லேசர் டிவி துறையின் முன்னோடியான Hisense நிறுவனம் இந்தியாவில் ஹோம் என்டெர்டெயின்மெண்ட் அனுபவத்தை மாற்றியமைக்க உள்ளது. Hisense நிறுவனம் தனது புதிய 120-இன்ச் 4K லேசர் டிவி-யான TV – 120L9G-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள தங்களது இந்த பிரீமியம் லேசர் டிவி, முதல் முறையாக ஸ்மார்ட் லேசர் டெக்னலாஜியுடன் வந்துள்ளதாக Hisense நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட் லேசர் டெக்னலாஜி சிறந்த கலர் ரீப்ரொடக்ஷன் மற்றும் ஒட்டுமொத்த பார்வை செயல்திறனை மேம்படுத்தும். இந்தியாவில் ஜூலை 6 முதல் அமேசானில் விற்பனைக்கு வந்துள்ள இந்த டிவி ரூ.4,99,999 என்ற விலையில் கிடைக்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, டிவி-க்கு 3 வருட வாரண்டி மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு Amazon 4K Fire TV Stick Max உடன் விற்கப்படுகிறது.
இந்த லேசர் டிவியானது 120-இன்ச் சைஸ், 3000 லுமன்ஸ் பிரைட்னஸ் மற்றும் 4K UHD பிக்ஸர் குவாலிட்டி கொண்ட "தொழில்துறையின் முதல் மிகப்பெரிய ALR ஸ்கிரீனுடன்" அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக Hisense நிறுவனம் கூறுகிறது. மேலும் உயர்தர ஒலி அனுபவத்திற்காக 40W டால்பி அட்மாஸ் ஸ்பீக்கரை நிறுவனம் இந்த லேசர் டிவி-யில் சேர்த்துள்ளது. ஆம், இது டால்பி அட்மோஸ்-எனேபிள்டு 40W ஃப்ரன்ட்-ஃபபையரிங் ஸ்பீக்கர்களை கொண்டு உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள ஹைசென்ஸ் லேசர் டிவி அலெக்ஸா பில்ட்-இன்-னுடன் (Alexa built-in) வருகிறது. இதனால் யூஸர்கள் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை ஹேண்ட்ஸ் ஃப்ரீ மூலம் கட்டுப்படுத்தலாம் மற்றும் வாய்ஸ் ரிமோட் மூலம் தேவையான கன்டென்டை தேடலாம்.
ALSO READ | தம்பியின் சடலத்தை மடியில் வைத்து ஆம்புலன்ஸ்சுக்காக காத்திருந்த 8 வயது சிறுவன்.. நெஞ்சை உருக்கும் சம்பவம்
இந்த அம்சங்களைத் தவிர, ஸ்மூத் மோஷன் ஃபார் ஸ்போர்ட்ஸ், ஃபிலிம்மேக்கர் மோட், TUV-சான்றளிக்கப்பட்ட ப்ளூ லைட் டெக்னலாஜி உள்ளிட்ட பிற அம்சங்களையும் இந்த டிவி வழங்குகிறது. Hisense-ன் 120” 4K Smart Laser TV – 120L9G அறிமுகம் பற்றி கருத்து தெரிவித்துள்ள Hisense India-வின் சிஓஓ ரிஷி டாண்டன், "எண்கள் நிறுவனம் லேசர் டிவி கண்டுபிடிப்புகளுக்காக உலகளவில் அதிக விருது பெற்ற பிராண்டாகும். இந்த துறையில் முதல் பெரிய ஸ்கிரீன் 4K ஸ்மார்ட் லேசர் டிவியை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியாவில் உள்ள எங்கள் யூஸர்களின் ஹோம் சினிமா அனுபவத்தை மறுவரையறை செய்ய நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்றார்.

ரூ.5 லட்சத்தில் 120 இன்ச் 4K ஸ்மார்ட் லேசர் டிவி
Hisense நிறுவனம் அதன் மிட் ரேஞ்ச் மற்றும் பிரீமியம் டிவி சீரிஸ்களை ஏற்கனவே விற்று வரும் நிலையில் தற்போதைய லேசர் டிவி அறிமுகம் நாட்டில் உள்ள பெரும்பாலான நுகர்வோருக்கு புதியதாக இருக்கும். இதனிடையே அமேசான் இந்தியாவின் மூத்த அதிகாரி நிஷாந்த் சர்தானா இந்த லேசர் டிவி பற்றி கூறுகையில், " Hisense 120” Smart Laser TV மிகவும் சக்திவாய்ந்த லேசர் டிவி தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது வீட்டிலேயே சிறந்த சினிமா அனுபவத்தை வழங்குகிறது.Hiseense நிறுவனத்துடனான உறவில் மகிழ்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரந்த தேர்வு, வேகமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான டெலிவரி மற்றும் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தைத் தொடர்ந்து வழங்குவோம்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.