HONOR Band 5 vs Mi Band 4 - எது சிறந்தது?

HONOR Band 5 vs Mi Band 4 - எது சிறந்தது?
  • Share this:
விசேஷ காலங்களில் அதிகமாக சாப்பிட்டு உடல் எடையை ஏற்றிவிட்டீர்களா? நிச்சயம் நீங்கள் பிட்னசில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

ஃபிட்னெஸ் பேண்டுகள் ஸ்மார்ட் சாதனமாக மாறிவிட்டன. இவை உடற்பயிற்சி நடைமுறைகளை எளிதாக கண்காணிக்கின்றன.  சந்தையில், ஃபிட்னஸ் ரிஸ்ட்பேண்ட்ஸ் போட்டியில் HONOR Band 5 சேர்ந்துள்ளது. அதன் விலையை பொறுத்தவரை, அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு மிதமான வடிவமைப்பைக் கொண்ட முதல் ரக டிராக்கராகும்.

HONOR Band சீரீஸின் சலுகைகள் மற்றும் பயன்பாடுகள் Mi Band 4 ஐ விட சிறந்ததா? 


உபர்-கூல் டிஸ்பிளே & டிசைன்:

HONOR Band 5 மற்றும் Mi Band 4 இரண்டும் 0.95 இஞ்ச் 2.5D கிளாஸுடன் ஒரு AMOLED முழு வண்ண தொடு காட்சியைக் கொண்டுள்ளன. இருந்தாலும், HONOR Band 5 பிரகாசமான டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது மிகவும் எளிதானதாகவும் படிக்க வசதியாகவும் இருக்கிறது. எனவே, HONOR Band 5 ல் பேண்டை சூரிய ஒளியில் பார்க்கும்போது நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.

இறுதியாக, கடிகாரத்தின் தோற்றம் அதை அனைத்து பார்ட்டிகளிலும் அணிந்து செல்லலாம். பிரீமியம் ரப்பர் ஸ்ட்ராப்கள் தோற்றத்துடன், Mi Band 4-ஐ காட்டிலும் HONOR Band 5 ஸ்டைலாகத் தெரிகிறது மற்றும் இது மிகக் குறைவான எடையைக் கொண்டு அணிய வசதியாக உள்ளது. Mi Band 4 நான்கு முன்னமைக்கப்பட்ட கடிகார முகங்களைக் கொண்டுள்ளது, அதனை உங்கள் மனநிலைக்கு ஏற்ப நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் உங்கள் புகைப்பட கேலரியில் இருந்து ஒரு படத்தை பதிவிறக்கம் செய்து அல்லது தேர்ந்தெடுத்து அதை உங்கள் கடிகார முகமாக மாற்றிக் கொள்ளலாம். HONOR Band 5 வெவ்வேறு விழாக்களுக்கு ஏற்ப மாறக்கூடிய பொருத்தமான எட்டு கடிகார முகங்களை வழங்குகிறது.டிஸ்பிளே மற்றும் டிசைன் அடிப்படையில் HONOR Band 5 ஒரு சிறந்த தேர்வாகும் என்று தெளிவாக கூறலாம்.ஸ்விம்மிங் எஃபிசியன்ட்

HONOR Band 5 மற்றும் Mi Band 4, இரண்டும் 50 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டது. அதாவது, இப்போது நீங்கள் உங்கள் பேண்டை நீச்சலுக்கு எடுத்துச் செல்லலாம், மேலும் இரு பேண்டுகளும் பேக்ஸ்ட்ரோக், பட்டர்ஃப்ளை, பிரஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் ஃப்ரீஸ்டைல் போன்ற நீச்சல் ஸ்ட்ரோக்களைக் கணக்கிடும். HONOR Band 5, கூடுதலாக, நீச்சல் வேகம், தூரம் மற்றும் கலோரிகளை பதிவு செய்கிறது. SWOLF மதிப்பெண்ணைக் கணக்கிடும் அதன் திறனை நாங்கள் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்றாக கருதினோம், SWOLF மதிப்பெண் என்பது நீளத்திற்கு உங்கள் மொத்த ஸ்ட்ரோக்கள் மற்றும் நீளத்தை அடைந்ததற்கு எடுக்கப்பட்ட நேரம் ஆகியவற்றைக் கணக்கிடுவதன் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் ஆகும்.கணக்கிடப்பட்ட வெளிப்புற உடற்தகுதி விதிமுறைகள்

ஸ்டெப் கவுண்ட் கண்காணிப்பு என்பது பெரும்பாலான மக்கள் உடற்பயிற்சி கண்காணிப்புக்கு பயன்படுத்துவது ஆகும். HONOR Band 5-யில் ஸ்டெப் கவுண்ட் மிகவும் துல்லியமானது என்று யாராவது உங்களிடம் கூறியுள்ளார்களா? ஆம், HONOR Band 5-யில், ஒவ்வொரு படியும் கணக்கிடப்படும்.

அவுட்டோர் ரன்னிங், இன்டோர் ரன்னிங், வெளிப்புற நடைபயிற்சி, வெளிப்புற சைக்கிள் ஓட்டுதல், உட்புற சைக்கிள் ஓட்டுதல், இலவச பயிற்சி, நீச்சல், உட்புற நடைபயிற்சி, நீள்வட்ட இயந்திரம், மற்றும் ரோயிங் இயந்திரம் போன்ற 10 வெவ்வேறு உடற்பயிற்சி மாதிரிகளை அடையாளம் கண்டு துல்லியமாக கண்காணிக்கும் திறனைப் பெற்றிருப்பதால் HONOR Band 5 தனித்து நிற்கிறது. HONOR Band 5-யின் கண்காணிப்பு சேவைகளை இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் போது, Mi Band 4 ஆனது அவுட்டோர் ரன்னிங், டிரெட்மில், நீச்சல், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற 6 உடற்பயிற்சி முறைகளை மட்டுமே கொண்டுள்ளது. HONOR Band 5-யின் அடிப்படை அமைப்புகளை சாதனத்திலேயே மாற்றலாம் ஆனால் Mi Band 4-யில் மாற்றங்களைச் செய்வதற்கு செயலி தேவைப்படுகிறது.இதயத்திற்கு என்ன வேண்டுமோ அது தேவை

உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் இதயத் துடிப்பைக் கவனிப்பது ஒருபோதும் எளிதானதல்ல. இரு பேண்டுகளும் உங்கள் இதயத் துடிப்பை நிகழ் நேரத்தில் கண்காணிக்கின்றன. HONOR, கூடுதலாக, 3வது ஜெனரேஷன் Huawei TruSeen இன்டலிஜன்ட் இதய துடிப்பு மானிட்டரை பயன்படுத்துகிறது, இது AI டிரைவன் அல்கோரிதம்களை சிறந்த துல்லியமான ரீடிங்களுக்கு பயன்படுத்துகிறது. இதய துடிப்பு பதிவுகளில் அதிகரிப்பு அல்லது குறைவு ஏற்பட்டால் HONOR Band 5 பயனர்களுக்கு நினைவூட்டுகிறது. இது இரவில் தொடர்ச்சியான, இடையூறு விளைவிக்காத கண்காணிப்பிற்க்கு இன்ஃப்ராரெட் டெக்னாலஜியை பயன்படுத்துகிறது. இந்த முக்கிய ரீடுகள் உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் மற்றும் உங்கள் இதய துடிப்பு குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கவும் உதவுகிறது.

சிறந்த தூக்கம், சிறப்பான வாழ்க்கை

HONOR Band 5-யின் தூக்க கண்காணிப்பு சிறப்பம்சம் மிகவும் துல்லியமானது, நீங்கள் எப்போது தூங்குவீர்கள், உங்கள் தூக்க சுழற்சி, ஒரே இரவில் வழக்கமான தூக்க மாற்றங்கள் மற்றும் நீங்கள் எப்போது எழுவீர்கள் என்பது பற்றிய விவரங்களை இது கவனத்தில் கொள்கிறது. தூக்க இதய துடிப்பு மற்றும் சுவாசத்தை கண்காணிக்க Band 5 Huawei’s ‘TruSleep2.0’-ஐ பயன்படுத்துகிறது, மேலும் 200 க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட தூக்க பரிந்துரைகளுடன் ஆறு பொதுவான தூக்க பிரச்சனைகளை அடையாளம் காண இதனால் முடியும். HONOR Band 5 உடன் ஒப்பிடும்போது, Mi Band 4-யின் தூக்க கண்காணிப்பு சிறப்பம்சம் குறைந்த துல்லியத்தைக் கொண்டது.

துல்லியமான இரத்த ஆக்ஸிஜன் கண்டறிதல்

HONOR Band 5-யின் தனித்துவமான சிறப்பம்சங்களில் ஒன்று Sp02 மானிட்டர். Sp02 மானிட்டர் என்பது என்னவென்றால், இது இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் செறிவு அளவைக் கண்காணிக்கிறது, இதன் மூலம் உடற்பயிற்சியின் போதும் மற்றும் அதிக உயரங்களில் உங்கள் உடலின் செயல் மற்றும் தகவமைப்பை நீங்கள் பகுப்பாய்வு செய்யலாம். இந்த சிறப்பம்சத்திற்காகவே Mi Band உரிமையாளர்கள் HONOR Band 5-க்கு மாறுவதற்கு கருத வேண்டியிருக்கும்.

நீங்கள் விரும்பக்கூடிய கூடுதல் சிறப்பம்சங்கள்

இரண்டு பேண்டுளும் இசை மற்றும் இசை வால்யூம் கட்டுப்பாடு, செயலி அறிவிப்புகள், செய்திகளை காண்பது, அழைப்பு டிஸ்பிளே, அழைப்புகளை நிராகரித்தல், ஸ்டாப்வாட்ச், டைமர், அழைப்பு போன்றவற்றை ஆதரிக்கின்றன. HONOR Band 5, கூடுதலாக, பேண்ட் உடன் கேமரா கட்டுப்பாட்டு செயல்பாட்டை வழங்குகிறது. பேண்டை பயன்படுத்தி உங்கள் கைப்பேசியையும் நீங்கள் கண்டறியலாம். மிகவும் அருமையாக இருக்கிறது, அல்லவா?

HONOR மற்றும் Mi இரண்டும் பேண்ட் உடன் இணைக்க அவர்களின் ஹெல்த் செயலிகளின் பதிப்பை உங்களுக்கு வழங்குகின்றன. Mi ஹெல்த் செயலியை காட்டிலும் Huawei ஹெல்த் செயலி பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக உள்ளது. இரண்டு பேண்டுகளும் ஒரு அப்ளிகேஷனில் இருந்து இன்னொரு அப்ளிகேஷனிற்கு மிகவும் மென்மையான வழிசெலுத்தலுடன் பெரும்பாலான சூழ்நிலைகளில் மிகவும் தாமதமாக உள்ளன.பேண்ட் பவர்ஹவுஸ்

உடற்தகுதி கண்காணிப்புகள் நீண்ட காலம் நீடிக்கும், இது எதிர்நோக்குவதற்கான சிறந்த சிறப்பம்சங்களில் ஒன்றாகும். HONOR Band 5 110 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது ஒரு மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்த பிறகு 14 நாட்கள் வரை நீடிக்கும். அதேசமயம், 135 mAh பேட்டரி கொண்ட Mi Band 4 , 20 நாட்கள் நீடிக்க 2 மணிநேர முழுமையான சார்ஜிங் தேவைப்படுகிறது. உங்களின் அதிர்ஷ்டம், இரு உடற்பயிற்சி கண்காணிப்புகளும் பேட்டரி லைஃபை கொண்டுள்ளன.

நீங்கள் கேட்க வேண்டிய ஒரே விலை

விலையைப் பற்றி பேசுவது என்பது சிக்கலான விஷயம், இரு பேண்டுகளின் விலைகளும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவை. அதிர்ச்சியாக உள்ளதா, ஆம், ஏனென்றால் சிறப்பம்சங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் விரிவானவை. Mi Band 4-யின் விலை ரூ 2,299. அதேசமயம், HONOR Band 5-யின் விலை ரூ 2,599. இந்த பண்டிகை விற்பனையின் போது HONOR Band 5 ரூ 2,399 க்கு வழங்கப்படுகிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய நேரம் இது.

இறுதி முடிவு

HONOR Band 5 மற்றும் Mi Band 4 ஆகிய இரண்டும் எடை குறைவானவை மற்றும் ஸ்டைலான தோற்றத்தைக் கொண்டுள்ளன. பருமனான உடற்பயிற்சி கண்காணிப்புகளை விரும்பாதவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது. இருப்பினும், இரண்டில் ஒன்றை நாங்கள் தேர்வுசெய்தால், நாங்கள் நிச்சயமாக HONOR Band 5-ஐ தான் தேர்ந்தெடுப்போம், ஏனெனில் இது வலுவான சிறப்பம்சங்களை வழங்குவதன் அடிப்படையில் சிறந்தது. இது மட்டுமல்லாமல், நீங்கள் எப்போதாவது HONOR Band 5-ஐ வாங்க நேர்ந்தால், உங்கள் முன்னேற்றத்தை கண்காணிப்பதில் அதன் செயல்திறனை நீங்கள் நிச்சயமாக கவனிப்பீர்கள். Mi Band 4-யில் நீங்கள் காணாத டேட்டா வகையை இது வழங்குகிறது.

இது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு முற்றிலும் ஒரு ஸ்டைலான மற்றும் பயனுள்ள கம்பேனியன் ஆகும். விமர்சனங்களை பார்த்தால், Mi Band 4-ஐ விட HONOR Band 5 சிறந்தது.

இதை இங்கே வாங்குங்கள்
Amazon: https://amzn.to/2owKqSR
Flipkart: https://bit.ly/2VyVUkS

 
First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading