ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உலகின் மிக மெலிதான ஃபோல்டபுல் ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்த Honor - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

உலகின் மிக மெலிதான ஃபோல்டபுல் ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்த Honor - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

மெலிதான ஃபோல்டபுல் ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்த Honor

மெலிதான ஃபோல்டபுல் ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்த Honor

ஹானர் மேஜிக் V-யின் அவுட்டர் ஸ்கிரீன் ​​6.45-இன்ச் வளைந்த OLED நானோ மைக்ரோகிரிஸ்டலின் டிஸ்ப்ளே 21.3:9 விகிதத்துடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 1,080x2,560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பிரபல ஸ்மார்ட் ஃபோன் பிராண்டான ஹானர் (Honor)  திங்களன்று (ஜனவரி 10) தனது முதல் ஃபோல்டபுல் ஸ்மார்ட் ஃபோன் (Foldable Smartphone) அதாவது மடிக்க கூடிய ஸ்மார்ட் ஃபோனை சீனாவில் அறிமுகம் செய்து விரைவில் அங்கு விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்து உள்ளது. தங்கள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபுல் ஸ்மார்ட் ஃபோனின் பெயர் ஹானர் மேஜிக் வி (Honor Magic V) என்றும் அறிவித்து இருக்கிறது ஹானர் நிறுவனம். இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் வரும் ஜனவரி 18 அன்று சீனாவில் ஓபன் சேலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மொபைல் குவால்காமின் முதன்மையான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 SoC-யுடன் (Snapdragon 8 Gen 1 SoC) வரும் முதல் ஃபோல்டபுல் ஸ்மார்ட் ஃபோன் ஆகும். இது ஒரு தனி செக்யூரிட்டி சிப், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், இரண்டு ஹோல்-பஞ்ச் ஃப்ரன்ட் கேமராக்கள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாட்டர் டிராப் ஹீன்ச் (waterdrop hinge technology) டெக்னலாஜியுடன் வருகிறது. மேலும் இது ஃபோல்டபுல் ஃபோன்களில் மெலிதானது என்றும் கூறப்படுகிறது.

Honor Magic V விலை :

புதிய Honor Magic V-யின் 12GB ரேம்+ 256GB ஸ்டோரேஜ் வெர்ஷன் 9,999 யுவான் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,16,000-ஆக உள்ளது. அதே போல 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் வெர்ஷனின் விலை சீன மதிப்பில் 10,999 யுவான் அதாவது தோராயமாக ரூ.1,27,600-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹானர் ஸ்மார்ட் ஃபோன் சீனாவில் வரும் ஜனவரி 18 முதல் பிளாக், பர்ன்ட் ஆரஞ்ச் மற்றும் ஸ்பேஸ் சில்வர் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

Honor Magic V-யின் ஸ்பெசிஃபிகேஷன்கள் :

டூயல்-சிம் கொண்ட ஹானர் மேஜிக் V மொபைல் ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான Magic UI 6.0-ஐ இயக்குகிறது மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன், 7.9-இன்ச் ஃபோல்டபுல் ஃப்ளக்ஸிபிள் OLED இன்னர் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன் புதிய தலைமுறை மேக்னட்ரான் நானோ-ஆப்டிகல் ஃபிலிம் (magnetron nano-optical film) மூலம் ஸ்கிரீனின் பிரதிபலிப்பை குறைக்கிறது என்றும், IMAX Enhanced சான்றிதழை பெற்ற முதல் ஃபோல்டபுல் ஸ்மார்ட் ஃபோன் இது என்றும் ஹானர் நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்கிரீனில் 10.3:9 விகிதம், HDR10+ சான்றிதழ், 100% DCI-P3 wide color gamut மற்றும் 1.5% க்கும் குறைவான ரிஃப்லெக்டிவிட்டி உள்ளது.

ஹானர் மேஜிக் V-யின் அவுட்டர் ஸ்கிரீன் ​​6.45-இன்ச் வளைந்த OLED நானோ மைக்ரோகிரிஸ்டலின் டிஸ்ப்ளே 21.3:9 விகிதத்துடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 1,080x2,560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டது. இந்த ஸ்கிரீன் HDR10+ சான்றளிக்கப்பட்டது மற்றும் 100% DCI-P3 wide color gamut -ஐ சப்போர்ட் செய்கிறது.

இந்த ஹானர் டிவைஸின் பின்புறத்தில் மூன்று 50MP சென்சார்கள் உள்ளன. மேலும் இது ஒரு ஜோடி 42-MP செல்ஃபி கேமராக்களை கொண்டுள்ளது. இந்த மொபைல் 66W வரை சார்ஜ் செய்யக்கூடிய 4,750mAh பேட்டரியை வழங்குகிறது. மேலும் 15 நிமிடங்களில் 50% சார்ஜ் போட முடியும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G LTE, டூயல் பேண்ட் Wi-Fi 6 (2x2 MIMO), NFC, USB Type-C மற்றும் Bluetooth v5.2 ஆகியவை அடங்கும். பாஸ்வேர்ட் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் போன்ற பயோமெட்ரிக்களுக்கான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக டூயல் செக்யூரிட்டி சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் இது DTS:X அல்ட்ரா டெக்னாலஜியுடன் கூடிய symmetrical two-speaker stereo சிஸ்டமையும் கொண்டுள்ளது.

First published:

Tags: Honor, Smartphone