்பை வாங்கும் முன் அதன் சீரியல் நம்பரை எப்போதும் சரிபார்க்க தவற கூடாது. ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று இதை கிராஸ் செக் செய்து கொள்ளலாம். மேலும் IMEI நம்பர் மூலம் உண்மையான ஆப்பிள் தயாரிப்பை அடையாளம் காண முடியும். இவற்றின் மூலம் ஒருவர் புதிய ஐபோன் அல்லது பயன்படுத்தப்பட்ட ஐபோன் வாங்குகிறார்களா என்பதை அறிந்து கொள்ளலாம். போனின் செட்டிங்ஸ் சென்று General-ல் இருக்கும் About-ஐ பார்க்க வேண்டும். பட்டியலிடப்பட்ட IMEI நம்பர் தெரியும் வரை ஸ்க்ரால் செய்ய வேண்டும். குறிப்பிட்ட போனில் IMEI அல்லது சீரியல் நம்பர் இல்லாவிட்டால், அது போலி ஐபோன்.

ஆப்ரேட்டிங் சிஸ்டம்..

ஐபோன் iOS மூலம் இயங்குகிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் சில போலி தயாரிப்பாளர்கள் ஐபோனின் ஆப்ரேட்டிங் சிஸ்டமில் ஆண்ட்ராய்டை பயன்படுத்தி இருப்பார்கள். எனவே போனை வாங்கும் முன் அதில் என்ன OS இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்வது அவசியம்.

வாய்ஸ் அசிஸ்டென்ட்:

ஐபோனில் மட்டுமே வேலை செய்யும் வாய்ஸ் அசிஸ்டென்ட்டான Siri, போலி ஐபோன்களில் பெரும்பாலும் இருப்பதில்லை, எனவே Siri வேலை செய்கிறதா அல்லது இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஸ்டோரேஜ்..

போலி ஐபோன்கள் பொதுவாக எக்ஸ்டென்டட் மெமரி ஆப்ஷன்களை கொண்டு வருகின்றன. எனவே ஒரு ஐபோன் மைக்ரோடி கார்டு ஸ்லாட்டை சப்போர்ட் செய்தால் அது போலியானது!

பவர் அடாப்டர்ஸ் மற்றும் சார்ஜர்ஸ்..

ஐபோன்களுக்கான பவர் அடாப்டர்ஸ் மற்றும் சார்ஜர்ஸ் மிகவும் காஸ்டலியானவை. பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். உதாரணமாக ஐபோனுக்கான 20W USB-C பவர் அடாப்டரின் விலை ரூ.1900. ஆனால் போலி ஆப்பிள் அக்சஸரீஸ் இதை விட மலிவு விலையில் இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: