புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களுடன் இனி சார்ஜர் இருக்காது என தகவல்

Samsung | புதிய போன்களுடன் சார்ஜர் வழங்குவதை சாம்சங் நிறுவனம் நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களுடன் இனி சார்ஜர் இருக்காது என தகவல்
Samsung
  • News18
  • Last Updated: July 9, 2020, 7:09 PM IST
  • Share this:
புதிய போன்கள் வாங்கும் போது, சார்ஜர், ஹெட்போன் உள்ளிட்ட சில அடிப்படை உபகரணங்களும் செல்போன் நிறுவனத்தால் வழங்கப்படும். சார்ஜர் என்பது ஸ்மார்ட்போனுக்கு மிக முக்கிய தேவையாக உள்ள நிலையில், இனி வரும் நாட்களில் இவை வழங்கப்படுவது நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் இதனை நடைமுறைப்படுத்தும் என்று ஏப்ரல் மாதம் கூறப்பட்ட நிலையில், சாம்சங் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தென்கொரிய ஊடகமான இ.டி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது பயனர்களுக்கு ஏற்கனவே சார்ஜர்கள் கிடைத்திருக்கும் நிலையில், புதிய போன்களுக்கும் வழங்குவது தேவையற்றது என சாம்சங் கருதுவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் குப்பைகள் அதிகமாக சேராமல் இருக்கும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

படிக்க: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

படிக்க: மருமகனை வரவேற்க 67 வகையான உணவுகளை சமைத்து அசத்திய மாமியார் - வைரல் வீடியோ


இருப்பினும், இது குறித்து சாம்சங்கிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுடன், இயர்போன்களை வழங்குவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading