ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

1ஜி முதல் 5ஜி வரை... இணையத் தொழில்நுட்ப வரலாறு - கடந்து வந்த பாதை

1ஜி முதல் 5ஜி வரை... இணையத் தொழில்நுட்ப வரலாறு - கடந்து வந்த பாதை

1ஜி-யில் இருந்து 5ஜி இணையத் தொழில்நுட்ப வரலாறு

1ஜி-யில் இருந்து 5ஜி இணையத் தொழில்நுட்ப வரலாறு

தொலைத்தொடர்புத் துறையின் தொழில்நுட்ப வரலாறு 1ஜி-யில் தொடங்கி 5ஜி வரை வளர்ச்சி பெற்ற வரலாற்றை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவில் இன்று தொலைத்தொடர்பு வரலாற்றில் முக்கிய நிகழ்வாக 5ஜி சேவையைத் தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி. இணையத் தொழில்நுட்பம் பல படிகளைக் கடந்து தற்போது 5ஜி வரை முன்னேறியுள்ளது. 1ஜி-யில் இருந்து 5ஜி இணையத் தொழில்நுட்பம் கடந்து வந்த பாதையைப் பற்றிப் பார்ப்போம்.

  1ஜி-யில் இருந்து 5ஜி இணையத் தொழில்நுட்ப வரலாறு:

  1ஜி, 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என்று நாம் குறிப்பிடுவது அதன் தலைமுறை (Gerenation)ஆகும். 1ஜி என்றால் முதல் தலைமுறை இணையச் சேவை. அது படிப்படியாக விரைவு பெற்று மேம்படுத்தப்பட்டு 5ஜி என்று ஐந்து தலைமுறைகளைப் பெற்றுள்ளது.

  1973யில் முதல் கைப்பேசி உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் தலைமுறை தொலைத்தொடர்பு சேவை தொடங்கியது.

  முதல் 1ஜி தொடக்கம் ( 1G beginning):

  1979 ஆம் ஆண்டு முதல் தலைமுறை நெட்வர்க் சேவையை நிப்பான் தந்தி மற்றும் தொலைப்பேசி (nippon telegraph and telephone) என்ற நிறுவனத்தால் டோக்கியோவில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1983யில் அமெரிக்கா 1ஜி ஆபேரசனை தொடங்கினர். பின்னர் அதனைப் பிற நாடுகளும் பின் தொடர்ந்தனர்.

  1984ஆம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் 1ஜி சேவையை வழங்கிய நாடாக ஜப்பான் மாறியது.

  1ஜி சேவையில் போன் கால்கள் செய்ய முடிந்தது. ஆனால் அது முக குறைவான சத்தத்தில் செயல்பட்டது. 1ஜி குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் செயல்பட்டது. ரோமிங் போன்ற சேவைகள் இல்லை. அந்த காலகட்டத்தில் அது பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியாக இருப்பினும் பல கோளாறுகளைச் சந்திக்க நேரிட்டது.

  2ஜி சேவை - தொலைத்தொடர்பு புரட்சி (Communication Revolution):

  2ஜி சேவை ஃபின்லாண்டில் ஜி.எஸ்.எம் ஸ்டாண்டர்ட் ( GSM Standard) என்ற நிறுவனத்தால் 1991 இல் தொடங்கப்பட்டது. CDMA (Code Division Multiple Access) மற்றும் GSM (Global System for Mobiles)போன்றவற்றைக் கொண்டுவந்தனர்.

  பின்னர் உலக தொலைத்தொடர்பை முன்னேற்றும் வகையில் செய்தி அனுப்புவது(SMS), புகைப்படம் அனுப்புவது(MMS) போன்ற சேவைகளை அறிமுகம் செய்துவைத்தனர்.

  இந்த புதிய வரவுகள் மக்களைத் கைப்பேசி உபயோகத்திற்கு இழுத்தது. பலரும் மொபைல்களை வாங்கத் தொடங்கினர்.

  3ஜி ஆரம்பம் - இணையச் சேவை தொடக்கம்( Internet on Phone):

  2001இல் இணையச் சேவையை முதலில் தொடங்கியவர்கள் ஜப்பான் நாட்டின் நிப்பான் தந்தி மற்றும் தொலைப்பேசியின் (nippon telegraph and telephone)டோகோமோ நிறுவனம்(DoCoMo).

  மொபைலில் இணையச் சேவையை முதலில் தொடங்கினர். முதன் முதலில் வெளிநாடுகளுக்குக் கைப்பேசி மூலம் தொடர்புகொள்ள முடிந்தது. பலரும் கைப்பேசிகள் மூலம் இணையத்தைப் பயன்படுத்தினர்.

  மேலும் கைப்பேசி மூலம் மின்னஞ்சல்( emails), காணொளி ( video)போன்றவற்றைப் பார்க்கமுடிந்தது. காணொளி வாயிலாகக் கலந்துரையாடல்களும்(video conference) நடைபெற்றது. கைப்பேசிகளில் வழிகாட்டும் வரைப்படங்களும் பார்க்க முடிந்தது.

  4ஜி சேவை : உலகெங்கும் இணையம்: (World on Internet)

  2009 ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் மற்றும் ஒஸ்லோ நார்வே (stockholm sweden, oslo norway) ஆகிய பகுதிகளில் முதலில் 4ஜி சேவை பயன்படுத்தப்பட்டது.

  3ஜி சேவையை விட ஐந்து முதல் ஏழு சதவீதம் அதிகமான வேகத்தில் 4ஜி செயல்படத் தொடங்கியது. காணொளி பார்ப்பது, காணொளி அலைப்பை மேற்கொள்வது, விரவான அழைப்புகள், இணையவழி அழைப்பு எனப் பல தரப்பட்ட சேவைகளை 4ஜி தலைமுறை இணையம் வழங்கியது. ஸ்மார்போன் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியது.

  5ஜி தொழில்நுட்பம் : அதிவேக இணையச் சேவை:( hi-speed internet)

  2019ஆம் ஆண்டு தென் கொரியா உலகில் முதல் 5ஜி சேவையை வணிக ரீதியாகத் தொடங்கினர். 5ஜி சேவையில் 4ஜியை விட 20 மடங்கு அதிவேக இணையச் சேவையைப் பெறமுடியும். இதனால் விர்ச்சுவல் ரியாலிட்டி(virtual reality), குறைந்த தாமத கேமிங் அனுபவம்(low latency gaming experience) போன்றவற்றைப் பெறமுடியும்.

  Also Read : 2023 இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவை - ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு

  இந்தியாவில் அதிவேக 5ஜி சேவை:

  இந்தியாவின் இன்று முதல் 5G சேவை தொடங்கப்பட்டுள்ளது. இணையச் சேவையில் இதுவரை இல்லாத ஒரு மிக அதிவேக சேவையாக 5G இந்தியாவில் முதற்கட்டமாகச் சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

  இந்தியாவில் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, வோடஃபோன், ஐடியா மற்றும் ஏர்டல் நிறுவனங்கள் இந்தியாவின் தொலைத்தொடர்பு வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இன்று 5G சேவை தொடங்கியுள்ளனர்.

  இந்தியாவில் 5ஜி சேவையைப் பெறும் அமைப்புடன் முதல் விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: 5G technology, History, Jio