இந்தியாவில் அதிவேக தகவல் தொலைத்தொடர்பு 5ஜி சேவையானது கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 1ஆம் தேதி சோதனை ஓட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட 5ஜி சேவை, பின்னர் படிப்படியாக முன்னணி நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் வழங்குகின்றன.
எனவே, முன்னணி நிறுவனங்களில் வசிக்கும் மக்கள் 5ஜி சேவையை தற்போதே பெறலாம். புதிய ரக ஆப்பிள் ஐபோன் (ஐபோன் 12 மற்றும் அதற்கும் மேல்) வைத்திருப்பவர்களுக்கு இப்போது அவர்கள் போனில் 5ஜி சேவைக்கான வசதி கிடைத்திருக்கும். அப்படி இருக்க இந்த பயனாளர்கள் 5ஜி சேவை நடைமுறையில் இருக்கும் முன்னணி நகரங்களில் வசித்தால், தற்போதே தங்கள் போனில் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.
ஐபோனில் ஜியோ 5ஜி சேவையை அக்டிவேட் செய்வது எப்படி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் போது வாங்கிய 5G ஸ்பெக்ட்ரம் கலவையை ஜியோ கொண்டுள்ளது. சிறந்த உட்புற 5G கவரேஜை உறுதியளிக்கும் 700 MHz லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரம் கொண்ட ஒரே ஆப்பரேட்டர் ஜியோ ஆகும். எனவே, ஐபோன் 12 மற்றும் அதற்கு மேல் உயர்ரக ஐபோன் வைத்திருப்பவர்கள் போனில் 5ஜி சேவையை ஆக்டிவேட் செய்து அப்படி இருக்க ஜியோ 5ஜி சேவையை போனில் ஆக்டிவேட் செய்ய 'Jio 5G Welcome Program’ திட்டத்தில் இணைய வேண்டும். இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக நடைமுறையில் உள்ளது.
இதையும் படிங்க: Jio New Plan | ஒரே ரீசார்ஜ் மூலம் 50 ஜிபி டே்டடா.... ஜியோ சூப்பர் பிளான்
ஜியோ வாடிக்கையாளர்கள் MyJio அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதற்குள் சென்று Sign Up செய்ய வேண்டும். இதன்பின்னர் அடுத்த நில நாள்களுக்குள் நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து விட்டீர்கள் என்று செல்போனுக்கு எஸ்எம்எஸ் வரும். அதன்பின்னர் பயனாளர்கள் குறைந்தபட்சம் ரூ.239 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Jio, Reliance Jio