ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இன்வெர்டர் வாங்கும்போது இதையெல்லாம் அவசியம் கவனியுங்க.!

இன்வெர்டர் வாங்கும்போது இதையெல்லாம் அவசியம் கவனியுங்க.!

Inverter

Inverter

Inverter | இன்வெர்ட்டர்களுக்கு வழங்கப்படும் ஆற்றல் மதிப்பீடுகள் மிக முக்கியமானவை. இவை முறையான வோல்ட் ஆம்பியர் (VA) மதிப்பீட்டில் குறிக்கப்படுகின்றன, இது மின்னழுத்தம் மற்றும் மின்சாதனங்களுக்கு இன்வெர்ட்டர் வழங்கும் மின்சாரத்தை குறிக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வெயில் காலம் வந்து விட்டாலே அடிக்கடி கரெண்ட் கட் ஏற்படும். இது வழக்கமான ஒன்று தான் என்றாலும், வெயிலை சமாளிக்க எல்லோர் வீட்டிலும் கரெண்ட் இருந்தாக வேண்டிய சூழல் உள்ளது. நாளுக்கு நாள் வெயில் அதிகமாகி வருவதால், சில நிமிடங்கள் ஃபேன், ஏசி, ஏர் கூலர்ஸ் இல்லாமல் யாராலும் இருக்க முடிவதில்லை. எனவே கரெண்ட் இல்லாவிட்டாலும் இன்வெர்ட்டர் போன்ற மின் சாதனங்கள் நமக்கு மிக உபயோகமாக இருக்கின்றன. நீங்கள் இன்வெர்டர் வாங்க விரும்பினால் சில விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை பற்றி இனி விரிவாக பார்ப்போம்.

எவ்வளவு பவர் தேவை.?

கரெண்ட் கட் ஆகும்போது இன்வெர்ட்டர் லைனில் தேவைப்பட கூடிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் எண்ணிக்கையை நீங்கள் முதலில் பட்டியலிட வேண்டும். லைட்டுகள் மற்றும் ஃபேன்கள் போன்றவற்றை பொதுவாக பயன்படுத்துவோம். இதை தவிர்த்து வேறு சில மின் சாதனங்களை வேண்டுமானால் இந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளலாம். ஆனால், இவை உங்கள் பட்ஜெட்டுக்குள் வருமா என்பதை பலமுறை யோசித்து கொள்ளுங்கள்.

சரியான இன்வெர்ட்டரை எவ்வாறு பெறுவது :

இன்வெர்ட்டர்களுக்கு வழங்கப்படும் ஆற்றல் மதிப்பீடுகள் மிக முக்கியமானவை. இவை முறையான வோல்ட் ஆம்பியர் (VA) மதிப்பீட்டில் குறிக்கப்படுகின்றன, இது மின்னழுத்தம் மற்றும் மின்சாதனங்களுக்கு இன்வெர்ட்டர் வழங்கும் மின்சாரத்தை குறிக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்படும் போது ஒரு சராசரி குடும்பத்திற்கு 2 ஃபேன்கள் மற்றும் 2 லைட்டுகள் பயன்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற பயன்பாட்டிற்கு, சுமார் 250 VA இன்வெர்ட்டரை வாங்க வேண்டும். ஒருவேளை ஃபிரிட்ஜ் அல்லது டிவி ஆகியவற்றிற்கும் இன்வெர்ட்டரை பயன்படுத்த விரும்பினால், அதனின் மின்சார அளவு மற்றும் ஆற்றல் அடிப்படையில் இன்வெர்ட்டர் அளவு மற்றும் திறன் அதிகரிக்கும்.

பேட்டரி :

சரியான பேட்டரி அளவுடன் இன்வெர்ட்டர் பொருத்தவில்லை என்றால் அதை வாங்குவதில் எந்த அர்த்தமுமில்லை. எப்போதும் சரியான அளவு பேட்டரியை வாங்குவது முக்கியம். இதை கணக்கிடுவதற்கான பல்வேறு வழிகள் உள்ளன, அதற்கு முன்னர் உங்கள் தேவைகளைப் பற்றி நன்றாக யோசித்து கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் இன்வெர்டர் மூலம் இயக்க கூடிய சாதனங்களை பட்டியலிடுவது தான் எந்த அளவு கொண்ட பேட்டரி வாங்க வேண்டும் என்பதை எளிதில் தீர்மானிக்கும்.

Also Read : Google Pay, PayTM வழியாக ஆன்லைனில் தங்கம் வாங்குவது எப்படி?

முக்கிய உதவி குறிப்புகள் :

இன்வெர்ட்டர்களை மின்சாரம் இல்லாத போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக முழு நேர மின் விநியோகத்திற்கு அவற்றைப் பயன்படுத்த கூடாது. இன்வெர்டர் பேட்டரியை தொடர்ந்து சார்ஜ் செய்ய வேண்டும். பேட்டரியின் திறனை எப்போதும் கண்காணிக்க வேண்டும். இன்வெர்ட்டரில் பேட்டரி குறைவாக இருப்பதை காணும் போது, உடனே தொழில்நுட்ப நிபுணரை அழைத்து அதை சரிசெய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் மட்டுமே இன்வெர்டர் நீண்ட காலத்திற்கு வரும். இல்லையெனில் மிக குறைந்த மாதங்களிலே பழுதாகி போவதற்கு வாய்ப்புள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Technology