ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் பேமெண்ட்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் பேமெண்ட்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் பேமெண்ட்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் பேமெண்ட்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பேமெண்ட்டை ஆக்டிவேட் செய்வது எப்படி என்ற தகவலை அறிந்துகொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மெசன்ஜர் தளமான வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கான UPI பேமெண்ட் சேவைகளை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த வசதியின் மூலம் வாட்ஸ்அப் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

இதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்துடன் (NPCI) இணைந்து, வாட்ஸ் அப் நிறுவனம் இந்த பேமெண்ட் அம்சத்தை உருவாக்கியுள்ளது. வாட்ஸ்அப் பேயில் பணத்தை மாற்ற பயனர்கள் இந்தியாவில் வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டு வைத்திருக்க வேண்டும்.

உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட UPI ஐ நீங்கள் கொண்டிருக்கவில்லை என்றாலும், அதனை வாட்ஸ்அப் மூலம் செய்யலாம். இந்தியாவின் பத்து வெவ்வேறு பிராந்திய மொழிகளில் வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பயனர்கள் UPI பேமெண்ட்டை பெற Android அல்லது iOS க்கான வாட்ஸ் அப்பின் தற்போதைய பதிப்பை கொண்டிருக்க வேண்டும். இதைத்தொடர்ந்து, வாட்ஸ்அப்பில் பணம் அனுப்ப, கீழே பட்டியலிடப்பட்டுள்ள நடைமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

  • உங்கள் மொபைலில் வாட்ஸ் அப் மெசன்ஜர் செயலியை திறக்கவும், அதில் வலதுபுறத்தில் மூன்று புள்ளி வைத்த ஒரு ஐகான் தோன்றும், அதனை அழுத்தவும்.
  • அதில், பேமெண்ட் என்ற ஆப்ஷன் காட்டும், அதனை அழுத்தினால், வங்கி பட்டியில்கள் உங்கள் திரையில் தோன்றும். குறிப்பு: இந்த வங்கி பட்டியலில், நீங்கள் வாட்ஸ் அப்பில் பயன்படுத்தும், உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன்பின்னர், நீங்கள் ஏற்கனவே UPI அக்கவுண்ட் வைத்திருந்தால், UPI பின் நம்பர் மட்டும் கேட்கும், அப்படி இல்லாத பட்சத்தில், உங்களது டெபிட் கார்டு விவரங்களை கேட்கும்.
  • மேற்கூறிய தகவல்களை சரியாக கொடுக்கும் பட்சத்தில் உங்கள் வாட்ஸ் அப் UPI பேமெண்ட் வெற்றிகரமாக நிறைவுபெறும். இனி உங்கள் பணப்பரிவர்த்தனையை நீங்கள் வாட்ஸ் அப் வழியாகவே பாதுகாப்பாக மேற்கொள்ளலாம்.

First published:

Tags: WhatsApp