Home /News /technology /

நெட்பிளிக்ஸ் இலவசமாக வேண்டுமா - ஏர்டெல்லின் அசத்தலான 2 பிளான்கள்

நெட்பிளிக்ஸ் இலவசமாக வேண்டுமா - ஏர்டெல்லின் அசத்தலான 2 பிளான்கள்

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் அதன் இரண்டு போஸ்ட்பெய்ட் ஃபேமிலி பிளான்களின் கீழ், நெட்பிளிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. குறிப்பிட்ட திட்டங்கள் - ரூ.1,199 மற்றும் ரூ.1,599 ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் அதன் இரண்டு போஸ்ட்பெய்ட் ஃபேமிலி பிளான்களின் கீழ், நெட்பிளிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. குறிப்பிட்ட திட்டங்கள் - ரூ.1,199 மற்றும் ரூ.1,599 ஆகும்.

ஏர்டெல் சந்தாதாரர்கள் ரூ.1199 திட்டத்தின் கீழ், நெட்பிளிக்ஸ் சேவையின் பேஸிக் பிளானிற்கான மாதாந்திர அணுகலை பெறலாம்.  அதேபோல், ரூ.1,599 ரீசார்ஜ் வழியாக நெட்பிளிக்ஸ் சேவையின் ஸ்டாண்டர்ட் பிளானிற்கான மாதாந்திர அணுகலை பெறுவார்கள்.

ஏர்டெல் ரூ.1199 போஸ்ட்பெய்ட் ஃபேமிலி பிளானின் விரிவான நன்மைகள்:

- ஃபேமிலி மெம்பர்களுக்கு 2 இலவச ஆட்-ஆன் ரெகுலர் வாய்ஸ் கனெக்ஷன்ஸ்

- அன்லிமிடெட் கால்ஸ் (லோக்கல் + எஸ்டிடி + ரோமிங்)

- 150 ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா (ஒவ்வொரு ஆட்-ஆனுக்கும் 30 ஜிபி)

- 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் ஆதரவு

- தினமும் 100 எஸ்எம்எஸ் (லோக்கல் + எஸ்டிடி + ரோமிங்), அதன் பிறகு ஒரு எஸ்எம்எஸ்-க்கு 10 பைசா வசூலிக்கப்படும்

- ஏர்டெல் தேங்க்ஸ் பிளாட்டினம் நன்மைககளின் கீழ்: இலவச நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானின் மாதாந்திர சந்தா, 1 வருடத்திற்கு இலவச அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப், 1 வருடத்திற்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பிளான், ஹேண்ட்செட் ப்ரொடெக்ஷன், ஷா அகாடமி லைஃப்டைம் அக்சஸ் மற்றும் இலவச விங்க் ம்யூசிக் ப்ரீமியம் சந்தா.

ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் ஃபேமிலி பிளானின் விரிவான நன்மைகள்:

ரூ.1599 போஸ்ட்பெய்ட் ஃபேமிலி ரீசார்ஜ் ஆனது ரூ.1199 போஸ்ட்பெய்ட் ஃபேமிலி ரீசார்ஜ் வழங்கும் அதே நன்மைகளையே வழங்குகிறது. ஆனால் ரூ.1599 திட்டமானது 2 ஆட்-ஆன்களுக்கு பதிலாக 3 இலவச ஆட்-ஆன்களை வழங்குகிறது மற்றும் 150 ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 250 ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது.

மேற்கண்ட இந்த 2 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் வழியாக அணுக கிடைக்கும் நெட்பிளிக்ஸ் சந்தாவை ஆக்டிவேட் செய்வது எப்படி? என்கிற படிப்படியான மற்றும் எளிமையான வழிமுறைகள் இதோ:

- ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் அல்லது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் இருந்து ஏர்டெல் நெட்பிளிக்ஸ் பண்டில் பிளானை வாங்கவும் (அல்லது அப்கிரேட் செய்யவும்).

- பிளான் ஆக்டிவேட் செய்யப்பட்டதும் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஆக்டிவேஷன் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

Also read... ஃபோன் மற்றும் மெசேஜ் ஆப்களை பயன்படுத்தி, ஆண்டிராய்டு யூஸர்களின் விவரங்களை திருடிய கூகுள்..

- நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் ஐ ஆக்டிவேட் செய்ய, கிடைக்கப்பெற்ற எஸ்எம்எஸ் இல் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

- அல்லது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் உள்ள டிஸ்கவர் தேங்க்ஸ் பெனிஃபிட் (Discover Thanks Benefit) பக்கத்திற்கு சென்று, கீழ் ஸ்க்ரோல் செய்ய ‘என்ஜாய் யுவர் ரிவார்ட்ஸ் (Enjoy your rewards) செக்ஷனின் நெட்பிளிக்ஸ் என்கிற விருப்பத்தை கண்டறியவும்.

- இப்போது நெட்பிளிக்ஸ் ப்ராடெக்ட் டிஸ்க்ரிப்ஷன் பக்கத்தில் 'க்ளைம்' (Claim) என்பதை கிளிக் செய்து, அதை தொடர்ந்து 'ப்ரொசீட் (Proceed) என்பதை கிளிக் செய்யவும். இப்போது ஆக்டிவேஷனை முடிக்க வாடிக்கையாளர் நெட்பிளிக்ஸ் இணையதளத்திற்கு திருப்பி விடப்படுவார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Airtel, Netflix

அடுத்த செய்தி