அட்டகாசமான அம்சங்களுடன் Honor 9X! சிறப்பம்சங்கள் என்ன?

அட்டகாசமான அம்சங்களுடன் Honor 9X! சிறப்பம்சங்கள் என்ன?
ஹானர் 9X
  • Share this:
HONOR 9X Review: ஏன் HONOR 9X மிகச்சிறந்த குறைந்த விலை பாப்-அப் தொலைபேசி என்பதை அறியுங்கள்.

ஸ்மார்ட்போனின் தொழில்நுட்பத்தை HONOR மீண்டும் ஒருமுறை உயர்த்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்நிறுவனம் தற்போது தனது பிரபலமான எக்ஸ்(X) தொடரில் புதிய ஸ்மார்ட்போனான HONOR 9X-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொலைபேசியின் சிறப்பம்சம் என்னவென்றால் அதில் டிரிபிள் கேமரா உள்ளது. இது 48MP பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. கேமராவுடன், இந்த தொலைபேசியின் வடிவமைப்பும் மிகவும் ஆச்சர்யமூட்டும் வகையில் வசீகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. தொலைபேசியின் பின்புற பேனலில், நீங்கள் X வடிவத்தை காண முடியும். இது அதன் நிறம் மற்றும் ஸ்டைலுடன் மிகவும் அழகான தோற்றத்தை அளிக்கிறது. இந்த தொலைபேசியை நீங்கள் கைகளில் வைத்திருக்கும் போது உங்களுடைய ஸ்டேட்டஸ் எந்த விதத்திலும் குறையாமல் சற்று உயர்ந்ததாக உணர்வீர்கள்.
இந்த தொலைபேசியின் சிறப்பு அம்சங்கள் உங்களுக்கெனவே வடிவமைக்கப்பட்டது போன்று கவர்ச்சிகரமானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் தோற்றமளிக்கும். இந்த தொலைபேசியை உபயோகிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில், அதன் அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆவலாக உள்ளோம். எனவே வாருங்கள், இந்த தொலைபேசியைப் பற்றி இப்போது கொஞ்சம் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

டைனமிக் டிசைன் மற்றும் டிஸ்ப்ளே: HONOR 9X முழு டிஸ்ப்ளே மற்றும் கிளாசி வடிவத்துடன் வளைந்த பின்புற பேனலுடன் வருகிறது. இது போனுக்கு ஒரு ப்ரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. போன்களின் பின்புற பேனலில் X வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது, இது தோற்றத்தை மேம்படுத்துகிறது.

HONOR 9X-ல் 1080x2340 பிக்சல் ரிசொலியூஷனுடன் 6.59 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே உள்ளது. வளைந்த வடிவத்துடன் கூடிய முழு டிஸ்ப்ளே ஒரு கூடுதல் நன்மையை கொண்டுள்ளது. அதாவது பார்வையாளர்களும் கேம்ஸ் விளையாடுபவர்களும் சிறந்த தடையற்ற பொழுதுபோக்கை பெற்று மகிழ்வார்கள். இந்த தொலைபேசியில் எந்தவிதமான தடங்கள்களும் சிக்கல்களும் இல்லாமல் முழு திரையில் கேம் விளையாடுவதற்கும், வீடியோக்களைப் பார்ப்பதற்கும் ஒரு சிறப்பான அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.

இப்போது நீங்கள் நினைப்பீர்கள் தொலைபேசியில் செல்ஃபி கேமரா இல்லையா என்று? இல்லை அவ்வாறு எதுவும் இல்லை. பாப்-அப் செல்ஃபி கேமரா தொழில்நுட்பத்துடன், உங்களுக்கும் திரைகாட்சிக்கும் இடையில் மூன்றாவதாக எதுவும் வர இயலாதவாறு இந்த தொலைபேசியில் நீங்கள் ஒரு செல்ஃபி கேமராவையும் பெறுவீர்கள். HONOR 9X ஆனது AI வீடியோ மேம்பாட்டைக் கொண்டுள்ளது.இது மிகவும் பிரகாசமான மற்றும் இருண்ட பகுதிகளில் உள்ள மாறுபாட்டை சரிசெய்து சிறந்தவையானதை அளிக்கிறது. இதில் கண்பார்வையின் பாதுகாப்பிற்க்காக கண் பாதுகாப்பு பயன்முறையையும் பொருத்தப்பட்டுள்ளது. இது TUV Rheinland ஆல் சான்றளிக்கப்பட்டது. இது கண்களில் ஏற்படும் கஷ்டத்தை தடுக்க நீல ஒளியை ஃபில்டர் செய்துகொள்கிறது.

செயலி மற்றும் மென்பொருள்: HONOR 9X இல் ஒரு நடுத்தர பிரிவு சிப்செட் ஆன, கிரின் 710 எஃப் ஆக்டா கோர் செயலியைப் பயன்படுத்தியுள்ளது. இது வேகம் மற்றும் மல்ட்டிடாஸ்கிங் குறித்து சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. 4GB RAM and 128 GB இன்டர்னல் மெமரியைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மூலம், நீங்கள் அன்றாட பணிகளையும் நன்றாக கையாள முடியும். தொலைபேசியில் நீங்கள் GPU Turbo 3.0 ஆதரவின் வசதியையும் பெறுவீர்கள்.

ஏனென்றால் இந்த விலையிலுள்ள ஸ்மார்ட்போனை நீங்கள் அரிதாகவே பெறுவீர்கள். இதனால் நீங்கள் கிராபிக்ஸ் கேம் விளையாட்டுகளில் சிறந்த அனுபவத்தையும் பெறலாம். இதன் 6GB RAM உடனான 128GB இன்டர்னல் மெமரி உங்களது தொலைபேசியின் வேகத்தை குறைக்கவிடாமல், மேலும் அதை மென்மையாக கொண்டுசெல்கிறது. HONOR 9X EMUI 9.1.0 இல் இயங்குகிறது, இருந்தும் இந்த சாதனம் Android 10 க்கு மேம்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த தொலைபேசிக்கு அதன் 4,000mAh பேட்டரி அதிக சக்தியை அளிக்கிறது, இது வேகமான சார்ஜிங் செய்யும் ஆதரவோடு, மேலும் இது ஒரு நாள் முழுவதும் தாராளமாக அதன் பேட்டரி ஆயுளை நீடித்து இயங்க உதவுகிறது.

கேமரா: எந்த ஒரு தொலைபேசிக்கும் ஒரு பயனரை தன் வசம் ஈர்க்க அதன் கேமரா மிகவும் முக்கியமானது. மேலும் HONOR 9X இந்த வேலையை சரியாகவும் சிறப்பாகவும் செய்துள்ளது என்பதை நாங்கள் உணர்கிறோம். டிரிபிள் ரியல் கேமரா அமைப்பை கொண்டுள்ள இந்த தொலைபேசியில், 48MP முதன்மை கேமரா உள்ளது. இது இந்த தொலைபேசியின் முக்கிய அம்சமாகும். இதன் உதவியால், நீங்கள் சிறந்த விவரங்களோடு புகைப்படங்களைப் பிடிக்கலாம். நீங்கள் தீவிர பெரிதாக்குதல்(Zoom) செய்தும் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். அதே நேரத்தில், 120 டிகிரி புலக் காட்சியைக் கொண்ட HONOR 9X இன் 8MP சூப்பர் வைட் ஆங்கள் கேமரா உங்களின் குழு புகைப்படத்தையும் இன்னும் கண்கவர்ந்தையாக்கச் செய்யும்.

அதன் 2MP ஆழ சென்சார், நல்ல உருவப்பட (portrait) காட்சிகளை வழங்குகிறது. HONOR 9X இல் 16MP AI பாப்-அப் செல்ஃபி கேமரா உள்ளது. இது மேலும் எதார்த்தமானதாகவும் மற்றும் துல்லியமான விவரங்களுடன் புகைப்படங்களைப் பிடிக்கிறது. இதன் முகம் கண்டறிதல் செயலி மிகவும் வேகமாக செயல்படுகிறது. HONOR இன் இந்த தொலைபேசி ஆண்டி டஸ்ட் மற்றும் ஸ்ப்லாஷ் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டது. இந்த தொலைபேசி உங்களுக்கு சிறந்த புகைப்பட அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களது அனுபவப்படி இதன் புகைப்படம் எடுத்தல் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

விலை: இப்போது HONOR 9X உங்களது பாக்கெட்டை எவ்வளவு காலி செய்யும் என்பதைப் பற்றி பேசலாம். இந்த தொலைபேசி உங்களுடைய பாக்கெட்டை காலி செய்யாமல் பதிலாக கனமாக்கி விடும் என்பதை நாங்கள் தெரியப்படுத்துகிறோம். இத்தகைய சிறப்பான அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு இருந்தபோதிலும், இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மிகவும் மலிவாக இலாபகரமான விலையில் உள்ளது. இந்த தொலைபேசியில் இரண்டு வேரியண்ட் உள்ளன, 4GB RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.13,999, ஆனால் வரவிருக்கும் விற்பனையின் முதல் நாளில், இந்த தொலைபேசியை வாங்கும்போது ரூ.12,999க்கு ரூ.1,000 தள்ளுபடியுடன் கிடைக்கும். இதனுடன், ஜனவரி 19 முதல் ஜனவரி 22 வரை இயங்கும் இந்த சலுகையின் போது, ICICI Bank கிரெடிட் கார்டு மற்றும் Kotak Bank டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் இந்த மாடலை வாங்கும்போது 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், சலுகையின் போது வாங்கும்போது, ரூ.2,200 ஜியோ ரீசார்ஜ் வவுச்சரைப் பெறுவீர்கள். இது 44 ரீசார்ஜ்கள் வரை ரூ.50 ரீசார்ஜ் ஆகப் பயன்படுத்தலாம்.

தீர்ப்பு: இந்த தொலைபேசியைப் பயன்படுத்திய பிறகு, புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள பயனர்களுக்கு இந்த அனுபவம் சிறந்தவையாக இருக்கும் என்று நாம் கூறலாம். மேலும், இந்த விலையில் இது ஒரு சக்திவாய்ந்த தொலைபேசி என்பதை நிரூபிக்கிறது. தொலைபேசியின் வடிவமைப்பு மற்றும் தோற்றம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதிக எடை இல்லாததால், இந்த தொலைபேசியை பயன்படுத்துவதும் மிக எளிதானது.
எனவே இப்போது எந்த தாமதமும் இல்லாமல் Xtraordinary #UpForExtra தொலைபேசி #HONOR9X #HONORIndia ஐ வாங்கவும்.
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading