சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் ஹானர் 20 ப்ரோ... இந்தியாவுக்கு வருவது எப்போது?

இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும்போது 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் 20 ப்ரோ-வின் 39,999 ரூபாய் ஆக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் ஹானர் 20 ப்ரோ... இந்தியாவுக்கு வருவது எப்போது?
ஹானர் 20 ப்ரோ
  • News18
  • Last Updated: July 27, 2019, 4:36 PM IST
  • Share this:
ரஷ்யாவில் ஹானர் 20 ப்ரோ இன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 2-ம் தேதியிலிருந்து அந்நாட்டில் விற்பனைக்கு வருகிறது. 

கடந்த மே மாதம் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் 20 ப்ரோ, கடந்த மாதம் இந்தியாவிலும் வெளியிடப்பட்டது. ஆனால், வருகிற ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ரஷ்யாவில் மட்டும் விற்பனை தொடங்குகிறது. இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு வரும் எனக் கூறப்பட்டாலும் உறுதியான தேதி அறிவிக்கப்படவில்லை.

ரஷ்யாவில், இந்திய மதிப்பின் அடிப்படையில் 38,200 ரூபாய்க்கு ஹானர் 20 ப்ரோ விற்கப்பட உள்ளது. ரஷ்யாவைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, நெதர்லாந்து, செக் குடியரசு, பின்லாந்து, போலாந்து, மலேசியா, எகிப்து, சவுதி அரேபியா, அரபு எமிரேகம் என வெளியீட்டுப் பட்டியலை ஹானர் வெளியிட்டுள்ளது.


இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும்போது 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் 20 ப்ரோ-வின் 39,999 ரூபாய் ஆக இருக்கும் எனக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஃப்ளிப்கார்டில்தான் விற்பனை இருக்கும் என்றும் தெரிகிறது.

மேலும் பார்க்க: இந்தப் புதிய ஏசி-யை நீங்கள் அணிந்துகொள்ளலாம்... அறிமுகம் செய்த சோனி!
First published: July 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading