HONOR 8C – பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் சிறந்ததா? 

HONOR 8C – பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் சிறந்ததா? 
  • Share this:
ஸ்மார்ட்போன் தொழிற்துறை இந்தியாவில் திடீரென வேகமாக வளர்ந்துள்ளது, பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அதில் பெருமளவில் பங்கு வகிக்கின்றன. இந்த பேண்ட்வேகனில் தங்களின் TechChic ஸ்மார்ட்போன்களுடன் HONOR இடம்பெற்றுள்ளது. சில மாதங்களாக இந்த தயாரிப்பு பற்றி மக்கள் பெருமளவில் பேசி வருகின்றனர், அதற்கு சில காரணங்கள் இருக்க வேண்டும். Techies இதை வழங்குவதில் ஆர்வமாக உள்ளது, HONOR 8C ஐ விரும்புவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா? வாருங்கள் காண்போம்!

டிசைன் & டிஸ்பிளே

HONOR 8C ஸ்மார்ட்போன் 720x1520 பிக்சல் ரீசொல்யூஷன் மற்றும் ஒரு சிறிய நோட்ச் உடன் 15.9 cm (6.26-inch) HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, வைப்ரண்ட்கலர் டிஸ்பிளே மற்றும் HD+ ரீசொல்யூஷன் உடன் இந்த ஸ்மார்ட்போன்கள் நம்பமுடியாத பார்வை அனுபவத்தை வழங்குகின்றன.
டிசைன் பற்றி பார்க்கும்போது, HONOR 8C ஸ்மார்ட்போன் 3D பிரிண்டிங் மற்றும் நானோ-லெவல் பேட்டர்ன் டிசைன் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நுட்பமான கேட்’ஸ் ஐ டிசைனைக் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். ஒட்டுமொத்தமாக HONOR 8C அடர்-நிறமுடையது மற்றும் அதன் பிளாஸ்டிக்பாடி அம்சம் சிறிய வடிவமைப்பை வழங்குகிறது. இதன் எடை வெறும் 167g என்பதால் ஒருவரின் கையில் சௌகரியமாக அடங்குகிறது. உண்மையில், இதன் லோ-லைட் ஃபேஸ் அன்லாக் அம்சத்தைக் கண்டு நாங்கள் பிரமித்தோம். இதன் லோ-லைட் செட்டிங்ஸ்-யில் ஃபேஸ் ரிகக்னிஷன் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் போன்களை உடனடியாக அன்லாக் செய்ய முடியும். TUV Rheinland-ஆல் சான்றழிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஐ கேர் அம்சத்தையும் HONOR கொண்டுள்ளது.

செயல்திறன்

இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 632 chipset Octa-Core (8x1.8 GHz) மூலம் இயக்கப்படுகிறது, HONOR 8C தான் இந்த Snapdragon சிப்செட்-ஐ முதன்முதலாக அறிமுகப்படுத்தியது, இது 40% சிறந்த செயல்திறனை வழங்குகிறது. இது 32 மற்றும் 64GB வகைகளில் வருகிறது, இதை ஒரு micro SD கார்டு கொண்டு 256GB வரை நீட்டிக்க முடியும் மற்றும் 4GB RAM-ஐக் கொண்டுள்ளது. செயல்திறன் மற்றும் கேமிங் என்று பார்க்கும்போது, இதே விலையில் உள்ள மற்ற போன்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் சிறந்தது. கேம் விளையாடுபவர்களுக்காக இந்த போன் கேமிங் DND மோடைக் கொண்டுள்ளது, எனவே நீங்கள் கேம் விளையாடும் போது உங்கள் போனை டு நாட் டிஸ்டர்ப் மோட்-யில் வைத்துக்கொள்ளலாம்.பேட்டரி லைஃப்

இந்த போன் 4,000mAh பேட்டரி திறனைக் கொண்டுள்ளது, எனவே இது மேம்படுத்தப்பட்ட செயல்திறனை வழங்குகிறது. பல்வேறு வகையான உள்ளமைக்கப்பட்ட ஹார்டுவேர்-சாஃப்ட்வேர் மேம்படுத்தல்கள் பேட்டரியின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்வதின் மூலம் இந்த போனை இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், இரவு வரைக்கும் நீடித்த பேட்டரி லைஃப் உங்களுக்கு கிடைக்கும்.

 

கேமரா விவரக்குறிப்புகள்

HONOR 8C ஸ்மார்ட்போன் f/1.8 அபர்சர் உடன் 13MP பிரைமரி ரியர் கேமராவையும், f/2.4 அபர்சர் உடன் செகண்டரி 2MP டெப்த் சென்சாரையும் கொண்டுள்ளது. மறுபுறம், AI-பேக்டு செல்ஃபி கேமரா, f/2.0 அபர்சர் உடன் 8MP கேமராவைக் கொண்டுள்ளது, இது சிறந்த செல்ஃபிக்களை பிரைட், ரெகுலர் மற்றும் லோ-லைட் கன்டிஷன் என மூன்று செட்டிங்ஸ்களில் எடுக்கும் ஒரு ஷாஃப்ட் லைட் LED ஃப்ளாஷைக் கொண்டுள்ளது. இதன் விலையுடன் ஒப்பிடுகையில் இதன் கேமரா தரம் சற்று சிறந்ததாக உள்ளது. கேமரா விவரக்குறிப்புகள் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட விவரங்களை வழங்குகின்றன, இது போட்டோக்களின் ரியல் மற்றும் கலர் வைப்ரன்சியை சரியாக பேலன்ஸ் செய்கிறது. மற்றொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டால், HONOR AI ஷாப்பிங் அம்சத்தின் மூலம் கேமராவைப் பயன்படுத்தி, அந்தப் பொருளை நீங்கள் ஆன்லைனில் அடையாளம் காணலாம்.

விலை

Amazon எக்ஸ்கிளூசிவ்-யில் 4+64GB வெர்சன் அதிரடி விலையான ரூ 8,999-யிலிருந்து தொடங்குகிறது. HONOR 8C ஸ்மார்ட்போன் நம்பமுடியாத அம்சங்களை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது. மிகக் குறைந்த விலையில் HONOR 8C பயன்படுத்தி நியூ-ஜென் அனுபவத்தை நீங்கள் பெறலாம்.

மொத்தத்தில், HONOR 8C பயன்படுத்துவதற்கு எளிதான சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை ‘பேக்டு வித் பவர்’ என்பதை இதன் தயாரிப்பாளர்கள் நிரூபித்துள்ளனர். விரிவான சிறப்பம்சங்களைக் கொண்ட ஒரு பிரீமியம் போனை மலிவு விலையில் நீங்கள் வாங்க விரும்பினால் இதை தேர்வு செய்யுங்கள். உங்கள் முதலீட்டிற்கு இது மிகவும் ஏற்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, HONOR குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதே ஒரு கௌரவம் தான்.

இங்கே வாங்கவும்: 8C on Flipkart: https://bit.ly/2MLkRFx
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading