மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயக்குதளம் நம்ப முடியாத அளவிற்கு பல்வேறு வகையான அம்சங்களை கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக பயன்படுத்துவபவர்கள் கூட அதனை முழுமையாக ஆராய்ந்து என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு, மகத்தான அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. யூசர்களுக்குத் தேவைப்படும் அனைத்து அம்சங்களையும் ஒவ்வொரு அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் விண்டோசுடனும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்குகிறது. வெவ்வேறு OS வகைகள் வந்தாலும், விண்டோஸ் தான் பெரும்பாலானவர்களால் விரும்பப்படுகிறது.
மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு OS கணினி மற்றும் லேப்டாப்பிலும் பயன்படுத்தும் அம்சங்கள் உள்ளன.குறிப்பாக ஒரே டெஸ்க்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பல்வேறு ஆப்ரேட்டிங் சிஸ்டங்களை இயக்க முடிந்தால் வசதியாக இருக்குமே என்று பலரும் எண்ணியிருந்தனர். ஒரே கம்ப்யூட்டரில் விண்டோஸ் OS உடன் பல OSகளை பயன்படுத்த, ஹைப்பர்-வி என்ற மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் உள்ள ஹார்ட்வேர் உதவுகிறது.
ஹார்ட் டிஸ்க், டிரைவ், BiOs, நெட்வொர்க் அடாப்டர்கள் மூலமாக மெயின் கம்ப்யூட்டர்களில் இணைக்க கூடிய வேறு இயங்குதளங்களைக் கொண்ட விர்ச்சுவல் கம்ப்யூட்டர்கலை இயக்க உதவுகிறது.
விண்டோஸின் பழைய வெர்ஷன் அல்லது விண்டோஸ் அல்லாத வேறு இயங்குதளத்தை கொண்ட கம்ப்யூட்டரை இயக்க, தேவை ஏற்படும் போது ஹைபர்-வி உதவுகிறது. இது யூஸர்கள், குறிப்பாக சாப்ட்வேர் டிசைனர்கள், பொறியாளர்கள் ஆகியோர் தாங்கள் விரும்பும் மென்பொருளை பல்வேறு இயக்க முறைகளில் சோதித்து பார்க்க உதவுகிறது. ஒரு டெஸ்க்டாப் அல்லது கணினியில் பல விர்ச்சுவல் இயந்திரங்களைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல இயங்குதளங்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும்.
விண்டோஸ் 11 இயங்குதளம் கொண்ட லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் ஹைபர் வி-யை இயக்குவது எப்படி என பார்க்கலாம்...
1. ஒரு டெக்ஸ்ட் ஃபைலை உருவாக்க நோட்பேட் ஒன்றை திறக்கவும்.
2. அடுத்தாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Code-யை பதிவு செய்து, நோட்பேட்டில் சேமிக்கவும்.
3. hv.bat. என்ற பெயரில் ஃபைலை சேமிக்கவும். கணினியில், நீங்கள் விரும்பும் இடத்தில் சேமிக்கலாம்.
4. கணினியில் சேமிக்கப்பட்ட கோப்பைக் கண்டுபிடித்து, அதன் மீது வலது மூலையில் க்ளிக் செய்து, ‘Run as administrator’ என்பதை தேர்வு செய்யவும்.
5. UAC ப்ராம்ட்டில் 'ஆம்' என்பதை க்ளிக் செய்யவும். உடனடியாக கமெண்ட் ப்ராம்ட் ஸ்கிரிப்டை இயக்குவதை காணலாம்.
Also read... உங்கள் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் அக்கவுண்ட்-ஐ கட்டுப்படுத்தக் கூடிய மால்வேர்
6. ஸ்கிரிப்ட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு, கம்ப்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்ய 'Y' பட்டனை அழுத்தவும்.
7. ரீ-ஸ்டார்ட் செய்த பிறகு உங்களுடைய கம்ப்யூட்டரில் ஹைபர்-வி சாப்ட்வேர் சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். ‘ஹைப்பர்-வி மேனேஜர்’ என அழைக்கப்படும்.
8. அடுத்து, ரன் கட்டளையை மீண்டும் திறந்து "optionalfeatures.exe" என டைப் செய்து என்டர் பட்டனை தட்டவும்.
9. இதையடுத்து விண்டோஸ் ஆப்ஷனல் அம்சங்களை காட்டும், அதில் கீழே ஸ்க்ரோல் செய்து ஹைப்பர்-வி, விண்டோஸ் ஹைப்பர்வைசர் பிளாட்ஃபார்ம் மற்றும் விர்ச்சுவல் மெஷின் பிளாட்ஃபார்ம் ஆகியவற்றை தேர்வு செய்யவும். கடைசியாக OK என்பதை அழுத்தவும்.
10. இப்போது உங்கள் Windows 11 ஹோம் ஸ்கீரினில் Hyper-V வெற்றிகரமாக இயக்கப்படுவதை காணலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.