Home /News /technology /

Google App உங்கள் லொகேஷனை டிராக் செய்ய விடாமல் தடுப்பது எப்படி.!

Google App உங்கள் லொகேஷனை டிராக் செய்ய விடாமல் தடுப்பது எப்படி.!

Google

Google

Google | என்னதான், கூகுள் நிறுவனம் மேம்பட்ட சேவைகளை வழங்குகிறது என்றாலும், தங்கள் லொகேஷனை அது டிராக் செய்வதை பலரும் விரும்புவதில்லை. அதே சமயம், உங்களுக்கான தீர்வுகளும் உண்டு. அதாவது, லொகேஷன் டிராக் செய்யப்படுவதை நீங்கள் தடுத்து வைக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
தொழில்நுட்ப உலகில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான சாஃப்ட்வேர்களை கூகுள் நிறுவனம் தான் வழங்கி வருகிறது. மேப்கள் முதல் கூகுள் குரோம் பிரவுஸர் வரையில், பயனாளர்கள் இந்த நிறுவனத்தின் பன்முக ஆப்களை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் நிறுவனத்தின் சேவைகள் நம் அன்றாட வாழ்வில் அவசியமான ஒன்றாகிவிட்டன. அதே சமயம், கூகுள் நிறுவனத்தின் சில ஆப்கள் மற்றும் சேவைகள் என்பது நமது டிவைஸில் உள்ள சேர்ச் ஹிஸ்டரி, டிவைஸ் லொகேஷன் உள்ளிட்ட தனி விவரங்களை சேகரிக்க கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த விவரங்களை பயன்படுத்தி, மேம்பட்ட சேர்ச் ஆப்சன்களை பயனாளர்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்குகிறது. அதாவது உங்கள் லொகேஷன் அடிப்படையில் போக்குவரத்து டிராஃபிக் கணக்கீடு செய்வது, உங்களுக்கு அருகாமையில் உள்ள வணிக வாய்ப்புகளை காண்பிப்பது என்று பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

என்னதான், கூகுள் நிறுவனம் மேம்பட்ட சேவைகளை வழங்குகிறது என்றாலும், தங்கள் லொகேஷனை அது டிராக் செய்வதை பலரும் விரும்புவதில்லை. அதே சமயம், உங்களுக்கான தீர்வுகளும் உண்டு. அதாவது, லொகேஷன் டிராக் செய்யப்படுவதை நீங்கள் தடுத்து வைக்கலாம்.



ஆண்டிராய்டு ஃபோன்களில் அனைத்து ஆப்களிலும் லொகேஷன் டிராக் செய்யப்படுவதை நிறுத்துவது எப்படி

  • உங்கள் ஆண்டிராய்டு டிவைஸில் செட்டிங்ஸ் என்ற ஆப்-ஐ ஓப்பன் செய்யவும்.

  • அதில் உள்ள லொகேஷன் ஆப்சனை கிளிக் செய்யவும்.

  • லொகேஷன் டிராக் செய்யப்படுவதை தடுக்க விரும்பினால், இந்தப் பக்கத்தின் மேல் நேவிகேஷன் செய்து, ‘யூஸ் லொகேஷன்’ என்ற ஆப்சனை டர்ன் ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.


  • Also Read : 28 நாள் வேலிடிட்டிக்கு முடிவு கட்டும் ஜியோ... மாதாந்திர ரீசார்ஜ் பிளான் திட்டம் அறிமுகம்

    லொகேஷன் டர்ன் ஆஃப் கொடுத்து விட்டீர்கள் என்றால், நீங்கள் எந்த ஆப் பயன்படுத்தும்போதும் லொகேஷன் டிராக் தடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, டேட்டா அனுப்பும்போது அல்லது ரிசீவ் செய்யும்போது லொகேஷன் தடுக்கப்படும்.

    குறிப்பாக, நீங்கள் டாக்ஸி ஆப் அல்லது ஆன்லைன் டெலிவரி ஆப் போன்றவற்றை பயன்படுத்தும்போது மேனுவலாக லொகேஷன் ஆன் செய்ய வேண்டியிருக்கும். அது உங்களுக்கு சிரமமானதாக தோன்றலாம்.

    Also Read : Google Chrome-ல் பாதுகாப்பு சிக்கல்.. உங்கள் டிவைஸ் ஹேக் செய்யப்படுவதை தவிர்க்க உடனே இதை செய்யுங்கள்.

    கூகுளின் லொகேஷன் ஹிஸ்டரி செட்டிங்ஸ் ஆஃப் செய்வது எப்படி

    • உங்கள் ஃபோனில் செட்டிங்க்ஸ் ஆப் திறந்து, அதில் கூகுள் என்பதன் மீது கிளிக் செய்யவும்.

    • இப்போது, “மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட்’’ என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.

    • இப்போது, ‘பிரைவேஸி & பெர்சனலைசேஷன்’ என்ற ஆப்சனை டேப் செய்யவும்.

    • ‘டேட்டா & பிரைவேஸி’ ஆப்சனின் கீழ் ‘லொகேஷன் ஹிஸ்டரி’ என்பதை தேர்வு செய்யவும்.

    • இப்போது, லொகேஷன் ஹிஸ்டரி ஆப்சனை டர்ன் ஆஃப் செய்து கொள்ளலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Google, Technology

அடுத்த செய்தி