• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • FASTag - ஐ ஈஸியாக வாங்குவது எப்படி? இங்கெல்லாம் ரீசார்ஜ் செய்யலாம்!

FASTag - ஐ ஈஸியாக வாங்குவது எப்படி? இங்கெல்லாம் ரீசார்ஜ் செய்யலாம்!

Amazon.in இணையதளம் மூலமாகவும், கூகுள் பே (Google pay), போன் பே (Phone pay), ஏர்டெல் payments உள்ளிட்ட மொபைல் பேமண்ட் செயலிகள் மூலமாகவும் FASTag - ஐ வாங்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நான்கு சக்கர வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கு FASTag கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அதனை ஈஸியாக வாங்குவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின் ஒருபகுதியாக நான்கு சக்கர வாகனங்கள் சங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த FASTag கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்பதை தவிர்க்கவும், சுங்கச்சாவடிகளில் சில்லறை கொடுப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது, எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, காற்று மாசுபாட்டை குறைக்கும் விதமாக இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. மேலும், சுங்கக் கட்டணம் வசூலிப்பில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும் FASTag உதவும் என மத்திய அரசு கூறியுள்ளது. கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களும், கனரக வாகனங்களும் FASTag - ஐ வாங்குவதற்கு பிப்ரவரி 15ம் தேதி வரை கொடுக்கப்பட்டிருக்கிறது.  

FASTag -ஐ எங்கு வாங்கலாம்?

FASTag வாங்குவது மிகவும் ஈஸியான நடைமுறையாகும். உங்கள் காருக்கு FASTag வாங்க வேண்டுமென்றால், காரின் ஆவணங்கள் மற்றும் உங்களின் அடையாள சான்றுகளைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் FASTag -ஐ வாங்கிக்கொள்ளலாம். Amazon.in இணையதளம் மூலமாகவும், கூகுள் பே (Google pay), போன் பே (Phone pay), ஏர்டெல் payments உள்ளிட்ட மொபைல் பேமண்ட் செயலிகள் மூலமாகவும் FASTag - ஐ வாங்கலாம். மேலும், எச்டிஎப்டி (HDFC), ஐசிஐசிஐ வங்கி (icici bank), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), கொடாக் வங்கி (Kotak Bank), ஆக்சிஸ் வங்கி (Axis Bank) ஆகிய இடங்களிலும் ஃபாஸ்டேக்கை வாங்கிக்கொள்ளலாம்.

FASTag விலை : 

இரண்டு விதமான விலைகளில் ஃபாஸ்டேக் கிடைக்கிறது. முதலாவது உங்கள் வாகனத்தின் வகை, அதாவது கார், ஜீப் அல்லது வேன், பஸ், டிரக் உள்ளிட்ட இலகுவான வணிக வாகனங்களை பொறுத்தது. இரண்டாவது நீங்கள் ஃபாஸ்டேக் வாங்கும் வங்கியின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை பொறுத்தது. Paytm-லிருந்து 500 ரூபாய்க்குFASTag -ஐ வாங்கலாம். அதில் Refundable amount 250 ரூபாயும், Deposit amount 150 ரூபயாகவும் உள்ளது. ஐ.சி.ஐ.சி வங்கி மூலம் FASTag - ஐ வாங்கினால் டெபாசிட் தொகை 200 ரூபாய் செலுத்த வேண்டும். பாஸ்டேக் கட்டணம் 99 ரூபாயும், மினிமம் பேலன்ஸ் 200 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வங்கிகளில்  FASTag வாங்கினால் கூடுதல் காஷ்பேக் ஆஃபர் மற்றும் சலுகைகளை வழங்கப்படுகின்றன.

FASTag - ரீச்சார்ஜ் :

FASTag - ஐ ரீச்சார்ஜ் செய்வது மிகவும் ஈஸியானது.  முதலாவதாக, வங்கிகள் மூலம் நீங்கள் FASTag -ஐ வாங்கியிருந்தால், அந்த வங்கிகள் கொடுத்திருக்கும் வாலட் (wallet) மூலம் இன்டர்நெட் பேங்கிங்கில் ரீச்சார்ஜ் செய்யலாம், மேலும், வங்கிகள் கொடுத்திருக்கும் சலுகைகளைப் பொறுத்து கிரெடிட் கார்டு (Credit card), டெபிட் கார்டு (Debit card) ஆகியவை வழியாகவும் பாஸ்ட்டேக்கை ரீச்சார்ஜ் செய்யலாம். இரண்டாவதாக, மொபைகளில் பயன்படுத்தும் பேமண்ட் செயலிகளான Paytm மற்றும் PhonePe ஆகியவற்றின் மூலமும் ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம். வங்கி மூலம் ரீச்சார்ஜ் செய்வதைவிட இந்த பேமண்ட் செயலிகள் மூலம் ரீச்சார்ஜ் செய்வது மிகவும் எளிய நடைமுறையாகும்.

Amazon Pay-வை பயன்படுத்தி ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா( baroda bank), சிட்டி யூனியன் பேங்க், எக்யூவிட்டாஸ் பேங்க், ஹெச்.டி.எப்.சி, கொடாக் மஹிந்திரா, பஞ்சாப் நேஷனல் உள்ளிட்ட வங்கிகளின் வழியாகவும்  FASTags-ஐ ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம். ஸ்டேட் பேங்க், ஆக்சிஸ் வங்கி, Paytm பேமண்ட்ஸ் வங்கிசேவைகளும் விரைவில் இந்த சேவைகளுடன் இணைக்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. Amazon Pay மூலம் ரீச்சார்ஜ் செய்ய விரும்புவோர் Amazon Pay > Bills > FASTag என்ற வழிமுறையை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.

PhonePe;  மூலம் FASTags - ஐ ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம். போன் பே செயலி மூலம் ஏர்டெல் பேமண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பரோடா வங்கி, சிட்டி யூனியன், ஈக்விடாஸ் பைனான்ஸ், பெடரல் வங்கி, எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, IDFC வங்கி, IDBI First Bank ஆகிய வங்கிகளின் சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், கொடாக் மஹிந்திரா, கரூர் வைஸ்யா, Paytm Payments, Punjab National வங்கி, ஸ்டேட் பேங்க் ஆகிய வங்கிகளின் சேவைகளும் போன் பே செயலியில் வழங்கப்படுகின்றன. PhonePe செயலில் ஃபாஸ்டேக்கை ரீச்சார்ஜ் செய்ய விரும்புவோர் Recharge And Bills > See All > Recharges > FASTag Recharge ஆகிய வழிமுறைகளைப் பின்பற்றி ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Also read... ITRஐ தாக்கல் செய்ய தயாரா? அதற்கு முன்னர் நீங்கள் கவனிக்க வேண்டியவை!

Paytm மூலம் FASTag வாங்க முடியாது என்றாலும் ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம். வேறு வங்கிகளிலோ, பேமண்ட் செயலிகள் மூலமாக ஃபாஸ்டேக்கை வாங்கியிருந்தால் Paytm மூலம் ரீச்சார்ஜ் செய்யலாம். ஆக்சிஸ் வங்கி, (Axis Bank), பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda), ஈக்விடாஸ் பைனான்ஸ் (Equitas Small Finance Bank), HDFC, IDFC First, IndusInd, Kotak Mahindra Bank ஆகிய வங்கிகளின் சேவைகளை பெறலாம். Paytm app-ல் My Paytm > All Services > Manage FASTag வழிமுறைகளை பின்பற்றி ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Google Pay வழியாகவும் FASTag வாங்கி, ரீச்சார்ஜ் செய்யலாம்.  ஹெச்.டி.எப்.சி வங்கியில் வாங்கிய FASTags கூகுள் பே-வில் இணைத்துக்கொள்ளலாம். கொடாக் மஹிந்திரா, IDFC First Bank, IndusInd Bank, Axis Bank, Bank of Baroda, ICICI Bank, Equitas Small Finance Bank, Federal Bank ஆகிய வங்கிகளின் சேவைகளும் கூகுள் பே வழங்குகிறது. பிஸினஸ் பில் ஆப்சனில் சென்று FASTag - ஐ தேட வேண்டும். அங்கு, சேவை வழங்கும் வங்கிகளின் பெயர்கள் இருக்கும். அதில் உங்களின் வங்கிச்சேவையை தேர்தெடுத்து ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: