Home /News /technology /

Wi-Fi ரவுட்டர்கள் எவ்வாறு செயல்படுகின்றன.? 2.4GHz மற்றும் 5GHz இரண்டுக்கும் இடையிலான வித்தியாசங்கள்.!

Wi-Fi ரவுட்டர்கள் எவ்வாறு செயல்படுகின்றன.? 2.4GHz மற்றும் 5GHz இரண்டுக்கும் இடையிலான வித்தியாசங்கள்.!

Wifi

Wifi

Wi-Fi router | பெரும்பாலான ரவுட்டர்களை இன்டர்நெட் கனெக்ஷனுடன் அவற்றை செட் செய்த பிறகு, வயர்லெஸ் நெட்வொர்க் அல்லது லேன் போர்ட்களை பயன்படுத்தி டிவைஸ்களை இணைக்கலாம். வயர்லெஸ் கனெக்ஷன் பெரும்பாலும் டேட்டா மற்றும் ஃபைல்ஸ் பரிமாற்றங்களுக்கான ஸ்பீட் லிமிட்டை கொண்டிருக்கும்.

மேலும் படிக்கவும் ...
கோவிட் தொற்று காரணமாக பலரும் இன்னும் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்து வருகின்றனர். இந்த 2 ஆண்டுகளில் பல வீடுகளில் வைஃபை ரவுட்டர்கள் (Wi-Fi router) வந்துவிட்டன. நம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்ஸ், டெஸ்க்டாப்ஸ் மற்றும் ஸ்மார்ட் டிவி-க்கள் உள்ளிட்ட டிவைஸ்கள் வேகமாக மற்றும் அதிவேக இன்டர்நெட் பெறுவதை வைஃபை ரவுட்டர்கள் உறுதி செய்கின்றன.

இப்போது இந்த வைஃபை ரவுட்டர்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அவை நம் வாழ்க்கையை எவ்வாறு எளிதாக்குகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

வைஃபை ரவுட்டர்கள் என்றால் என்ன?

வைஃபை ரவுட்டர் என்பது இன்டர்நெட் மற்றும் நம் கேஜெட்டுகளுக்கு இடையேயான இணைப்பை எளிதாக்கும் ஒரு பிசிக்கல் டிவைஸாகும். பொதுவாக வைஃபை ரவுட்டர்களில் வயர்டு இன்புட் சாக்கெட், சில லேன் அவுட்புட் சாக்கெட்ஸ், ஆண்டெனாக்கள் மற்றும் பட்டன்கள் இருக்கின்றன. ரவுட்டர்களின் டிசைன்கள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும் மற்றும் டிசைன் ரவுட்டர் எவ்வளவு பவர்ஃபுல் என்பதை பொறுத்தது. வீடு மற்றும் அலுவலகங்கள் என பயன்படுத்தும் இடங்களுக்கு ஏற்ப வெவ்வேறு ரவுட்டர் செக்மென்ட்கள் உள்ளன.

எப்படி வேலை செய்கிறது?

ரவுட்டரை சுற்றி வயர்லெஸ் நெட்வொர்க் பபிள்-ஐ ( wireless network bubble) உருவாக்குவதன் மூலம் வைஃபை ரவுட்டர்கள் செயல்படுகின்றன. வைஃபை ரவுட்டர் உருவாக்கும் bubble-ல் உள்ள எந்த டிவைஸும், அந்த ரவுட்டரை கண்டறிந்து நன்றாக கனெக்ட் ஆகும். வைஃபை ரவுட்டருடன் பல டிவைஸ்கள் ஒரே நேரத்தில் இணைக்கப்பட்டவுடன், அவற்றுக்கிடையே ரேடியோ அலைகள் மூலம் வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க் நிறுவப்படுகிறது. மேலும் டிவைஸ்கள் அனைத்தையும் ஒன்றோடொன்று இணைக்க இது அனுமதிக்கிறது.



உதாரணமாக ஒரே WLAN-ல் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் வரை உங்கள் டெஸ்க்டாப்பில் ஃபைல்ஸ்களை அணுக, உங்கள் ஸ்மார்ட்போனை செட்டப் செய்யலாம். அதே போல மல்டிபிளேயர் கேமிங் செஷனுக்கு நீங்கள் பல PC-க்களை ஒன்றாக இணைக்கலாம். ஆக்ட்டிவாக இருக்கும் நெட் கனெக்ஷனை ரவுட்டரில் பிளக் செய்தவுடன், அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து டிவைஸ்களிலும் இப்போது அந்த இன்டர்நெட் கனெக்ஷனை அணுகலாம்.

Also Read : ரூ.1,000-க்கும் குறைவான கட்டணத்தில் அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வேண்டுமா?

பெரும்பாலான ரவுட்டர்களை இன்டர்நெட் கனெக்ஷனுடன் அவற்றை செட் செய்த பிறகு, வயர்லெஸ் நெட்வொர்க் அல்லது லேன் போர்ட்களை பயன்படுத்தி டிவைஸ்களை இணைக்கலாம். வயர்லெஸ் கனெக்ஷன் பெரும்பாலும் டேட்டா மற்றும் ஃபைல்ஸ் பரிமாற்றங்களுக்கான ஸ்பீட் லிமிட்டை கொண்டிருக்கும், ஆனால் நேராக ஈத்தர்நெட் போர்ட்டிற்குள் (RJ45 port) செல்லும் LAN connection ஃபாஸ்ட்டஸ்ட் கனெக்ஷனை அனுமதிக்கும்.

Also Read : டிஜிட்டல் மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி.? டிப்ஸ்.!

2.4GHz மற்றும் 5GHz bands என்றால் என்ன.?

வைஃபை தற்போது 2.4GHz மற்றும் 5GHz ஆகிய 2 வகையான அலைவரிசைகள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இதில் 2.4GHz அலைவரிசையை மட்டுமே சப்போர்ட் செய்பவை சிங்கிள்-பேண்ட் ரவுட்டர் என்றும், 2.4Ghz மற்றும் 5Ghz அலைவரிசைகளை சப்போர்ட் செய்பவை டூயல்-பேண்ட் ரவுட்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரே அலைவரிசையை பயன்படுத்தும் பல டிவைஸ்கள் கனெக்ஷன் ட்ராஃபிக்கிற்கு வழிவகுக்கின்றன.



இதனால் Wi-Fi நெட்வொர்க்கின் வேகம் பாதிக்கிறது. இந்த நிலையில் தான் 5Ghz பிரபலமடைந்து வருகிறது. ஏனென்றால் இந்த புதிய அலைவரிசையை பயன்படுத்தும் டிவைஸ்கள் குறைவாகவே உள்ளன. எனவே குறுக்கீடு குறையும். அதே நேரம் 2.4Ghz ஸ்லோ ஸ்பீடை கொண்டிருந்தாலும், 5Ghz ஐ விட அதிக ரேஞ்சை கொண்டுள்ளது. ஏனென்றால் அலைவரிசை அதிகரிக்க அதிகரிக்க அதால் (5Ghz) அதிக தூரம் பயணிக்க முடியாது.

Also Read : வீட்டில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பதற்கான டிரிக்ஸ்

வைஃபை ரவுட்டரின் சில நன்மைகள்..

இன்டர்நெட் மற்றும் உங்கள் டிவைஸ்களுக்கு இடையே வயர்லெஸ் வசதியை மட்டுமின்றி அனுபவத்தை மேம்படுத்தும் சில நன்மைகளையும் தருகிறது. உங்களுக்கு தெரியாத யூஸர்கள் உங்கள் ரவுட்டரை பயன்படுத்துவதை தடுத்து அவர்களை பிளாக் செய்ய, நீங்கள் பயன்படுத்தும் டிவைஸ்களுக்கு ஏற்றவாறு ஸ்பீடை செட் செய்ய, யூஎஸ்பி போர்ட்ஸ், பேரண்டல் கன்ட்ரோல்ஸ் உள்ளிட்ட சில நன்மைகளை வைஃபை ரவுட்டர்கள் மூலம் யூஸர்கள் பெறலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Technology, Wifi

அடுத்த செய்தி