ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ்அப்-உடன் மல்லுகட்டும் டெலிகிராம் நிறுவனர் : வாட்ஸ்அப் பாதுகாப்பற்றது என்று விமர்சனம்..!

வாட்ஸ்அப்-உடன் மல்லுகட்டும் டெலிகிராம் நிறுவனர் : வாட்ஸ்அப் பாதுகாப்பற்றது என்று விமர்சனம்..!

டெலிகிராம், வாட்ஸ்அப்

டெலிகிராம், வாட்ஸ்அப்

Being the founder of Telegram to take their app to the masses | டெலிகிராம் நிறுவனராக இருப்பதால் தங்களுடைய செயலியை மக்களிடம் எடுத்து செல்வதற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ இதனை சொல்லவில்லை எனவும், வாட்ஸ்அப்பில் 700 மில்லியன் யூசர்கள் இப்பொழுதும் அதனை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  வாட்ஸ்அப்பின் தொழில் முறை போட்டியாளராக கருதப்படும் டெலிகிராம், வாட்ஸ்அப்பை விட பல அதிக வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது. இருந்தாலும் இன்றும் வாட்ஸ்அப்பிற்கு அடுத்த இடத்தில் தான் இருந்து வருகிறது.

  இதுபற்றி பேசிய டெலிகிராமின் நிறுவனர் பாவெல் துரோவ், “டெலிகிராமுடன் ஒப்பிடுகையில் வாட்ஸ்அப் அதன் பாதுகாப்பு விஷயங்களில் எப்போதும் குறைபாடு உள்ளதாகவே இருந்து வருகிறது. வாட்ஸ்அப்பில் ஹேக்கர்கள் எளிதாக ஊடுருவி உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தகவல்களையும் திருட முடியும்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

  சென்ற வாரம் வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு அம்சங்களில் ஏற்பட்ட குறைபாடு உலகளவில் பெரிதாக பேசப்பட்டது. இதனை முன்னெடுத்த டெலிகிராமின் நிறுவனர் துரோ வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு அம்சங்களை பற்றி கேள்வி எழுப்புவது மட்டுமல்லாமல் கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்.

  வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு எந்த அளவு குறையுடையதாக உள்ளது எனில், ஒரு ஹேக்கர் விரும்பினால் ஒரு செய்தியையோ அல்லது வீடியோவையோ உங்களது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி அதனை நீங்கள் ஓபன் செய்யும்போது எளிதாக வைரஸ்களை உங்கள் மொபைலில் செலுத்தி விட முடியும். அதன் மூலம் உங்களது மொத்த தகவல்களையும் ஹேக்கர்கள் யாருக்கும் தெரியாமலேயே எடுத்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

  ஒரு வகையில் இது உண்மைதான். ஏனெனில் சமீபத்தில் தான் வாட்ஸ்அப்பில் உள்ள இந்த பாதுகாப்பு குறைபாட்டை அந்நிறுவனம் சரி செய்தது. இதனையும் முன்னெடுத்து பேசியுள்ள டெலிகிராம் நிறுவனர் 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய காலங்களில் வாட்ஸ்அப் எப்படி எல்லாம் தனது பாதுகாப்பு அம்சங்களை சரி செய்துள்ளது என்பதை மேற்கோள் காட்டியுள்ளார்.

  இதன் மூலம் வாட்ஸ்அப் எப்பொழுதும் முழுமையான பாதுகாப்பு உடைய ஒரு செயலியாக இருந்ததே இல்லை எனவும், அப்படி பாதுகாப்பு நிறைந்திருந்தால் எதற்கு இத்தனை முறை அவர்கள் தங்களது பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.

  மேலும் இதுபோன்ற காரணங்களுக்காகவே தான் தன்னுடைய மொபைலில் இருந்து வாட்ஸ்அப் செய்தியை சில வருடங்களுக்கு முன்னதாகவே அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

  மேலும் தான் டெலிகிராம் நிறுவனராக இருப்பதால் தங்களுடைய செயலியை மக்களிடம் எடுத்து செல்வதற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ இதனை சொல்லவில்லை எனவும், வாட்ஸ்அப்பில் 700 மில்லியன் யூசர்கள் இப்பொழுதும் அதனை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதனை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய காலங்களிலும் துரோவ் பல முறை வாட்ஸ்அப்பை விமர்சனம் செய்துள்ளார்.

  உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான யூசர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலில் ஏகப்பட்ட குறைபாடுகள் பலமுறை கண்டறியப்பட்டு அதனை நம்பி இன்ஸ்டால் செய்த பல மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை தாரை வார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Read More: கைக்குள் ஒரு நண்பன்.. சொன்னதெல்லாம் கேட்கும்! அசத்தல் அம்சங்களுடன் கூகுள் அசிஸ்டெண்ட்!

  மேலும் அதுபோன்ற சமயங்களில் வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக டெலிகிராம் செயலியை தான் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தற்பொழுது சிக்னல் என்று புதிய செயலையும் அவர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஆனால் உண்மையில் இத்தனை குறைபாடுகளும், விமர்சனங்களும் இருந்தாலும் இந்த இரண்டு செயலிகளை விட பல அடிகள் முன்னிலையில் தான் வாட்ஸ்அப் இருக்கிறது. இத்தனை விமர்சனங்களையும் தாண்டி பல கோடி மக்கள் இன்றும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதையே விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Telegram, WhatsApp