ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 இயங்குதளம் வெளியீடு: புதிய அம்சங்கள் என்ன?

Tamilarasu J | news18
Updated: May 8, 2019, 3:59 PM IST
ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 இயங்குதளம் வெளியீடு: புதிய அம்சங்கள் என்ன?
ஆண்ட்ராய்ட் கியூ
Tamilarasu J | news18
Updated: May 8, 2019, 3:59 PM IST
கூகுள் நிறுவனம் I/O 2019 டெலவலப்பர்கள் மாநாட்டில் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 பதிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய ஆண்ட்ராய்டு பதிப்பில் தனியுரிமை, பாதுகப்பு, கோகஸ் மோட், லைவ் கேப்ஷன் போன்ற வசதிகள் அறிமுகை செய்யப்பட்டுள்ளது.

லைவ் கேப்ஷன்:


வீடியோக்கள் பார்க்கும் போது காது கேட்க முடியாதவர்கள், குரலை எழுத்தாகப் பார்க்கக் கூடிய லைவ் கேப்ஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவைத் தேர்வு செய்வதன் மூலமாக லைவாகப் போகும் வீடியோவிற்கு கூட கேப்ஷன்களை பெற முடியும்.

நோட்டிஃபிகேஷன் ஸ்மார்ட் ரிப்ளை:


ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3-ல் ஸ்மார்ட் ரிப்ளை வசதி அறிமுகம் செய்யப்படுள்ளது. அதன் படி உங்கள் மொபைலுக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களுக்கு குறிப்பிட்ட செயலிக்கு சென்று தான் ரிப்ளை செய்ய வேண்டும் என்பதில்லை. நோட்டிஃபிகேஷனிலிருந்தே ஸ்மார்ட்டாக ரிப்ளை செய்ய முடியும்.

டார்க் தீம்:


இரவில்  மொபைல் போனை பயன்படுத்த டார்க் தீம் என்ற புதிய வசதி ஆண்ட்ராய்ட் கியூவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தும் போது அமேசான் கிண்டல்-ல் உள்ளது போன்று எழுத்துக்கள் மட்டும் வெள்ளையாகவும் தேவையில்லாத இடங்கள் எல்லாம் கருப்பாகவும் மாறிவிடும்.

கெஸ்ட்சுரல் நேவிகேஷன் மற்றும் பேக் பட்டன்:


ஒரே நேரத்தில் பல செயலிகளைப் பயன்படுத்தும் போது எளிதாகப் பிற செயலிகளுக்குச் செல்லக்கூடிய கெஸ்ட்சுரல் நேவிகேஷன் வசதியை எளிமை படுத்தியுள்ளனர். மேலும் அதில் பேக் பட்டன் ஒன்றையும் அறிமுகம் செய்து அதையும் ஆண்ட்ராய்டு கியூவ்ல் சோதனை செய்து வருகின்றனர்.

பிரத்யேக பிரைவசி பகுதி:


ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் கூகுள் பிரத்யேக பிரைவசி செக்‌ஷன் ஒன்றை செட்டிங்ஸ்-ல் கொண்டு வருகிறது. இது ஒற்றை இடத்தில் மிக முக்கிய கண்ட்ரோல்களை இயக்க வழி செய்கிறது. இதன் மூலம் எந்தச் செயலிக்கு எல்லாம் லொக்கேஷன் அக்சஸ் அளிக்க வேண்டும், வேண்டாம் என்பதை எல்லாம் மேனுவலாகத் தேர்வு செய்ய முடியும்.

பாதுகாப்பு அம்சங்கள்:


மெஸேஜ் வரும்போது அதற்கு என்ன ரிப்ளை அனுப்ப வேண்டும் என்பதை ஆன்லைன் இல்லாமல் ஆஃப்லைனில் கூகுள் அதைப் படிக்காமல் தெரிவுகளை வழங்கும். எனவே உங்கள் மொபைலுக்கு வரும் தகவல்களைக் கூகுள் படிப்பதில்லை என்று உறுதி செய்துள்ளது.

ஃபோக்கஸ் மோட்:


மொபைல் ஃபோனில் உள்ள செயலிகளைச் சிறப்பாக இயக்க கூகுள் ஃபோக்கஸ் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நமக்குத் தேவையில்லாமல் நோட்டிஃபிகேஷன் அனுப்பி தொல்லை கொடுக்கும் செயலிகளை மியூட் மோடில் வைக்க முடியும்.

5ஜி


ஆண்டிராய்டு கியூ 5ஜி இணையதள சேவைக்கு சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோல்டிங் ஸ்மார்ட்ஃபோன்


ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் ஃபோல்டிங் ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்றவாறு ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் இருக்கும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: May 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...