Home /News /technology /

WhatsApp, Messenger, Telegram போன்ற ஆப்களில் நோட்டிபிகேஷன் தொந்தரவாக இருக்கா? - Mute செய்வது எப்படி

WhatsApp, Messenger, Telegram போன்ற ஆப்களில் நோட்டிபிகேஷன் தொந்தரவாக இருக்கா? - Mute செய்வது எப்படி

Mobile Apps

Mobile Apps

App Notifications | நமக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பில் இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், நமக்கு எரிச்சல் தருகிற அல்லது குரூப்களில் வந்து குவியும் மெசேஜ்களில் இருந்து நாம் தப்பிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட நேரத்திற்கு அல்லது காலவரையறை இன்றி குரூப் சாட்கள் அல்லது தனிநபர் சாட்களை மியூட் செய்யும் வசதியை நமக்கு இந்த ஆப்கள் வழங்குகின்றன.

மேலும் படிக்கவும் ...
வாட்ஸ் அப், மெசெஞ்சர், டெலிகிராம் போன்ற ஆப்களின் வருகையால், நாம் நண்பர்கள், குடும்பத்தார்கள், புதிதாக அறிமுகம் ஆகும் நபர்கள் என அனைத்து தரப்பினருடனும் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்க முடிகிறது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களிடம் கூட, உரையாடல் மற்றும் வீடியோ காலிங் மூலமாக நமக்கு அருகில் இருப்பதைப் போன்ற உணர்வை இந்த ஆப்கள் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, தொலைதூரத்தில் இருப்பவர்களும் நம்மோடு நம் வீட்டில், நம் அறையில் இருப்பதைப் போன்ற திருப்தியை இவை ஏற்படுத்துகின்றன. ஆகவே, நம் வாழ்க்கையில் இந்த ஆப்களின் பயன்பாடு மிக முக்கியமானதாகும்.

நமக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பில் இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், நமக்கு எரிச்சல் தருகிற அல்லது குரூப்களில் வந்து குவியும் மெசேஜ்களில் இருந்து நாம் தப்பிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட நேரத்திற்கு அல்லது காலவரையறை இன்றி குரூப் சாட்கள் அல்லது தனிநபர் சாட்களை மியூட் செய்யும் வசதியை நமக்கு இந்த ஆப்கள் வழங்குகின்றன. கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றி, நீங்கள் உங்களுக்குப் பிடிக்காத சாட்களை மியூட் செய்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப்-பில் மியூட் செய்வது எப்படி

  • நீங்கள் மியூட் செய்ய விரும்பும் சாட் எது என்று தேர்வு செய்யுங்கள்.

  • அந்த புரொபைல் சிம்பல் மீது லாங் பிரஸ் செய்யவும்.

  • இப்போது டாப் பகுதியில் மியூட் ஐகான் ஒன்று தோன்றும்.

  • அதை நீங்கள் டேப் செய்யும்போது, எவ்வளவு காலத்திற்கு (8 மணி நேரம், 1 வாரம், எப்போதும்) மியூட் செய்ய வேண்டும் என்ற ஆப்சன்களை காட்டும்.

  • உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து ஓகே கொடுக்கவும்.




  • மெசஞ்சரில் மியூட் செய்வது எப்படி

    • மெசஞ்சரில் நீங்கள் மியூட் செய்ய விரும்பும் காண்டாக்ட் மீது லாங் பிரஸ் செய்யவும்.

    • மியூட் மெசேஜ் நோடிஃபிகேஷன்ஸ், மியூட் கால் நோடிஃபிகேஷன்ஸ் மற்றும் மியூட் மெசேஜ் மற்றும் கால் நோடிஃபிகேஷன்ஸ் என்ற மூன்று ஆப்சன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

    • இதில், நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும். மூன்றாவது ஆப்சனை தேர்வு செய்தால் கால் மற்றும் மெசேஜ் என இரண்டுமே டிஸேபிள் ஆகிவிடும்.

    • இறுதியாக ஓகே கொடுத்தீர்கள் என்றால், பிரச்சினை தீர்ந்தது.


    • Also Read : ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்கள்... உங்கள் பணம் காணாமல் போகலாம்.. பகீர் எச்சரிக்கை...

      டெலிகிராமில் மியூட் செய்வது எப்படி

      • டெலிகிராமில் நீங்கள் மியூட் செய்ய விரும்பும் சாட் மீது லாங் பிரஸ் செய்யவும்.

      • ஃபேஜின் டாப் பகுதி மீது மியூட் ஆப்சன் இருக்கும்.

      • இதை தேர்வு செய்து ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் என்ற கால அளவில் மியூட் செய்யலாம்.

      • உங்களுக்கு விருப்பமான ஒன்றை இதிலிருந்து தேர்வு செய்தால், குறிப்பிட்ட காலம் வரையிலும் உங்களுக்கு நோடிஃபிகேஷன் வராது.

Published by:Selvi M
First published:

Tags: Technology, Telegram, WhatsApp

அடுத்த செய்தி