Home /News /technology /

மொபைல் போன் கதிர்வீச்சு நம் மூளையின் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன தெரியுமா?

மொபைல் போன் கதிர்வீச்சு நம் மூளையின் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன தெரியுமா?

மொபைல் போன் கதிர்வீச்சு

மொபைல் போன் கதிர்வீச்சு

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு ஆரம்பமானது முதல் மொபைல், டேப், ஐ-பாட் போன்ற மின்னணு சாதனங்களுடன் செலவழிக்கும் நேரம் மேலும் அதிகரித்துள்ளது என ஒரு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

மொபைல் கதிர்வீச்சுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற விஷயம் மொபைல் டெக்னாலஜி வளர ஆரம்பித்த காலத்தில் இருந்தே அனைவருக்கும் கூறப்பட்டு வருகிறது. இருந்தும் கூட இன்னும் இதன் உண்மையான விபரீதம் புரியாமல் மக்கள் மொபைல் பயன்பாடுகளில் மூழ்கி உள்ளனர். மேலும் பணிச்சூழல் காரணமாக அன்றாட வாழ்வில் ஒரு நாள்கூட மொபைல் இல்லாமல் கடத்துவது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதிலும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு ஆரம்பமானது முதல் மொபைல், டேப், ஐ-பாட் போன்ற மின்னணு சாதனங்களுடன் செலவழிக்கும் நேரம் மேலும் அதிகரித்துள்ளது என ஒரு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மொபைல் போன் கதிவீச்சுகள் மூளை செயல்பாட்டை எந்த அளவுக்கு பாதிக்கிறது என மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார். எய்ம்ஸ் நரம்பியல் துறையின் எச்.ஓ.டி மருத்துவர் மஞ்சரி திரிபாதி கூறியதாவது, “அதிகப்படியான மொபைல் பயன்பாட்டின் விளைவாக தலைவலி, தூக்கமின்மை, நினைவாற்றலில் இடையூறு, மனசோர்வு, எரிச்சல் உணர்வு, மனக்கிளர்ச்சி, கை வலி, கழுத்து வலி, பார்வை குறைவு மற்றும் பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்" என்று கூறியுள்ளார். மொபைல் கதிர்வீச்சு மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிய, எய்ம்ஸ் மற்றும் Syenergy Environics இணைந்து மூளையின் செயல்பாட்டில் அதன் விளைவுகளை ஆராய ஒரு மருத்துவ பரிசோதனையை நடத்தியது.

மொபைல் போன் கதிர்வீச்சு


ஆய்வின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் மொபைல் தொலைபேசிகளிலிருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் மூலம் மூளை அலை வடிவத்தின் அதிர்வெண்ணில் மாற்றங்கள் காணப்பட்டன. குறிப்பாக ஆய்வில் பங்கேற்றவர்கள் நரம்பியல் கோளாறு தொடர்பான வரலாறு இல்லாத ஆரோக்கியமான நபர்களாக இருந்தனர். இது குறித்து பேசிய சினெர்ஜி என்விரானிக்ஸின் எம்.டி., அஜய் போடார் மேலும் கூறுகையில், “எய்ம்ஸுடனான எங்கள் ஆய்வுக்காக, மூளையில் மின் செயல்பாட்டை கண்காணிக்கும் EEG (electroencephalogram) மதிப்பீடு செய்ய நாங்கள் முடிவு செய்தோம். அடிப்படையில் நான்கு அலைகள் நம் மூளையில் இருந்து வெளிப்படுகிறது.

அவை, ஆல்பா, பீட்டா, தீட்டா மற்றும் டெல்டா அலைகள் ஆகியவை ஆகும். அவை மூளையின் வெவ்வேறு செயல்பாடுகளைக் குறிக்கின்றன. அதன் உட்பொருளைப் படித்தோம். இந்த ஆய்வுக்காக 30 தன்னார்வலர்களின் புள்ளிவிவர அளவைத் கணக்கெடுக்க மிகவும் அதிநவீன கருவியைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களை என்விரோசிப் இல்லாமல் 5 நிமிடங்கள் தொலைபேசியில் பேச வைத்தோம். பின்னர் என்விரோசிப் மூலம் 5 நிமிடங்கள் பேச வைத்தோம். பிறகு அவர்களுக்கு ஓய்வு அளித்து அவர்களின் மூளையின் செயல்பாட்டை சோதித்தோம்.

மேலும் அந்த தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்ட போது, அமைதியான உணர்வுடன் தொடர்புடைய ஆல்பா மற்றும் தீட்டா அலைகள் சீராக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது போல காட்டியது. அதாவது ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது" எனக் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய மருத்துவர் திரிபாதி மேலும் கூறுகையில், “எய்ம்ஸில் நாங்கள் செய்த சோதனைகளின்படி, என்விரோசிப் உடன் மொபைல் போன் சரி செய்யப்பட்ட போது ஆல்பா மற்றும் தீட்டா அலைகள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டின. அதேபோல் என்விரோசிப் இல்லாமல் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தும் போது அது மிகவும் எதிர்மறையாக இருந்தது. இந்த அலைவடிவங்கள் மனதை அமைதிப்படுத்தும் நிலையுடன் தொடர்புடையவை. ” என கூறியுள்ளார்.

மொபைல் போன் கதிர்வீச்சு


மொபைல் போன் கதிர்வீச்சுகள் நமக்கு ஏன் தீங்கு விளைவிக்கின்றன?

மொபைல் போன் கதிர்வீச்சால் இரண்டு விளைவுகள் உண்டாகின்றன. அதில் ஒன்று வெப்ப விளைவு. சுமார் ஒரு மணி நேரம் நீங்கள் தொலைபேசியை காதில் வைத்து பேசும் போது, அது ஒரு நிமிடத்தில் மைக்ரோவேவ் கொடுக்கும் அதே வெப்பத்தை உங்களுக்குத் தருகிறது. மற்றொன்று உயிரியல் விளைவு. மனித உடலில் உள்ள செல்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. ஆனால் மொபைல் போன் கதிர்வீச்சுகள் இந்த தகவல்தொடர்புக்கு இடையூறாக அமைகின்றன. மேலும் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட என்விரோசிப்பை, இயற்கை பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

மொபைல் கதிர்வீச்சு மெகாஹெர்ட்ஸ் வரம்பில் பாய்கிறது. அதே நேரத்தில் சிப் பயன்படுத்தும் பொது டெராஹெர்ட்ஸில் அதாவது குறைந்த தீவிரம் கொண்ட அலைகளாக பாய்கிறது. என்விரோசிப் மரம், பளிங்கு போன்ற இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டதால் இயற்கை அதிர்வுகளைக் கொண்டுள்ளன. இயற்கையான பொருட்கள் என்பதால் அவை சீரற்ற அலைகளை உருவாக்குகின்றன. எனவே அவை தொலைபேசியிலிருந்து வெளியாகும் முறையான அலைவடிவத்தை ஒரு சீரற்ற வடிவத்தில் கொண்டு செல்கின்றன. இது நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொபைல் போன் கதிர்வீச்சு


மொபைல் போன்கள் நம் வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டன என்பதை நாம் அறிந்திருக்கும் அதேவேளையில் நாம் மிக எச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியம். எல்லா மொபைல் போன் நிறுவனங்களும் தொலைபேசி பயன்பாடு தொடர்பான எச்சரிக்கை தகவலை தங்களது வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறிதான். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பேச்சு நேரத்தை கட்டுப்படுத்தவும், எந்த நேரத்திலும் சாதனத்தை உங்கள் உடலில் இருந்து தொலைவில் வைத்திருக்கவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். கூடுதலாக, ஹேண்ட்ஸ்ஃப்ரீயில் தொலைபேசியைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறார்கள். எனவே அதன் முக்கியமான பயன்களை மட்டுமே அறிந்து மொபைல் போன்களை அளவாக உபயோகப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Mobile networks

அடுத்த செய்தி