Home /News /technology /

ட்விட்டரில் பாதுகாப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியவை என்ன.!

ட்விட்டரில் பாதுகாப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியவை என்ன.!

Twitter

Twitter

Twitter Account Safety | இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான இணைய அனுபவத்தையும் உறுதி செய்வது அவசியம்.

ட்விட்டர் மிகவும் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த சமூக ஊடகமாகும். மைக்ரோ பிளாகிங் தளமான டிவிட்டரில், பொழுதுபோக்குக்கு பயன்படுத்தும் சாதாரண நபர்கள் முதல், பெரு நிறுவன தலைவர்கள், நாட்டின் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தின் மூன்றாவது குவார்ட்டரின் செயல்திறன் பற்றிய அறிக்கைகளின் படி, 211 மில்லியன் யூசர்கள் பயன்படுத்துகிறார்கள். எவ்வளவோ விதங்களில் பயனுள்ளதாக இருக்கும் டிவிட்டரிலும் வெறுப்புப் பேச்சு மற்றும் அச்சுறுத்தல் ஆகிய பிரச்சனைகள் உள்ளன.

இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான இணைய அனுபவத்தையும் உறுதி செய்வது அவசியம். இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பிப்ரவரி 8 பாதுகாப்பான இணைய தினம் அனுசரிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் ட்விட்டரில் பாதுகாப்பாக இயங்க, உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிகள் உள்ளன. அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

2FA: இப்போது நீங்கள் எந்த தளத்தில் லாகின் செய்தாலும், 2FA (two factor authentication), அதாவது நீங்கள் தான் லாகின் செய்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும், அதை உள்ளிட்டு உறுதி செய்ய வேண்டும். அல்லது, கணக்குக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க உங்களுக்கு சிறப்பு குறியீடுகள் வழங்கப்படும். அதை நீங்கள் உள்ளிட்டால், உங்கள் லாகின் அன்கீகரிக்கபப்டும். ஏற்கனவே, கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் நீங்கள் செய்ய 2FA அங்கீகாரம் தேவை. இது இப்போது ட்விட்டரிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2FA வை இயக்கி உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருங்கள்.



URL களை கிளிக் செய்யும் போது கவனம் தேவை: ட்விட்டர் செயலியைத் தவிர்த்து, https://twitter.com தான் ட்விட்டரின் அதிகாரபூர்வமான தளம் என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் லாகின் தகவலை இந்த URL இல்லாமல் வேறு எந்த தளத்தில் அல்லது மூன்றாம் தரப்பினர் வழியாக வழங்க வேண்டாம்.

Also Read : ஐபோன் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.25000 வரை தள்ளுபடி

பாஸ்வேர்டு ரீசெட் பாதுகாப்பு: நீங்கள் கடவுச்சொல் மாற்றும் போது, அதற்குரிய பாதுகாப்பு செட்டிங்கை அமைத்துக் கொள்ளலாம். கடவுச்சொல் பாதுகாப்பை அமைக்க, Settings and privacy > Security and account access > Security என்பதைப் பின்பற்றவும். நீங்கள் பாஸ்வேர்டை ரீசெட் செய்யும் போது, உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட டிவீட்கள்: பொதுவாக நீங்கள் ட்விட்டர் கணக்கைத் திறக்கும் போது, அது பொதுவாக அனைவராலும் பார்க்கப்படும் (public view). ஆனால், உங்கள் டிவீட் மற்றும் கணக்கை நீங்கள் பாதுகாக்க, நீங்கள் உங்கள் கணக்கை பிரைவேட் கணக்காக மாற்றலாம். அவ்வாறு மாற்றும்போது, உங்களைத் பின்தொடரும் நபர்கள் மட்டுமே உங்களின் டிவீட்களை பார்க்கலாம். அது மட்டும் இன்றி, நீங்கள் ஃபாலோயர்களின் பின்தொடரும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் தான் அவர்கள் உங்கள் டிவீட்களை பார்க்க முடியும்.



உங்கள் கணக்கை பிரைவேட் மோடில் மாற்ற, Settings and privacy > Privacy and safety, என்பதற்குச் சென்று, Audience and tagging > என்பதைத் தேர்ந்தெடுத்து, Protect your Tweets என்பதன் அருகில் இருக்கும் செக் பாக்சை டிக் செய்யவும்.

புகைப்பட டேக் ஆப்ஷன்: புகைப்படங்களில் தேவையற்ற நபர்கள், தேவையற்ற புகைப்படங்களில் உங்களை tag செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், photo tagging என்ற விருப்பத்தை நீங்கள் செயலிழக்கச் செய்யலாம்.

Also Read : Data Privacyஐ பாதுகாக்க இவற்றில் கவனம் செலுத்தினாலே போதும்..!

உங்களைப் பின்தொடர்பவர்கள், நீங்கள் பின்தொடர்பவர்கள்: நீங்கள் ஃபாலோ செய்யும் நபர்களை நீங்கள் விரும்பவில்லை என்றாலோ அல்லது உங்களை ஃபாலோ செய்யும் நபர்களின் கருத்தை நீங்கள் விரும்பவில்லை என்றாலோ, உடனடியாக ட்விட்டர் சண்டையில் ஈடுபடாமல், அந்த கணக்குகளை உங்கள் பின்தொடரும் விருப்பத்தில் இருந்து நீக்கலாம் அல்லது பிளாக் செய்யலாம்.

Also Read : ஆப்பிள் நிறுவனத்தின் "அடேங்கப்பா" ஐடியா!

லொகேஷன் பகிர்தல்: அவசியமாகத் தேவை என்பதைத் தவிர்த்து, உங்கள் சமூக வலைத்தளக் கணக்குகளில் லொகேஷன் பகிரும் விருப்பத்தை எப்போதும் செயலிழக்கச் செய்து வைக்கவும். இதைத் தவிர்த்து, டிவிட்டர் பாலிசிகளை மீறும் பதிவுகள், மீடியாக்கள் உள்ளிட்டவற்றை நீங்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். நீங்கள் பார்க்க விரும்பாத ஹாஷ்டாக்சை, மியூட் செய்யலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Technology, Twitter

அடுத்த செய்தி