Home /News /technology /

HONOR 9X vs Samsung M30s: எது சிறந்த தேர்வு என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

HONOR 9X vs Samsung M30s: எது சிறந்த தேர்வு என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

 • Last Updated :
  அனைவரும் ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்போனுடன் இந்த புத்தாண்டைத் தொடங்குகிறார்கள். கடந்த பத்தாண்டில், நாம் சில முக்கிய தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கண்டோம், இந்த பத்தாண்டில் HONOR ஒரு டெக் சிக் பிராண்டாக சந்தையில் பாதை வகுத்துள்ளது. இந்த புதிய பதிற்றாண்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி இன்னும் அதிகரிக்கப் போகிறது, இதன் பொருள் பயனர்கள் வருங்காலங்களில் மேலும் புதிய அம்சங்களைக் காண்பார்கள். போட்டியைப் பொறுத்தவரையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட HONOR 9X தொலைபேசி Samsung M30s க்கு பட்ஜெட் வகையில் கடுமையான போட்டியை அளிக்கிறது, காரணம் இந்த இரண்டு தொலைபேசிகளும் சிறந்தவை மற்றும் ஏற்புடைய விலை கொண்டவை என்பதை நிரூபிக்கின்றன.

  ஒரு கவர்ச்சிகரமான விலையில் சிறந்த அம்சங்களை வழங்குவதன் மூலம் HONOR 9X இப்போது மக்களின் தேர்வாக மாறத் தொடங்கியுள்ளது. ஆனால் அனைவருக்கும் ஒரே கேள்வி தான் உள்ளது, HONOR 9X அல்லது Samsung M30s இதில் சிறந்தது?

  வடிவமைப்பு மற்றும் காட்சித்திரை:
  HONOR 9X பின்புறத்தில் டூயல் 3D வளைந்த பேனலைக் கொண்டுள்ளது மற்றும் அதன் பளபளப்பான பூச்சு தொலைபேசிக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. தொலைபேசியின் பின்புற பேனலில் X வடிவ வடிவமைப்பு பொறிக்கப்பட்டுள்ளது, இது தோற்றத்தை மேம்படுத்துகிறது. மறுபுறம், Samsung M30s ன் வடிவமைப்பு Samsung Galaxy M10 மற்றும் M20 உடன் மிகவும் ஒத்திருக்கிறது. HONOR 9X 6.59 திரை அளவு கொண்ட முழு HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது, ஒப்பிட்டளவில் Samsung HD 6.4 இன்ச் FHD + Infinity-U Super AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
  இது தவிர, HONOR 9X ஆனது 91% திரை விகிதத்தை 91%, Samsung M30 இல் நீங்கள் 91.4% திரை விகிதத்தைப் பெறுகிறீர்கள். டைப்-சி சார்ஜிங் உடன் கைரேகை திறத்தல் அம்சம் இரண்டு தொலைபேசிகளிலும் வழங்கப்படுகிறது. எளிமையான சொற்களில் கூறினால், வடிவமைப்பு மற்றும் காட்சித்திரை அடிப்படையில் HONOR 9X சிறப்பாக செயல்படுகிறது.

  கேமரா:
  இன்றைய காலத்தில், தொலைபேசியை வாங்கும் போது கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. HONOR 9X டிரிபிள் கேமரா அமைப்புடன் 48 எம்.பி மேன் கேமரா, 120 டிகிரி பார்வை கொண்ட 8 எம்.பி சூப்பர் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்.பி டெப்த் கேமராவுடன் வருகிறது. முன் கேமராவைப் பற்றி பேசினால், இது 16 எம்.பி பாப்-அப் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது, இது மென்மையான ஒளி, பட்டாம்பூச்சி ஒளி, ஸ்கேட்டட் ஒளி போன்ற 8 வெவ்வேறு முறைகளை ஆதரிக்கிறது. இந்த விலை வரம்பில் HONOR 9X மட்டுமே பாப்-அப் கேமராவை உங்களுக்கு வழங்குகிறது, இது நுண்ணறிவு பால் டிடக்சன், கீழ்நோக்கிய அழுத்த பாதுகாப்பு மற்றும் தூசி மற்றும் நீர்த்துளிப் பாதுகாப்பு போன்ற அம்சங்களுடன் வருகிறது.
  அதே நேரம், Samsung M30, 48 எம்பி + 8 எம்பி + 5 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் மிருதுவான விரிவான படங்களைக் கிளிக் செய்யலாம், ஆனால் பாப்-அப் செல்பி அம்சம் இல்லை. இருப்பினும், இது 16MP Dewdrop முன் கேமராவைக் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, HONOR 9X அதன் பாப் அப் செல்பி அம்சத்தின் காரணமாக Samsung M30s ஐ வீழ்த்துகிறது.

  செயல்திறன்:
  இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 9.0 OS உடன் வருகின்றன, இருப்பினும் HONOR 9X சிறந்த Kirin 710 F Octa Core பிராசஸரில் இயங்குகிறது, இது தொலைபேசியின் செயல்பாட்டை மிகவும் மென்மையாக்குகிறது. மறுபுறம், Samsung M30s இல் Exynos 9611 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இங்கே, HONOR 9X முன்னிலை பெறுகிறது, ஏனெனில் Kirin 710 F Octa Core பிராசஸர் Samsung M30s ஐ விட பல்வேலைகளை விரைவாகச் செய்கிறது, மேலும் இந்த தொலைபேசியில் நீங்கள் உயர் கிராபிக்ஸ் விளையாட்டுகளை எந்தவித இடையூறும் இல்லாமல் விளையாடலாம். இந்த இரண்டு மாடல்களும் 4/6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளக சேமிப்பு வகைகளைக் கொண்டுள்ளன. இரண்டு தொலைபேசிகளின் பேட்டரி ஆயுளும் சிறப்பாக உள்ளது, மேலும் வேகமான சார்ஜிங் தொலைபேசியை மிகக் குறுகிய காலத்தில் சார்ஜ் செய்ய உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் அதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், Kirin 710 F பிராசஸர் காரணமாக, HONOR 9X செயல்திறனைப் பொறுத்தவரை Samsung M30s ஐ விட சிறப்பாக செயல்படுகிறது.

  விலை:
  மேலே உள்ள தகவல்களைப் பொறுத்தவரையில், அம்சங்களின் அடிப்படையில் Samsung M30s ஐ விட HONOR 9X சிறந்தது என்பது உறுதியாகும். எனவே இந்த இரண்டு தொலைபேசிகளின் விலையையும் பார்ப்போம். HONOR 9X இன் 4 ஜிபி -128 ஜிபி வகையின் விலை ரூ.13,999 ஆகும், ஆனால் ஜனவரி 19 முதல் ஜனவரி 22 வரை நடைபெறும் முதல்நாள் சலுகையில், இது ரூ.1,000 தள்ளுபடியுடன் ரூ.12,999 க்கு கிடைக்கும். மேலும், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கோடக் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் இந்த மாடலை வாங்கும்போது 10% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், சலுகையின் போது நீங்கள் வாங்கினால், ரூ. 2,200 மதிப்புள்ள ரூ.. 50 க்கான 44 ஜியோ ரீசார்ஜ் வவுச்சர்களையும் பெறுவீர்கள்.
  அதே நேரத்தில், 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பக வகையின் விலை ரூ.16,999, கூடுதலாக வங்கி சலுகையின் உதவியால் நீங்கள் அதை ரூ. 15,299 க்கு பெறலாம். மறுபுறம், Samsung M30s ன் 4 ஜிபி -64 ஜிபி வகை 13,999 விலையுலும், 6 ஜிபி + 128 ஜிபி வகை 16,999 விலையிலும் கிடைக்கிறது. விலையைப் பொறுத்தவரை, இரண்டு தொலைபேசிகளின் விலையும் ஒன்றே, ஆனால் HONOR 9X அதே விலையில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கிறது.

  தீர்ப்பு:
  ஒப்பீட்டளவில், HONOR 9X குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை வழங்குகிறது. மேலும், இந்த பிராண்ட் இந்த விலை வரம்பில் பாப்-அப் கேமராக்களை வழங்கி வருகிறது, மேலும் சலுகையின் காரணமாக, தொலைபேசியை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். பிராசஸரைப் பொறுத்தவரை, Honorன் Kirin 710, ஆனது Exynos 9611 ஐ விட வேகமாகவும் சிறப்பாகவும் கருதப்படுகிறது. இது தவிர, HONOR 9X நீண்ட கால பேட்டரி கொண்டுள்ளது.
  எனவே இந்த எல்லா அம்சங்களையும் மனதில் வைத்து, இந்த சூழலில் HONOR 9X ஒரு சிறந்த தேர்வு என்று தெளிவாகக் கூறலாம். இதுபோன்ற ஏற்புடைய விலையில், எல்லோரும் தங்கள் கைகளில் பாப்-அப் கேமராவை வைத்திருக்க விரும்புகிறார்கள், அதனால்தான் இந்த இரண்டு மாடல்களிலும் HONOR 9X ன் கை ஓங்கியுள்ளது.
  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Honor, Samsung

  அடுத்த செய்தி