Home /News /technology /

இன்ஸ்டாகிராமில் 'நோட்டிஃபிகேஷன்' வராமால் மெசேஜ் அனுப்புவது எப்படி?

இன்ஸ்டாகிராமில் 'நோட்டிஃபிகேஷன்' வராமால் மெசேஜ் அனுப்புவது எப்படி?

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

Instagram : இன்னும் எளிமையாகச் சொன்னால், ஒன்றை அனுப்புநராலும் (Sender) மற்றொன்றைப் பெறுநராலும் (Receiver) கட்டுப்படுத்த முடியும்.

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு முன், அவ்வப்போது - சிறிய அளவிலான நேரத்தை செலவழிக்க பயன்பட்ட சோஷியல் மீடியாக்கள் (சமூக ஊடக தளங்கள்) இப்போது பல மணி நேரங்களை விழுங்குகிறது, பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்காக உருமாறி உள்ளது.

ஆனால் ஒற்றுக்கொள்ளப்படாத ஒரு உண்மை என்னவென்றால், சமூக ஊடகங்கள் வெறுமனே பொழுதுபோக்கிற்கு மட்டும் கட்டுப்பட்டவை அல்ல. வணிகம், வளர்ச்சி, புகழ், கலையை மேம்படுத்துதல் மற்றும் கிட்டத்தட்ட அனைத்திற்குமான ஒரு தளமாக விரிவடைந்துள்ளன - முக்கியமாக இன்ஸ்டாகிராம். இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளங்களில் ஒன்றாகும். இருந்தாலும் கூட சில யூசர்களுக்கு தெரியாத பல தந்திரங்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளன. அதில் ஒன்று தான் 'மியூடட் டி.எம்-கள்' (Muted DMs), அதாவது 'மியூட்' செய்யப்பட்ட 'டைரக்ட் மெசேஜ்கள்'.

ஒருவருக்கு நாம் மெசேஜ் அனுப்பும் முன், இது மெசேஜ் அனுப்ப சரியான நேரமா? அவர் ஃப்ரீயாக இருப்பாரா? அல்லது வேறு வேளையில் பிஸியாக இருப்பாரா? தொந்தரவாகி விடுமோ? என்று நாம் பல முறை யோசிக்க வேண்டி இருக்கும்! சரி தானே? .. இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்கவே இன்ஸ்டாகிராம் தளமானது சைலன்ட் ஆக மெசேஜ் அனுப்பும் விருப்பத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த இடத்தில் சாட்-ஐ மியூட் செய்யும் விருப்பத்தையும், மியூடட் டிஎம் விருப்பத்தையும் ஒன்றென நினைத்து நாம் குழப்பமடைய கூடாது. ஏனெனில் இந்த இரண்டு அம்சங்களும் வேறுபட்டவை.

இதையும் படியுங்கள் : 9வது தளத்தில் ஊசலாடும் சிறுவன் உயிர்... பெற்ற மகனை பெட்ஷீட்டில் கட்டி தொங்கவிட்ட அம்மா!

இன்னும் எளிமையாகச் சொன்னால், ஒன்றை அனுப்புநராலும் (Sender) மற்றொன்றைப் பெறுநராலும் (Receiver) கட்டுப்படுத்த முடியும். ஒருவரின் மெசேஜ் அல்லது ஏதேனும் ஒரு க்ரூப் சாட்டின் மெசேஜை பற்றிய நோட்டிஃபிக்கேஷனை நீங்கள் பெற விரும்பவில்லை என்றால் நீங்கள் குறிப்பிட்ட சாட்-ஐ மியூட் செய்யலாம்.

மறுபுறம், ஒரு மெசேஜை அனுப்புவதன் மூலம் அதை பெறுபவரை நீங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றால், மெசேஜ் சார்ந்த எந்த நோட்டிஃபிக்கேஷனையும் அவர் பெறாதபடி அதை 'மியூடட் டிஎம்' ஆக அனுப்பலாம். இந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் அனுப்பும் மெசேஜ் ஆனது சத்தமில்லாமல் பெறுநரை சென்று அடையும், அவர்கள் எப்போது மெசேஜ்களை செக் செய்ய விரும்புகிறார்களோ அப்போது நீங்கள் அனுப்பிய மெசேஜை பார்த்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : கல்யாணத்துக்கு அழைப்பு இல்லாமல் வரக் கூடாது, குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது - இது மணப்பெண்ணின் கன்டிஷன்

மியூடட் டிஎம்-ஐ அனுப்புவது எப்படி? என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அது மிகவும் சுலபம். நீங்கள் செய்ய வேண்டியது கீழ்வரும் எளிய மற்றும் படிப்படியான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

01. இன்ஸ்டாகிராம் ஆப்பிற்குள் சென்று மேல் வலது மூலையில் உள்ள டிஎம் ஐகானை கிளிக் செய்யவும்.

02. இப்போது யாருக்கு நீங்கள் ஒரு மியூடட் டிஎம்-ஐ அனுப்ப விரும்புகிறீர்களோ அவரை தேர்ந்தெடுக்கவும்

03. பின்னர் சாட்பாக்ஸில் நீங்கள் அனுப்ப விரும்பும் மெசேஜிற்கு முன்னாள் ‘@silent’ (@சைலன்ட்) என்று டைப் செய்யவும்

04. பிறகு மெசேஜை டைப் செய்து, வழக்கம் போல சென்ட் (send) பட்டனை அழுத்தவும், அவ்வளவுதான்!

நீங்கள் இந்த வழிமுறையை பின்பற்றும் பட்சத்தில்,நீங்கள் அனுப்பும் மெசேஜை குறிப்பிட்ட பெறுநர் உடனே பெறுவார், ஆனால் அது சார்ந்த நோட்டிஃபிக்கேஷனை அவர் பெற மாட்டார். ஒருவேளை அவர்கள் ஆபிஸ் மீட்டிங்கில் இருந்தாலோ அல்லது வாகனம் ஓட்டிக்கொண்டு இருந்தாலோ, உங்கள் மெசேஜ் அவரை தொந்தரவு செய்யாது.

இதையும் படியுங்கள் : கடல் எவ்வளவு கருமையானது என்பதை தனது டிக் டாக் வீடியோ மூலம் புரிய வைத்த எண்ணெய் எடுக்கும் பணியாளர்!

அவர்கள் எப்போது இன்ஸ்டாகிராம் ஆப்பைத் திறந்து மெசேஜ்களை பார்க்க விரும்புகிறாரோ அப்போது தான் நீங்கள் அனுப்பிய மெசேஜ் தென்படும். பின்னர் அவர்களின் விருப்பத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ப பதிலளிக்க முடியும். இந்த அம்சத்தின் கீழ் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் - மெசேஜை டைப் செய்வதற்கு முன் நீங்கள் டைப் செய்த '@சைலன்ட்‘ என்கிற வார்த்தையும் மெசேஜோடு சேர்த்து தெரியும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Instagram

அடுத்த செய்தி