Home /News /technology /

கொலம்பியாவில் 5G iPhone மற்றும் iPadகளை விற்க மற்றும் இறக்குமதி செய்ய தடை - ஏன் தெரியுமா.?

கொலம்பியாவில் 5G iPhone மற்றும் iPadகளை விற்க மற்றும் இறக்குமதி செய்ய தடை - ஏன் தெரியுமா.?

iPhone 13

iPhone 13

5G iPhone 13 | 5G காப்புரிமை மீறல் காரணமாக கொலம்பியாவில் 5G ஐபோன்கள் மற்றும் iPadகள் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு 2ஜி, 3ஜி, 4ஜி என்ற வரிசையில் தற்போது 5ஜி நெட்வொர்க்குகளின் பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் 5ஜி சேவை மக்களுக்கு முழுவதுமாக கிடைக்கும் போது குறைந்த கட்டணத்தில் நெட்வொர்க் சேவை , தரமான பேண்ட் வித் மற்றும் வேகமாக நெட்வொர்க் வசதியை நாம் பெறமுடியும். இந்நிலையில் தற்போது இதற்கானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் 5ஜி டவர் என்கிற பெயரில் போலியான டவர்களை ஊன்றுவதாக பல்வேறு புகார்கள் இந்தியாவில் எழுந்துவருகிறது.

இந்த சூழலில் தான், ஐபோன்களில் பயன்படுத்தப்படும் 5ஜி சில்லுகள் தொடர்பான காப்புரிமையை ஆப்பிள் மீறியதாக Ericsson குற்றசாட்டை முன்வைத்தது. இதனையடுத்து காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு ஆப்பிள் நிறுவனம் ராயல்டி கட்டணத்தை செலுத்தியது. ஆனால் இதற்கான உரிமம் காலாவதியான நிலையில் அதன் உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறியது.

இதனையடுத்து விதிமுறைகளை மீறியதாக கடந்தாண்டு வழக்குத்தொடரப்பட்டது. இதனையடுத்து Apple and Ericsson ஆகிய இரண்டு நிறுவனங்களும் 5ஜி காப்புரிமையை எதிர்த்துப்போராடிய நிலையில், ஆப்பிள் விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இதனையடுத்து இவ்வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அதிரடி உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.



இதன்படி, காப்புரிமை NC2019/0003681 இன் 13 ஐ ஆப்பிள் 5G வன்பொருள் மீறுவதாக அறிவித்ததோடு, காப்புரிமையை மீறும் எந்தவொரு தயாரிப்புகளையும் இறக்குமதி செய்யவோ?, விற்கவோ?, விளம்பரப்படுத்தவோ? அல்லது வணிகமயமாக்கவோ? கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில், இனி கொலம்பியாவில் 5G பொருத்தப்பட்ட iPhone அல்லது iPad களை விற்பனை மற்றும் இறக்குமதி செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இந்தியாவில் Xiaomi புதிய மாடல் தயாரிப்புகள் வெளியானது.!

மேலும் வன்பொருளை இறக்குமதி செய்வதைத் தடுக்க, கொலம்பியாவின் சுங்க அதிகாரம், Direccion de Impuestos y Aduanas Nacionales க்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து இது போன்ற காப்புரிமையை மீறும் செயல்கள் நடைபெற்றால் கொலம்பியாவை தொடர்ந்து பிற நாடுகளிலும் தடை விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

Also Read : இந்த 8 ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யுங்கள்.!

பொதுவாக பிற பிராண்ட்களை விட ஐபோன்களின் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரத்தில் விற்பனைக்கு வருவதால் இதனை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 5ஜிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பதற்கு முன்னால், அதற்கானக் காப்புரிமையை முறையாக முதலில் ஆப்பிள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: 5G technology, Apple ipad, Apple iphone, Colombia, Technology

அடுத்த செய்தி