• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • புதுப்படங்கள் பார்க்க Amazon Prime-க்கான இலவச சந்தாவை பெறுவது எப்படி? சிம்பிள் வழிகள் இதோ!

புதுப்படங்கள் பார்க்க Amazon Prime-க்கான இலவச சந்தாவை பெறுவது எப்படி? சிம்பிள் வழிகள் இதோ!

நீங்கள் அமேசான் பிரைம் சந்தாவை பெற வேண்டும் என்றால் 3 மாதத்திற்கு ரூ. 329 அல்லது ஒரு வருடத்திற்கு ரூ. 999 செலுத்த வேண்டியிருக்கும்.

  • Share this:
அமேசான் அதன் பிரைம் மெம்பர்ஷிப்புடன் பல நன்மைகளை வழங்குகிறது. அதில், பிரைம் வீடியோ வழியாக திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான அணுகல், 70 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களின் விளம்பரமில்லாத ஸ்ட்ரீமிங் மற்றும் அவற்றின் இலவச ஆஃப்லைன் பதிவிறக்கத்திற்கான ஆதரவு, அதேபோல ஈ-காமர்ஸ் தளத்தில் இயங்கும் பிரத்யேக ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளில் பங்கேற்கும் திறன் ஆகியவை இதில் அடங்கும். இதுதவிர, நீங்கள் பிரைம் மெம்பர்ஷிப் பெற்றவுடன் பிரைம் டே விற்பனையிலும் பங்கேற்கலாம். வழக்கமாக, நீங்கள் அமேசான் பிரைம் சந்தாவை பெற வேண்டும் என்றால் 3 மாதத்திற்கு ரூ. 329 அல்லது ஒரு வருடத்திற்கு ரூ. 999 செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாகப் பெற சில வழிகளும் இருக்கிறது.

இலவச அமேசான் பிரைம் சந்தாவை எவ்வாறு பெறுவது?

அமேசான் முன்னதாக அதன் பிரைம் சந்தாவின் சோதனை பதிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. அதாவது அதன் மெம்பர்ஷிப்களுக்கு பணம் செலுத்துவதற்கு முன்பே ஒரு மாதத்திற்கு அதன் சேவையை முயற்சிக்க வாடிக்கையாளர்களை அனுமதித்தது. பின்னர் அமேசான் பிரைம் இந்தியாவில் பிரபலமடைந்த பிறகு அந்த சோதனை திட்டத்தை நிறுத்தியது. எனவே, தற்போது அமேசான் பிரைம் சந்தாவை பெற வேண்டுமானால் வாடிக்கையாளர்கள் அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டும். இருப்பினும், ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ உள்ளிட்ட ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச அமேசான் பிரைம் சந்தாவை வழங்கும் வகையில் சில திட்டங்களை வைத்துள்ளனர். அவை என்ன என்பதை விரிவாக காண்போம்.



இலவச அமேசான் பிரைம் சந்தாவை வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்:

ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச அமேசான் பிரைம் சந்தாவை ரூ.131 மற்றும் ரூ. 349 ரீசார்ஜ் திட்டங்களுடன் வழங்குகின்றன. இருப்பினும், மெம்பர்ஷிப் ஒரு மாதத்திற்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும். அதுவே ஏர்டெல்லின் ரூ. 499, ரூ. 999, மற்றும் ரூ. 1,599 போஸ்ட்பெய்ட் திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா கிடைக்கும். ரூ. 999 மற்றும் ரூ. 1,599 ஆகிய இரண்டு ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களும், உங்கள் குடும்ப உறுப்பினர்களில் இருவரை உங்கள் திட்டத்தில் இலவசமாக சேர்க்க அனுமதிக்கும் add-on விருப்பத்துடன் வருகின்றன. மேலும், மேற்கண்ட மூன்று ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி பண்டில் கிடைக்கிறது.

Must Read | பிடித்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமா? ஒரு சிம்பிள் வழி..

இலவச அமேசான் பிரைம் சந்தாவை வழங்கும் ஜியோ திட்டங்கள்:

ஏர்டெலைப் போலவே, ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ. 399, ரூ. 599, ரூ. 799, ரூ. 999 மற்றும் ரூ. 1,499 போஸ்ட்பெய்ட் திட்டங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு அடிப்படையில் இலவச அமேசான் பிரைம் சந்தாவை வழங்குகிறது. ஏர்டெல்-ஐ விட இன்னும் சிறந்த ஒப்பந்தத்தை வழங்க ஜியோ மேற்கண்ட ஐந்து போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிக்ஸ் சந்தாக்களையும் வழங்குகிறது.

அதேபோல ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கும் இலவச பிரைம் சந்தா கிடைக்கிறது. அதற்கு வாடிக்கையாளர்கள் ரூ. 999, ரூ. 1,499, ரூ. 2,499, ரூ. 3,999, மற்றும் ரூ. 8,499 ஆகிய ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் திட்டங்களை பெற்றிருக்க வேண்டும். ரூ. 5,994 முதல் ஆரம்பமாகும் 6 மாதம் மற்றும் வருடாந்திர போஸ்ட்பெய்ட் திட்டங்களை வைத்திருக்கும் ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு இலவச அமேசான் பிரைம் சந்தாவை பெறமுடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலவச அமேசான் பிரைம் சந்தாவை வழங்கும் Vi திட்டங்கள்:

Vi அதன் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 499, ரூ. 699, மற்றும் ரூ. 1,099 போஸ்ட்பெய்ட் துட்டங்கள் மூலம் இலவச சந்தாவை அளிக்கிறது. இந்த அனைத்து Vi திட்டங்களும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா மற்றும் ரூ. 1,099 Vi திட்டத்தில் கூடுதலாக நெட்ஃபிக்ஸ் அணுகலை கிடைக்கும். தொடர்புடைய திட்டத்தைப் பெற்றதும், மொபைல் பயன்பாட்டின் மூலம் அமேசான் பிரைம் உங்கள் எண்ணில் செயல்படுத்தப்பட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: