Home /News /technology /

தெரியாமல் 'டெலிட்' ஆன வாட்ஸ்அப் மெசேஜை 'ரீஸ்டோர்' செய்வது எப்படி?

தெரியாமல் 'டெலிட்' ஆன வாட்ஸ்அப் மெசேஜை 'ரீஸ்டோர்' செய்வது எப்படி?

WhatsApp

WhatsApp

WhatsApp Chat BackUp | நீங்களும் வாட்ஸ்அப் சாட்டில் இருந்து சில முக்கியமான மெசேஜ்களை டெலிட் செய்துவிட்டு, அதை எப்படி திரும்ப பெறுவது என்று யோசித்துக்கொண்டிருந்தால், இது உங்களுக்கான சரியான இடம். டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட்களை சில எளிய "தந்திரங்களின்" வழியாக மீட்டெடுக்க (ரீஸ்டோர்) முடியும். அதெப்படி என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.

மேலும் படிக்கவும் ...
அன்பானவர்களுடன் உரையாடலை நிகழ்த்தவும், அதிகம் பயன்படுத்தப்படும் இண்டர்நெட் அடிப்படையிலான ஒரு மெசேஜிங் தளமாகவும் வாட்ஸ்அப், தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. சாட் செய்தல், மீடியாக்கள் மற்றும் டாக்குமெண்ட்களை பகிர்தல் போன்ற செயல்முறைகளை எளிதாக்கும் வாட்ஸ்அப்பில் நாம் "தெரிந்தோ தெரியாமலேயோ" அடிக்கடி செய்யும் ஒரு தவறு - சில முக்கியமான வாட்ஸ்அப் சாட்களை / மெசேஜ்களை தவறுதலாக டெலிட் செய்வது தான்.

இப்படியாக நீங்களும் வாட்ஸ்அப் சாட்டில் இருந்து சில முக்கியமான மெசேஜ்களை டெலிட் செய்துவிட்டு, அதை எப்படி திரும்ப பெறுவது என்று யோசித்துக்கொண்டிருந்தால், இது உங்களுக்கான சரியான இடம். டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட்களை சில எளிய "தந்திரங்களின்" வழியாக மீட்டெடுக்க (ரீஸ்டோர்) முடியும். அதெப்படி என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.

டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்வது எப்படி?

தெரியாமல் டெலிட் செய்யப்பட்ட குறிப்பிட்ட சாட்களை நீக்குவதற்கு முன், நீங்கள் 'வாட்ஸ்அப் பேக்கப்'-ஐ எனேபிள் செய்திருந்தால், நீக்கப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை ரீஸ்டோர் செய்வது மிகவும் எளிது. இதற்காக நீங்கள் பேக்கப் எடுக்கப்பட்ட வாட்ஸ்அப் டேட்டாவை வாட்ஸ்அப்பில் 'இம்போர்ட்' செய்ய வேண்டும், இதை செய்யவும் டெலிட் ஆன வாட்ஸ்அப் மெசேஜ்கள் 'ரீஸ்டோர்' செய்யப்படும்

இது தவிர, கூகுள் ட்ரைவிலிருந்தும் கூட வாட்ஸ்அப் மெசேஜ்களை 'ரீஸ்டோர்' செய்யலாம். மேலும் இது எந்தவொரு டிவைஸில் இருந்தும் வாட்ஸ்அப் டேட்டா உட்பட அனைத்து ஃபைல்களையும் பேக்கப் எடுக்கவோ அல்லது அக்சஸ் செய்யவோ அனுமதிக்கும். இப்படியாக கூகுள் ட்ரைவ் மூலம் வாட்ஸ்அப் மெசேஜ்களை பேக்கப் எடுப்பதற்கான படிப்படியான வழிமுறைகள் இதோ:



கூகுள் ட்ரைவில் வாட்ஸ்அப் மெசேஜ்களை பேக்கப் செய்வது எப்படி?

01. உங்கள் வாட்ஸ்அப்பை திறந்து "மோர் ஆப்ஷன்ஸ்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

02. "செட்டிங்ஸ்" என்பதற்குச் சென்று "சாட்ஸ்" என்பதை தேர்ந்தெடுக்கவும்

03. "சாட் பேக்கப்" என்பதைத் தேர்ந்தெடுத்து, "பேக்கப் டூ கூகுள் ட்ரைவ்" என்பதைக் கிளிக் செய்யவும்.

04. இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு 'ரீடைரக்ட்' செய்யப்படுவீர்கள், அங்கு உங்கள் மொபைலுக்கான 'பேக்கப் ப்ரெக்வன்ஸி'யை செட்டப் செய்ய வேண்டும்.

05. ப்ரெக்வன்ஸியை செட் செய்து உங்கள் பேக்கப் சாட் ஹிஸ்டரியை ஸ்டோர் செய்ய விரும்பும் கூகுள் அக்கவுண்ட்-ஐ தேர்வு செய்யவும். உங்கள் டிவைஸில் கூகுள் அக்கவுண்ட் எதுவும் இணைக்கப்படாத நிலையில், "ஆட் அக்கவுண்ட்" என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் லாக்-இன் விவரங்களை உள்ளிடவும்.

06. இப்போது "பேக்கப் ஓவர்" என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பேக்கப்பிற்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் "நெட்வொர்க்கை" தேர்ந்தெடுக்கவும்.

07. பிறகு வாட்ஸ்அப் சாட் பேக்கப் தொடங்கும்.

Also Read : வெப் யூஸர்களுக்காக Code Verify அம்சத்தை அறிமுகப்படுத்திய WhatsApp! எவ்வாறு செயல்படுகிறது

கூகுள் ட்ரைவிலிருந்து டெலிட் ஆன வாட்ஸ்அப் மெசேஜ்களை ரீஸ்டோர் செய்வது எப்படி?

01. உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் கூகுள் ட்ரைவில் பேக்கப் எடுக்கப்பட்டதும், வாட்ஸ்அப்பை டெலிட் செய்துவிட்டு பின் மீண்டும் அதை இன்ஸ்டால் செய்யவும்.

02. இப்போது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட வாட்ஸ்அப் நம்பரை கொண்டு லாக்-இன் செய்யவும். அதற்கு முன் கூகுள் ட்ரைவில் பேக்கப் எடுக்கப்பட்ட டேட்டாவை தானாகவே கண்டறிந்து, அதை ரீஸ்டோர் செய்ய வேண்டுமா என்று கேட்கும்.

03. 'யெஸ்' என்பதை தேர்ந்தெடுக்கவும், இப்போது டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்கள் ரீஸ்டோர் ஆகிவிடும்.
Published by:Selvi M
First published:

Tags: Technology, WhatsApp

அடுத்த செய்தி